அடையாள அரசியல்( Identity Politics)..
அடையாள அரசியல் ---------------------------- சம காலத்திலும் இடது சாரிகளுக்குள் பேசு பொருளாக இருப்பது அடையாள அரசியல் குறித்தானா வாதங்களாகும். இருந்தபோதிலும் அடையாள அரசியல் என்றால் என்ன என்று சரியான வரையறைகளைச் செய்ய முடியாமல் உள்ள அதே நேரம் அரசியல் தளத்திலும் அது தொடர்பான புரிதலில் போட்டி நிலையே உள்ளது. அறுபதுகளில் பேசப்பட்டு வந்த அடையாள அரசியல் பொருளிலிருந்து, அரசியலும் அதன் புரிதலும் அதனுடைய பண்பாடுகளும் இன்றைய கால கட்டத்தில் மாற்றம் பெற்றுள்ளது. அதே நேரம் மறு பக்கத்தில் அடையாள அரசியல் என்பது சாராம்ச வாதம் பேசுகிறது என்றும் குறிப்பாக விடயங்களையும் குறிப்பிட்ட கலாச்சார நிர்ணய வாதத்தையும் பேசுகிறது என்றும் சொல்லப்பட்டது. அதாவது ஒவ்வொரு அடையாளங்களுக்கும் அடிப்படைப் பண்புகள் உள்ளன என்கிறது. இந்த அடையாளப்படுத்தலானது வேறுபாடுகளைப் பற்றி அதிகம் உள்நோக்கி யோசிப்பதால் சமூகத்தில் இருக்கின்ற அதிகார கட்டமைப்பை அமைப்புள்ளுள் கொண்டுவந்து அங்கத்தவர்களைப் பிரிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ஒருவருடைய அனுபவத்தை மறுப்பது என்பதை ஒரு புரட்சிகர கட்சி எப்படி எடுத்துக் கொள்கிறது என்பது, இந்த இடத்தில் முக்க