தேடல் உள்ள வரை வாழ்வில் பொருளிருக்கும்...
நம்மவர்களின் திமிர் குணம் என்பது அறியாமையிலும் நான்தான் முதலானவராக இருப்பேன் என்பதைத் தாம் அறியாமலே காட்டி விடப் படாத பாடு படுவதுதான்.
ஒரு விடயத்தில் நாம் பெற்றிருக்கின்ற அறிவு என்பது குறைவானதாக இருக்கலாம் அது தரம் குறைவானது ஒன்றுமில்லை. ஆனால் அந்த விடயமே நாம் அறிந்தளவானதுதான் என்பதுதான் ஆபத்தானது. அவ்விடயம் தொடர்பான நீண்ட வாசிப்பும் தேடலும் உரையாடலும் கொண்டவர்களும் நம் மத்தியில் இருப்பார்கள் என்பதை நாம் உணர வேண்டும். அது அறிவை வளர்ப்பதற்கானப் பண்புகளில் மிக முக்கியமானது. அப்படியல்லாமல் நாமறிந்தவைதான் எல்லாம் என்று நிரூபிக்க மாற்றி மாற்றி நகர்தலின்றி விவாதிப்போமானால் எம்மை நாமே அது தொடர்பாக அம்பலப்படுத்துவதும் முதல் நிகழ்வாகிப் போகும்.
நமக்குள் இருக்கின்ற பலவகையான மேட்டிமைகள் (ஆண், சாதிய, படிப்பு,அந்தஸ்து, பிரதேச,மைய, வர்க்க,இன) தனங்கள் நம்மத்தியில் நம்மை விடவும் அறிதல் பெற்றவர்கள் இருப்பார் என்பதை ஒத்துக் கொள்ள இடம் கொடுப்பதில்லை. மிகச் சாதாரண உழைக்கும் விளிம்பு நிலை மக்களிடம் அறிவு சார்ந்த சமூக மாற்றம் சார்ந்த பிரச்சாரங்களை இலகுவாகச் செய்துவிட முடியும் அளவு மேற் சொன்ன தடிப்பு கொண்டவர்களிடம் சாத்தியமில்லை. 'நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது' என்ற தோரணை அவர்களின் பேச்சுத் தொனியில் வெளிப்படுமே அல்லாமல் அதைக் கேட்டு பதில் சொல்ல வேண்டும் என்ற தேடலுக்கான அடிப்படை இருப்பதில்லை. இத்தகை போக்கை ஆண்கள் மத்தியில் பேசும் பெண்கள் அதிகம் எதிர் நோக்கியிருப்பர். ஆனால் இவை மேற் சொன்ன தடிப்பு கொண்ட ஒரு சில பெண்களிடமும் வந்து குந்திக் கொள்வதையும் அவதானிக்கலாம்.
'அவர்களுக்கான அங்கிகாரமாக' மேற் சொன்ன தடிப்புகள் இருப்பதால் அந்த அளவே பண்பாக மாறி அதுவே அறிவாகவும் நம்பிக் கொள்ளும் போக்குள்ளது. அதுமட்டுமின்றி ஏதோ ஒரு விதத்தில் இவர்கள் அவற்றைக் கொண்டு மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்துபவர்களாகப் பழக்கப்பட்டிருப்பதால் அவர்கள் அதையே கொஞ்சமும் குற்றவுணர்வின்றி எடுத்தும் கொள்கின்றனர்.
அறிவு என்பது இறவில் தூக்கத்தில் இருக்கும் போது கடவுள் ஒளி வட்டத்துடன் தோன்றி சுட்டு விரலை நெற்றியில் வைத்து மென்மையாக அழுத்தி ஒளி பாய்ச்சுகிற விவகாரமில்லை. அத்துடன் ஒருவர் பெற்று இருக்கின்ற அனுபவம் என்பதற்குப் பெரு மதிப்பு இருக்கின்றது என்றாலும் அதுவே 'இஸமாக' ஏற்று வாதிப்பது என்பது பிரச்சனையின் உண்மையான கூறுகளைக் கண்டடைவதற்குத் தடையாக அமைந்து விடக்கூடும். முதலில் நாம் அறியாதவை சிறிதளவே என்பதை முதலில் தெளிவதே அறிவுத் தேடலில் முன்னோக்கிச் செல்ல ஒரே வழி.
சமூகத்தில் இருக்கின்ற ஒரு விடயம் தொடர்பான உண்மையான அக்கறை அது நோக்கிய உண்மையாகத் தேடலை அதிகரிக்கும் என்றே நம்புகிறேன். நமக்கான முன் முடிவுகளுடன் இருந்து கொண்டு 'அதுவே ஆகும் அறிவு' என்று சிந்திப்பதை நிறுத்திக் கொள்வதால் அது நிகழாது. தேடுகின்ற அறிவின் வெளி நமக்கு புறத்தேயள்ளது என்பதால் அது நமது தப்பெண்ணங்களுக்கு (prejudice) தீனி போடுவதாக ஒரு போதும் இருக்காது.
சமூகத்தின் இயங்கு வரலாற்றுப்போக்கில் அவை பல தளங்களில் மாற்றத்துக்குட்பட்டு நகர்ந்திருந்திருக்கும். நாம் எதிர் நோக்குகின்ற இன்றைய பிரச்சனைகள் ஒரு வரலாற்றின் தொடர்ச்சிதான். அந்த தொடரில் நடந்த மாற்றங்களை, போராட்ட சம்பவங்களைத் துடைத்து எரிந்து விட்டு அல்லது வெட்டி எறிந்து விட்டு இவ்வளவுதான் எல்லாம் என்று பார்ப்பது அல்லது அப்படிக் காட்ட முயல்வது அறிவின்மை மட்டுமல்ல அதற்குள் இருக்கின்ற அயோக்கியத்தனங்களையும் பிறருக்குச் செல்லி விடத்தக்கது. பெரியாரைத் தமிழ்த் தேசியத்திலிருந்து வெட்டி எரிவது அல்லது தமிழ்த்தேசியத்தையே ஈழத்தின் போராட்ட வரலாற்றிலிருந்து துடைத்தெறியத் துடிப்பது, அம்பேத்கரை வரலாற்றில் அகற்றி மார்க்ஸை வலுக்கட்டாயமாக இட்டுத் திணிக்க முயல்வது-
என்று வரலாற்றில் கொஞ்சப் பக்கம் தேவையில்லை என்று வாதிக்க முடியாது.
என்று வரலாற்றில் கொஞ்சப் பக்கம் தேவையில்லை என்று வாதிக்க முடியாது.
எமது கூர்மையான பார்வையும் தேடலும் எமது தப்பெண்ணங்கள், மேட்டிமைகள்(privilege) எல்லாவற்றையும் ஏதோ ஒளி புள்ளியில் சட்டையைப் பிடித்து குலுக்கக் கூடும். இவை எல்லாவற்றுக்கும் தயாரானவர்கள்தான் தேடலை நகர்த்தி அறிவை நாட முடியும். அன்றி, அறிவை நமது வெற்றுப் பார்வைகளால் தகர்த்து விட முடியாது.
இன்னும் சிலர் தமக்கிருக்கின்ற ஆங்கில மொழி அறிவையும் தம்மைச் சுற்றி இருப்பவர்களின் அறியாமையும் அல்லது சோம்பேறித்தனத்தையும் பயன்படுத்தி தாம்தான் அறிவானவர்கள் என்று காட்ட வெளிக்கிடும் கெட்டிக் காரர்களாக இருப்பர். மக்களின் பிரச்சனைகளை பற்றி அல்லாமல் அம்மக்களை விடத் தாம் மேலானவர்கள்- படிப்பாளிகள் என்பதைக் காட்ட விளைபவர்கள். முன்நோக்கி நகர்ந்திருக்கிற சமூகத்தை தம் பக்கத்திற்கு இழுத்து வைக்க முயல்வர். கற்பு கற்பிதத்தை, பெண் உடல் மீது பிறர் செலுத்துகின்ற ஆதிக்கத்தை அந்த சமூகத்தை கெட்டித்தனமாக நிலை நிறுத்த அறிவாளித்தனம் என்ற பெயரில் முயல்வர். அச் சமூகம் அவ்விடயத்தில் கொண்டிருக்கின்ற பொது புத்தி மட்ட ஆதரவை நன்கு கையாழ்வர். கைதட்டலையும் பெறுவர்.
இவர்களுக்குள் இன்னுமொரு வகையினர் இருப்பர். இவர்கள் தேர்தல் வாக்கரசியலில் மட்டுமே மக்களுக்கான எல்லாப்பிரச்சனைகளுக்கும் தீர்வுண்டு என்று அரசுகளின் அடக்கு முறை அஜன்டாக்கு வேலை செய்பவர்கள். அதுவே அரசியல் அறிவு என்றும் தாங்களே அதற்கான சாணக்கியர் என்றும் நம்ப வைக்க முயல்வர். தங்களுக்கும் தம் கட்சி சார்ந்த நபர்களின் நலன் சார்ந்து சிந்திப்பதால் அரசியல் அறிவு ஆசான்களாகியிருப்பர். அரசுகள் அவர்களின் வரக்க நலன்கள் அதன் தோற்றம்,போக்கு, செயற்படும் முறை என்ற எந்த புரிதலும் இருக்காது.
இத்தகைய அரசுகளின் கீழ் வாழும் மக்களின் அடிப்படை சனநாயகம், சுய மானம், அதன் அரசியல் அபிலாசைகள், சக இன மக்களைப் போன்று சமமாக வாழ அடிப்படை உரிமைகள் என்பவை எல்லாம் இவர்களுக்குத் தேவையற்ற ஆணிகள்தான். அதிகாரத்துக்கு ஆட்டும் 'வால் மட்டுமே' அரசியல் என்ற தேர்தல் வாக்கரசியலுக்கு மட்டும் மக்களை பயிற்றுவிப்பது இவர்களது முழுநேர தொழில்.
அறிவு பற்றி ஹேபர்மாஸ் இப்படிக் கூறுகிறார் 'அறிவு என்பது மானுட விடுதலைக்கானது' (emancipative knowledge) என்கிறார் . ஏதோ ஒரு வர்க்க நலனுக்காக கட்டமைக்கப்படிருக்கிற அறிவை விமர்சனப் பூர்வமாக அணுகி மானுட விடுதலைக்கானதாக பார்க்கின்ற அறிவை வலியுறுத்துகிறார்.
மற்றும் அவர் 'கருவி சார் அறிவு'- அதாவது வெறும் தொழில்நுற்ப அறிவும் அவற்றை இயக்குவதற்கானது தொடர்பானது. அத்தகைய அறிவு என்பதும் அது சார் நலன்கள் என்பதும் மிகச் சிலருக்கானது மட்டுமே. அதனால் பலன் பெறுபவர்கள் சிலர் மட்டுமே என்கிறார்.
அடுத்து நடைமுறையில் உள்ள விடயங்களை அறிந்து அதற்கு ஏற்றால் போல் நடப்பது அல்லது செயற்படுவது. எமது வேலைகளைச் செய்து கொள்வதற்கானது. அதாவது நடைமுறை அறிவு(practical knowledge)
இறுதி இரண்டு அறிவுகளும் முதலாளித்துவ வர்க்கத்திற்குச் சேவகம் செய்வதற்கானது என்கிறார் அவர். ஆனால் கூர்மையான பார்வையுடன் சுதந்திரமான விமர்சன போக்கும் சனநாயகத் தன்மையை
வளர்க்க அடிப்படையிலானது என்றும் இது அடக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்கான உரையாடலுக்கு எடுத்துச் செல்ல அடிப்படை என்கிறார்.
இதைத்தான் காரல் மார்க்ஸ் இருப்பவை அனைத்தின் மீதும் ஈவிரக்கமற்ற விமர்சனம் என்கிறார். ஆனால் விமர்சனம் யாரின் பக்கத்தில் நின்று யாருக்கு எதிராக யாரின் நலன்களுக்காகச் செய்கிறோம் என்பதும் முக்கியமானது. அந்த அடிப்படையிலான விமர்சனமே ஒடுக்கபட்பட்ட மக்களுக்கானதாகவும் அதிகாரத்துக்கு எதிரானதாகவும் இருக்க முடியும்.
சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வான நிலை, ஒடுக்குமுறை சுரண்டல், பாசிச சர்வாதிகாரம் கட்டிக் காப்பதில் அறிவாளிகளும் அவர்களது கருத்து நிலையும் வகிக்கும் வலுவான பாத்திரம் உண்டு என்கிறார் கிராம்சி. அத்துடன் ஆதிக்க வர்க்கம் தனது ஆட்சியை நிலை நிறுத்த வன்முறை பலவந்தம் ஆகியவற்றை மட்டும் பயன் படுத்துவதில்லை மாறாக அந்த வர்க்கத்தின் உலகப் பார்வையைப் பரந்து பட்ட மக்கள் ஏற்றுக் கொண்டு அந்த வர்க்கத்தின் மேலாண்மைக்கு அவர்கள் விருப்பத்துடன்(சம்மதம்) தருவதாலுமே அதனுடைய ஆட்சி நிலை நிறுத்தப்படுகிறது.
என்கிறார் கிராம்சி. (399 புரட்சியின் இலக்கணம்)
இங்கு அறிவு என்பதும் யாருக்காக உழைக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் அதன் அறம் முடிவெடுக்கப்படும். ஆளும் வர்க்கத்தின் ஒடுக்கு முறை வன்முறை கருவிகளுக்காகச் சேவகம் செய்வதற்கான அறிவும் பேச்சும் மக்களுக்கானதாக இருக்க முடியாது. அது அவர் அவர்களின் பிழைப்புக்கும் பகட்டுக்கும் மட்டுமே பயன்படும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது.
JackpotCity Casino has one of the best multi-national buyer help groups within the industry. Some sport types do not absolutely depend in opposition to the wagering requirement, so make sure you|ensure you|be sure to} check prematurely. Slots, keno video games, and scratch cards do depend absolutely, however most forms of blackjack only depend 10% and many 먹튀사이트 먹튀프렌즈 of|and a lot of} other desk video games do not depend at all.
பதிலளிநீக்குThe authorized situation has https://casino.edu.kg/%EC%A0%95%EC%B9%B4%EC%A7%80%EB%85%B8.html solely somewhat reduced the variety of out there payment methods. Even at that, there are nonetheless options that gamers can use to get their funds across. Prepaid vouchers from native providers are a popular option, however some of the confirmed reliable methods is direct financial institution switch. The online on line casino offers gamers with their account at one of many native banking institutions in the nation, and gamers can simply go to the counter of their chosen financial institution and deposit funds to the given account.
பதிலளிநீக்கு