ஒருவரது தனிப்பட்ட அனுபவம்; சமூக கட்டமைப்பிற்குள்ளானாலும் அதன் சமத்துவ இன்மையாலும் விளைந்தவை- அவை அரசியலே!!
அமைப்பு என்பது கடந்த காலத்தினதும் வருங்காலத்தினதும் பொறுப்புணர்வு மிக்கதாக இருக்க வேண்டும் என்கிறார்- கிராம்சி. இத்தகைய பொறுப்புணர்வைத்தான் அமைப்புகளின் தலைம(வழிகாட்டல்) கொண்டிருக்க வேண்டும், அன்றி அயோக்கியத்தனங்களை பாதுகாப்பதல்ல என்கிறார் அவர். ஒரு புரட்சிகர அமைப்பினது- கட்சியினது வளர்ச்சி என்பது தொடர்ச்சியாக நடைபெறுகின்ற ஒன்று. அதன்போதுதான், அமைப்பினது கடமைகள் விரிவடைக் கூடும். அதனடிப்படையில் ஒடுக்கப்பட்ட அதிகாரமற்று இருக்கும் பிரிவினருக்கான அமைப்பாக இயங்க முடியும். அல்லாமல் அமைப்பிற்குள் அதிகாரம் படைத்தவர்களின் குழு வாத நலன்களுக்கு வலு சேர்ப்பதாகிவிடும். புரட்சிகர சொற் தொரடர்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் உறுப்பினர்களை மட்டும் உள்ளிணைத்துக் கொள்ளும் அமைப்பினருக்கு மேற்படி அக்கறை தேவையற்றாதக இருக்கும். பெயர்ப் பலகையில் 'போராட்ட அமைப்புகள்' என்று எழுதி வைத்து விட்டு சனநாயகமற்ற, பேச்சு கருத்து சுதந்திரத்தை மறுக்கின்ற மதவாத நம்பிக்கை கொண்ட சபைகள் போல் நடந்து கொள்ள மேற்படி அங்கத்தினர் போதுமாகவர்கள். அவர்களுக்கு அமைப்பின் பாசிச கூறுகளையும், அமைப்பு என்பது தேவலயம் போன்ற புன...