கடவுள்களை வழிபடச் செய்யவைப்பது எமது வேலையல்ல...
மெய் அழகன் படத்தில், இப்படி ஒரு காட்சி வருகிறது. கார்த்திக்கின் வீட்டில் பெரியாரின் படமும் இருக்கிறது. அதை அரவிந்த் சாமி பார்க்கிறார். 'அவங்கள் எல்லாம் இங்கதான் இருப்பாங்க எங்கும் போக மாட்டாங்க' என்கிறார் கார்த்திக். பெரியாருக்குப் பக்கத்தில் இருக்கும் கடவுள் முருகன். அப்படியே கார்த்திக்கின் துணைவி (மன்னிக்கனும் மனைவி) பக்கம் கமரா திரும்புகிறது... குங்குமமும் தாலியும் சேலையுமாக ஒரு குடும்ப குத்துவிளக்கு 'டிபன் ஏதாவது செய்யட்டுமா அண்ணா' என்று கேட்கிறா.... பெரியார் என்னைப் பார்த்து பரிதாபமாக சிரித்தார். நான்- 'உனக்கு வந்த சோதனை' என்று பெரியாரைப் பார்த்து சொல்லிவிட்டு முழுப்படத்தையும் பார்த்து முடித்தேன். இந்து மதமும் அதன் பெருங்கதையாடல்களும் நம்முடைய மூதாதேயர்களின் சிறு தெய்வ வழிபாடுகளை அபகரித்துக் கொண்டது உண்மைதான். அதைப் பேசுவது என்பது, வரலாறறைப் பேசுவது. அது தேவையான ஒன்றுதான். அதற்காக முருகனை பெரியாரின் பக்கத்தில் காட்சிப்படுத்துவதின் நோக்கு என்ன? கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பெரியாரின் படத்தை வீட்டில் வைத்திருக்க கூடாதா என்று லாஜிக்கா கேள்வி கேட்பதற்கு முன...