இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு புரட்சிகர கட்சி சமூகத்தின் தலையாக இருக்கப்போகிறதா வாலாக அசையப்போகிறதா..!

படம்
  ஒரு புரட்சிகர கட்சி சமூகத்தின் தலையாக இருக்கப்போகிறதா வாலாக அசையப்போகிறதா..! பெண் பற்றியும் அவள் உடல் பற்றியும் சமூகம் கொண்டிருக்கின்ற பார்வை என்பது அவள் மீதான வன்முறை சுரண்டல் பாலியல் பலாத்காரம் என்பவற்றை ஏதோ ஒரு வகையில் மூடி மறைக்க நீதியைப் பெற்றுத்தருவதில் பின் நிற்க ஏதுவாக இருக்கிறது. இந்த சமூகம் கொண்டிருக்கின்ற இத்தகைய இரட்டை நிலையைத்தான் பெண்கள் மீதான எல்லாவகையான சுரண்டல் மற்றும் வன்முறைகளைச் செய்பவர்கள் பயன் படுத்திக் கொள்கின்றனர். உண்மையாக சமூக விடுதலை- வர்க்க விடுதலையை மனதில் நிறுத்திப் போராடுகின்ற ஒவ்வொருவருக்கும் 'பெண்களின் சமூக நிலை' என்ன என்பது பற்றிய அடிப்படை புரிதல் இருக்கும். இருக்கவும் வேண்டும்! இதனடிப்டையிலேயேதான் இத்தகைய இப்பிரச்சனைகளை சோசலிஸ்டுகளும் பெண்ணியவாதிகளும் கையாள்வர். கையாள்வதாக்க நீதியை விரும்புகிறவர்களும் நம்புவர். ஏன் என்றால் ஒடுக்கப்படுகிறவர் பக்கம் நிற்பதாக தெரியும் ஒரு சிறு ஒளி இடதுசாரிகள்தான். நிறுவனங்கள் கல்லூரிகள் வேலைத்தளங்கள் பொதுத் தளங்கள் என்று தாராள வாத சிந்தனைகளுக்கு உடபட்டு இயங்குகின்ற நிறுவனங்களில் பெண்ணுக்கு எதிராக நடக்கின