They say it is love. We say it is unwaged work
எனக்கு வலிக்கிறது என்றால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் என்று ஒவ்வொரு வீட்டிலும் ஊதியமற்று மாடாய் உழைத்துத் தேயும் பெண்ணும் இந்த முதலாளித்துவ சமூகத்தையும் அதன் வழி எந்த வித குற்ற உணர்வுகளும் இன்றி சௌகரியம் அனுபவிக்கும் ஆண்களையும் பாரத்துக் கேட்க வேண்டியுள்ளது. இந்த அடிப்படையில் இடது சாரிய பெண்ணிய ஆய்வாளர்கள் பலரின் கட்டுரைகளை எங்கள் வாராந்த வாசிப்புக்கும் உரையாடலுக்கும் எடுத்துக்கொண்டோம். அந்த வகையில் செல்வியா பெட்ரிக் எழுத்துக்கள் ஆய்வுகள் மிக முக்கியமாக இருந்தன. அது தொடர்பான வாசிப்பின்போது என்னளவிலும் எம் தோழர்கள் மட்டிலும் புதிய விடயங்களாகவும் தமிழில் நாங்கள் இது வரை வாசிக்காத அல்லது எங்களுக்குக் கிடைக்காத விடயங்களாகவும் இருந்தன. வீட்டின் வேலை அது கொண்டிருக்கின்ற சமூக நிலை போன்றன பற்றிய பெண்ணியப்பார்வையில் மிகக் காத்திரமாக உறுதியாக ஆய்வு தளத்தில் பேசுகின்றன. இத்தகைய உரையாடல்கள் தமிழில் இத்தனை ஆண்டுகள் கழித்தும் வர வில்லை அல்லது மட்டுப்படுத்தப்பட்ட தளத்தில் நிகழ்ந்திருக்கிறது என்பது இடது சாரிய பெண்ணிய வாதிகளான எமக்கு மிகவும் கவலை தரும் விடயமாகும். இது எம் சமூகத்தில் உள்ள முற்போக்கு இ