இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாலியல் தொழில் செய்வோருக்கான சட்ட பாதுகாப்பு - உச்ச நீதி மன்றம்..

படம்
பாலியல் தொழில் செய்வோருக்குச் சட்டத்தின் கீழ் சமமான மரியாதையும் பாதுகாப்பும் உண்டு. அவர்களது குழந்தைகளும் கண்ணியத்துடன் நடாத்தப்பட வேண்டும். என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறிப்பாகக் காவல் துறையினர் இவர்கள் மீது நடத்துகின்ற மோசமான மனிதநேயமற்ற விசானைகளை கடுமையாகக் கண்டிக்கும் படியாக இந்த தீர்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது. மே 19 வெளியாகியிருக்கும் இத்தீர்ப்பு தன் விருப்பத்தின் பேரில் இத் தொழிலில் ஈடு படுபவர்கள் குற்றவாளிகள் அல்ல. மேலும் இதில் ஈடுபடுபவர்கள் பாலியல் புகார் மற்றும் வன்முறை தொடர்பாகத் தெரிவிக்கும் நிலையில் சக பெண்களுக்குப் போன்றே குற்றச்சாட்டை அணுக வேண்டும் போன்ற மிகப் பலமான அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த உச்ச நீதிமன்ற அரிப்பைத் தொடர்ந்து சிலர் பொதுத் தளங்களில் அவர்களின் ''புனித முற்போக்கு மன நிலையை'' வெளிப்படுத்துவதையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இதுதான் தொழில் இது தொழலில்லை என்பதும் 'உயர்ந்த தொழில் இது தாழ்ந்த தொழில்' என்று முடிவெடுக்கும் மன நிலையை ஒத்ததாகவே எனக்கு தோனுகிறது. ஒரு சமூகத்தின் ஏற்றத்தாழ்வில் சவுகரியங்களை அனுபவிக்

குழந்தைகளின் பால் உறுப்புகள் மீது நிகழும் வன்முறைகள்

படம்
  பாலியல் இன்பத்தில் பெண் ஆணைவிட பல மடங்குகள் இயற்கையின்பால் ஆசிர்வதிக்கப்பட்ட அதிசஸ்ட்ட சாலி. இது ஆண்கள் எல்லோரும் அறிந்த உண்மை ஒன்றுதான். விஞ்ஞான ஆய்வுகளும் அதை தெளிவாக விளக்கியும் உள்ளன. அய்வுகள் அடிப்படையில் எழுதப்பட்ட பாலியல் கல்வி புத்தகங்களும் அதையே சொல்கின்றன. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குள் தோன்றிய மதங்கள் காலங்காலமாக அவற்றை பொய் என்று சொல்கின்றன. ஆண்தான் பாலியல் இன்பத்துக்கான கடவுளின் படைப்பு என்று அடித்துச்சொல்கிறது. பெண் என்பவள் ஆணுக்கான பாலியல் தேவைக்காகவும் இன்பத்துக்காகவும் படைக்கப்பட்டவள் என்பதை நேரடியாகவும் மறைமுகமாவும் கடவுளின் கட்டளையாவும் பெண்களையும் சேர்த்தே நம்பவைக்கிறது. மதங்களின் படைப்பாளிகளும் காவலர்களும் ஆண்கள்தான் என்பதால் இது அவர்களுடைய சொந்த இருப்புக்காகவும் சவுகரிக நலனுக்காகவும் தேவைப்பட்ட ஒன்றாய் இருந்தது. அவரவர் சார்ந்த வர்க்கங்களின் செல்வாக்குடன் மதங்களின் கூட்டு முயற்சிகளின் ஒன்றாகதான் பெண்களின் ஒடுக்கு முறையை சாதித்தன. பெண்களுடைய பாலியல் விடயத்தில் ஆண்கள் கடுமையாக நடந்து கொண்டமைக்கு காரணம் அடுத்த சந்ததியை பிறப்பிக்கும், உருவாக்கும் வல்லமை கொண்டவள