இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேடல் உள்ள வரை வாழ்வில் பொருளிருக்கும்...

படம்
  நம்மவர்களின் திமிர் குணம் என்பது அறியாமையிலும் நான்தான் முதலானவராக இருப்பேன் என்பதைத் தாம் அறியாமலே காட்டி விடப் படாத பாடு படுவதுதான். ஒரு விடயத்தில் நாம் பெற்றிருக்கின்ற அறிவு என்பது குறைவானதாக இருக்கலாம் அது தரம் குறைவானது ஒன்றுமில்லை. ஆனால் அந்த விடயமே நாம் அறிந்தளவானதுதான் என்பதுதான் ஆபத்தானது. அவ்விடயம் தொடர்பான நீண்ட வாசிப்பும் தேடலும் உரையாடலும் கொண்டவர்களும் நம் மத்தியில் இருப்பார்கள் என்பதை நாம் உணர வேண்டும். அது அறிவை வளர்ப்பதற்கானப் பண்புகளில் மிக முக்கியமானது. அப்படியல்லாமல் நாமறிந்தவைதான் எல்லாம் என்று நிரூபிக்க மாற்றி மாற்றி நகர்தலின்றி விவாதிப்போமானால் எம்மை நாமே அது தொடர்பாக அம்பலப்படுத்துவதும் முதல் நிகழ்வாகிப் போகும். நமக்குள் இருக்கின்ற பலவகையான மேட்டிமைகள் (ஆண், சாதிய, படிப்பு,அந்தஸ்து, பிரதேச,மைய, வர்க்க,இன) தனங்கள் நம்மத்தியில் நம்மை விடவும் அறிதல் பெற்றவர்கள் இருப்பார் என்பதை ஒத்துக் கொள்ள இடம் கொடுப்பதில்லை. மிகச் சாதாரண உழைக்கும் விளிம்பு நிலை மக்களிடம் அறிவு சார்ந்த சமூக மாற்றம் சார்ந்த பிரச்சாரங்களை இலகுவாகச் செய்துவிட முடியும் அளவு மேற் சொன்ன தடிப்பு கொ