சுயமரியாதை திருமணம் என்ற பெயரும்; பாலிய அயோக்கியனும்...
குறிப்பு: இந்த அறிக்கை 16.08.2021 அன்று முற்போக்கு வெளியை பெண்களுக்கு பாதுகாப்பாக மாற்றுவதற்காக செயற்படும் கூட்டமைப்பின் சார்பாக வெளியிடப் பட்டடு கையெழுத்திடப்பட்டது. அதை ஆவணப் படுத்தும் முகமாக இதில் மீள் பதியப்பட்டுகிறது. அதனுடைய முக நூல் இணைப்பு இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------- முற்போக்கு முகமூடிகளுடன் பெண்கள் மீது செய்யப்படும் சுரண்டல்களுக்கு எதிராக அணி திரள்வோம் தம்மை முற்போக்குவாதிகளாகவும் புரட்சிகரச் சக்திகளாகவும் வெளியுலகிற்குக் காட்டிக் கொள்ளும் சில போலிகளின் முகத்திரைகளைக் கிழித்து அம்பலப்படுத்துவது சமூக மாற்றத்தை நோக்கி உழைக்கும் அனைவரினதும் கடமையாகும். உருவில் மனிதனாகவும் செயலில் மிருகமாகவும் இருப்பதை மாற்றி மனித தன்மையுடைய மனிதத் சமுதாயத்தை உருவாக்குவதே எனது லட்சியம் என்றார் தந்தை பெரியார். தாம் வரிந்து கொண்டதாகச் சொல்லப்படும் இடதுசாரிய பெரியாரியக் கொள்கைகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு தாம் அணியும் மேற்சட்டைகளில் மாத்திரம் தம்மை