இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சந்தர்ப்பம்! சந்தர்ப்பம்!! பிழைப்பு பிழைப்பு வளர்ச்சி! வளர்ச்சி!!

படம்
  எம்முடைய நேர்மை, அறம், சமூக-அறிவு ஏற்படுத்திய அரசியல் புரிதல், தன்மானம், சூடு சொரணை, பகுத்தறிவு, சக மனித நேயம், போன்ற உணர்வு- பண்புகளில் நாம் சருக்கிடாமலும் விலகிடாமலும் இருப்பதற்கா வாழ்வதே வாழ்வு என்று வாழ்பவர்கள் நாம். பொய்-புரட்டு எவர் முதுகை சொறிந்தாலாவது எமக்கான இடத்தை உருவாக்கிக் கொள்வது, எவரையாவது குப்புறத் தள்ளி வீழ்ந்தவர் பிடரியில் ஏறி நின்று எம் நிலைகளை எட்டுவதற்கு முயல்வது, எவரையாவது காக்கா பிடித்து உண்மைக்குப் புறம்பாக நடந்து பிழைத்துக் கொள்வது என்பவை எமக்குச் சுட்டுப் போட்டாலும் வராது. அது போக எம்மை இத்தகைய பேர் வழிகள் என்று யாரும் எண்ணி விடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருப்போம். அதிகாரத்துக்கு சொறிந்து பிறரை வீழ்தி எமது வளர்ச்சி இருந்து விடக் கூடாது என்பத்திலும் எம் மன நிம்மதியும் எம் ஒட்டு மொத்த வாழ்வின் பொருள் இருப்பதாக வாழ்பவர்கள்- அப்படி வளர்க்கப்பட்டவர்களும் கூட.. அதுவல்லாமல் யாராவது எம்மை கருதி விடும் சந்தர்ப்பத்தில் மேற் சொன்ன அத்தனையும் சுயம் கொண்டெழுந்து கோபப்படும். இல்லையே, நாம் அப்படி இல்லையே! என்று உடல் பொருள் 'ஆவி..' எல்லாம் கொதிக்கும். எம்