அரசியல் பிரதிகளும் அரசியல் நீக்கம் பெற்ற பிரதிகளும்
அண்மையில் திரள் என்ற குழுவினர் நடத்திய முதல் நிகழ்வு ஒன்றில் எடுத்துக்கொண்ட தலைப்பு 'தமிழ் இலக்கியத்தில் அரசியல் பிரதிகளும் அரசியல் நீக்கம் பெற்ற பிரதிகளும்' என்ற இணைய வழி கலந்துரையாடல் ஆகும். அதே போன்ற மற்றுமொரு நீண்ட கால பேசு பொருளாக இருக்கும் விடயம்தான் படடைப்பிலக்கியத்ததில் அழகியல் தொடர்பானதும். நமக்கும் இலக்கியத்துக்கும் சொட்டாகுமா ஆகாதா? நாம் எல்லாம் இலக்கியம் தெரிந்தவர்களா தெரியாதவர்களா? இலக்கிய அழகியலில் சிலிர்த்துக் கிடக்க இரசனைப் பெற்றவர்களா அற்றவர்களா? இலக்கியம் தெரியாது என்றாலும் தெரிந்தது போல் காட்டிக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா? அல்லது 'எமக்குத்தான்' தெரியும் என்று படம் காட்டுபவர்களை விட நமக்குக் கொஞ்சம் அதிகமாகத் தெரியுமா என்றெல்லாம் தெரியாமல்தான் தற்செயலாக அந்த இணைய வழி நிகழ்வில் பார்வையாளராகக் கலந்து கொள்ளவேண்டி வந்தது. அழகியல் தொடர்பான வாதங்கள் நீண்ட கால விவாதப் பொருள்தான். அது 'சுட்ட' பழம் 'சுடாத' பழம் (நாவல்) சர்ச்சை 'அழகியல்' சர்ச்சையாக மாறியுள்ள இன்றைய காலம் முதல் எண்பதுகளில் ஈழத்து இலக்கிய விமர்சனத்தில் அழகியல் பற்றிய சர்ச்