இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை சமூக நீதிக் கோரிக்கை.

படம்
  சீமான் வாக்கரசியலில் கொடுத்த பெண்களுக்கான இடம் என்பது. முக்கியமான ஒரு கட்சியின் கொள்கை திட்டம். இந்த கொள்கையையும் காரணமாகக் காட்டி இன்று எதிர்ப்பவர்கள் மிகச் சொற்ப காலத்துக்கு முன் சீமானின் த.தேசிய கொள்கை இரசிகர்கள்தாம். இன்று சீமான் பெண்களை அரசியல் பங்கு பற்ற வைத்ததும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கருப்பு பூச்சையும் சிவப்பு பேச்சையும் தாண்டி இனவாதத்தைத் தோற்கடித்த செக்ஸிசம் அது! இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை என்பது நூற்றாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்டுப், புறக்கணிக்கப்பட்டு, மறுக்கப்பட்டு வந்த, வந்து கொண்டிருக்கின்ற சமூக சனநாயக உரிமையைக் கிடைச் செய்கின்ற சமூக நீதிக் கோரிக்கை. சிலருக்கு மூளையைக் கொஞ்சம் கசக்கிச் சிந்திக்கச் சிக்கல்கள் இருக்கிறது என்பது புரிகிறது. ஆனால் அதை வைத்து அரசியலில் அடித்துப்பேசும் ஆபத்தை அங்கீகரிக்க முடியாது. சமூகத்தில் சரிபாதியையும் விட அதிகளவிலான பெண்களின் அரசியல் வகிபாகம் என்பது மிகக் குறைவு. அரசியல் பங்குபற்றுவது என்பது ஓட்டுரிமையை மட்டும் குறிப்பதன்று. பெண்களுக்கு எதிரான சட்டங்களில் முடிவெடுக்கும் நடவடிக்கைகள், அரசியல் செயல்பாடுகள், அரசியல் விழிப்புணர்வு

சித்தார்த்தனின் வினோத சம்பவங்கள்

படம்
சித்தார்த்தனின் வினோத சம்பவங்கள் . . TU சேனன் அவர்கள் எழுதி, ஏப்ரல் 2020 வெளிவந்த இந்த நாவல். பெயருக்கு ஏற்றால் போல் வினோத சர்ச்சைகளிலும் சிக்கியது. இது இவருடைய இரண்டாவது நாவல்.   நாவல், இலக்கியம் என்று அதிக ஈடுபாடு காட்டாத இடதுசாரி அரசியல் தொடர்பான வாசிப்பு, செயற்பாடுகளிலும் ஈடுபாடுடைய என் போன்றவர்களுக்கு அவருடைய லண்டன்காரன் இஞ்சி தேனீருக்கு அளவாக சேர்த்த சீனிபோல் பருக இதமாக அன்று இருந்தது.   அரசியல் சமூக விஞ்ஞான மொழி என்பவை நேரடியானவை. அவை பிரச்சனையை விபரிக்கும் போதும் தீர்வை சொல்லும் போதும் அது கொண்டிருக்கின்ற தன்மை வெளிப்படையாகவும், நேரடியாகவும் இருப்பவை. இலக்கிய மொழி இதிலிருந்து மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்று பழக்கப்பட்டவர்கள் நாம். அதாவது சப்பிச் சப்பித் துப்புவதை அழகியல் என்று கொண்டாட சொல்வதாக இருக்கிறது.  என் போன்றவர்களுக்கு அரசியல் நாவலில் குறைந்தது இரண்டும் ஒரளவு சமவளவாக இருந்தால்தான் படிக்க முடியும் என்று நினைக்கிறேன். என் வாசிப்பு இரசனைக்கும் பொறுமைக்கும் பொறுத்தளவில் சித்தார்த்தனின் வினோத சம்பவங்கள் இந்த சமளவை கொண்டிருப்பபதாகவே தோன்றுகிறது. இப்புத்தகத்தைப் பற்றி எழு