வெந்து தணிந்தது காடு- மதி சுதா
ம தி சுதாவுடைய வெந்து தணிந்து காடு 27/06/2023 அன்று லண்டனில் திரையிடப்பட்டது. நாளை 09/07/2023 மீண்டும் திரையிடப்பவிருக்கிறது. திரைத்துறை தொடர்பில் எனக்கிருந்த இயல்பான ஆர்வம் ஒரு பக்கமிருந்த போதும் படம் தொடர்பில் ஏற்பட்டிருந்திருந்த சர்ச்சை மற்றும் சில சோசியல் ஊடகங்களில் இப்படம் தொடர்பில் பேசப்பட்ட ஆச்சரியப்படத் தக்க கருத்துக்கள் படத்தைப் பார்த்தாக வேண்டும் என்று தூண்டியது. மதிசுதாவுடைய சில குறும்படங்களைப் பார்த்து அவருடன் கருத்து பரிமாறிக் கொண்ட நட்பு போன்றன நானிருக்கும் இடத்திலிருந்து மிகத் தொலைவில் இப்படம் திரையிடப் பட்ட போதும் பார்த்தே ஆக வேண்டும் என்று சென்று பார்த்தேன். இங்குத் திரைப்படத்தைத் திரையிட்டவர்கள் அதற்கான திட்டமிடல்களை முன் கூட்டியே ஏற்பாடு செய்யாமை படத்தை ஆர்வத்துடன் பார்க்கச் சென்றவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் படம் பேசப்பட வேண்டிய விரிந்த தளத்தையும் அது மட்டுப்படுத்தியிருக்கக் கூடும். படத்திற்குள் வருகிறேன். படம் பார்க்கத் தொடங்கும் ஒரு விநாடிக்கு முன் கூட, நான் எண்ணியிருக்க வில்லை படம் தொடர்பில் கருத்து பகிர்வேன் என்று. படம் ஆரம்ப காட்சியிலே