கவிதை வனைந்த உலகு
கடந்த 14 மே மாதம் சனிக்கிழமை அன்று மலை நடை பெற்ற ' 'கவிதை வனைந்த உலகு நிகழ்வில்'' 5 கவிதை புத்தங்கள் இடம் பெற்றன: இறுதி அமர்வாக நடை பெற்ற விஜிதரனுடைய ''குருதி வழியும் பாடல்'' கவிதை நூலைத் தோழர் வேலு அவர்களும் நானும் அதற்கான ''விமர்சன- உரையைச்'' செய்தோம். அந்நிகழ்வில் நான் பேச எண்ணி எழுதியவற்றை முழுமையாகச் சொல்ல முடியவில்லை. குறித்த நேர எல்லைகள் அதற்குக் காரணங்களாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலான விடையங்களை தெட்டிருந்தேன் என்றே நம்புகிறேன். விமர்சனம் என்பது ஒரு படைப்பபை கூர்மைப்படுத்த உதவும். எழுதியவரின் அகத்தில் நின்று மட்டும் ஒரு வாசகரால் ஒரு படைப்பை படிக்க முடியாது. அதுவும் விமர்சன மனநிலை என்ற நிலை எமக்குள்ளால் கேள்விகளை எழுப்பி இன்னுமொரு பிரதியை கட்டமைக்கும். அதற்குள் நாம் வேண்டி நிற்பவை, எம்மால் செய்ய முடியாதவை, செய்ய கூடியவை எல்லாம் விமர்சனமாக வெளிவரும். அது குறித்த படைப்பில் இருக்கும் ஆழ்ந்த ஈடு பாடே அன்றி வெறுப்பல்ல. அதிலும் சமூக அறியல் தேடலுடையவர்களுக்கு விமர்சனமும் அதை நோக்காக கொண்டே இருக்கும். இரசனைக்கும் அறிவுக்கும் இலக்கி