இடுகைகள்

நவம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிற்போக்குத்தனங்களும் - தப்பெண்ணங்களும் : ஒரு அலசல்!!

படம்
நில உடைமை சிந்தனைகள்; பிற்போக்குத்தனத்தைப் பீற்றுவது’ - தப்பெண்ணங்களை(prejudice) என்றால் என்ன? (இது தொடர்பில் முன்தினமும் எழுதியிருக்கிறேன்). திரும்பவும் எழுதத் தூண்டியிருக்கிறது அண்மையில் நடந்த நடக்கின்ற சம்பவங்களால். வரலாற்றுப் பொருள்முதல் இயக்கவியல் பொருள்முதல்வாத சமூக அறிவியலின் படிநிலை படி பார்த்தால், நில உடைமையான கூறுகள், சிந்தனைகள், செயற்பாடுகள் பிற்போக்கானதாகவும், சக மனிதர்களை ஒடுக்கப் பயன்படும் போது அது மோசமாக எதிர்க்கப் பட வேண்டிய அடக்குமுறையாகவும் கருதப்படுகிறது. பிற்போக்குத்தனங்களை அல்லது பகுத்தறிவுக்குப் பொருந்தாத விடயங்களை தூக்கிப் பிடிக்கின்ற சமூக அரசியல் நிலைகளும் உள. அதை வேறு விதமாகவே அணுக வேண்டியும் உள்ளது. இப்போது நடந்து கொண்டிருக்கிற விடயம் ஒன்றுக்கு வருவோம். உலக கிண்ணத்தின் மீது அவுஸ்திரேலிய விளையாட்டு போட்டியாளர் காலை தூக்கிப் போட்டுக் கொண்டு இருக்கின்ற படம் அது. இது ஏன் எம் சமூகத்தில் இருப்பவர்களால் ஒரு வகையான பாராட்டைப் பெறுகிறது என்று கூர்ந்து பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அப்படி பார்க்க முடியாதவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியும் போது அதிர்ச்சி