ஒருவரது தனிப்பட்ட அனுபவம்; சமூக கட்டமைப்பிற்குள்ளானாலும் அதன் சமத்துவ இன்மையாலும் விளைந்தவை- அவை அரசியலே!!

 

அமைப்பு என்பது கடந்த காலத்தினதும் வருங்காலத்தினதும் பொறுப்புணர்வு மிக்கதாக இருக்க வேண்டும் என்கிறார்- கிராம்சி.
இத்தகைய பொறுப்புணர்வைத்தான் அமைப்புகளின் தலைமை கொண்டிருக்க வேண்டுமே ஒழிய அயோக்கியத்தனங்களில் ஒற்றுமையைப் பாதுகாப்பதல்ல என்கிறார் அவர்.

ஒரு புரட்சிகர அமைப்பினது- கட்சியினது வளர்ச்சி என்பது தொடர்ச்சியாக நடைபெறுகின்ற ஒன்று. அதன்போது தான், அமைப்பினது கடமைகள் விரிவடைக் கூடும். அதனடிப்படையிலேயே ஒடுக்கப்பட்ட அதிகாரமற்று இருக்கும் மக்களுக்கான அமைப்பாக அது இயங்க முடியும். அல்லாமல் இருக்குமானால் அமைப்பிற்குள் அதிகாரம் படைத்தவர்களின் குழு வாத நலன்களுக்கு வலு சேர்ப்பதாகிவிடும்.

இத்த நலக்களை பேண வெறும் சொற்தொரடர்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் உறுப்பினர்களை மட்டும் உள்ளிணைத்துக் கொள்ளும். அது மட்டுமல்லாமல் 'போராட்ட அமைப்புகள்' என்று சொல்லிக் கொள்பவைகள் சனநாயகமற்ற, பேச்சு கருத்து சுதந்திரத்தை மறுக்கின்ற மதவாத நம்பிக்கை கொண்டவை போல் நடந்து கொள்கின்றன. தீண்டாமையை 'புனித அமைப்பு' வகையறா அரசியலை வளர்த்து விட்டுக் குளிர் காய்கின்றன. அதற்குள் ஒருவகை பாசிச கூறுகளையும் ஏகபோக அதிகாரத்தையும் அதன் ஊடே வேண்டி நிற்கின்றன. அதாவது கோசங்களிலும் சுவரொட்டிகளிலும் ஒடுகுகின்றவர்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டிக் கொண்டு நடைமுறையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான- அல்லு அர்களின் கருத்தியலைக் கொண்ட பிரிவினருக்கு கடுமையான எதிர் அரசியலை முன் எடுக்கின்றனர்.
அமைப்பு என்பது கடந்த காலத்தினதும் வருங்காலத்தினதும் பொறுப்புணர்வு மிக்கதாக இருக்க வேண்டும் என்கிறார்- கிராம்சி.
இத்தகைய பொறுப்புணர்வைத்தான் அமைப்புகளின் தலைமை கொண்டிருக்க வேண்டுமே ஒழிய அயோக்கியத்தனங்களில் ஒற்றுமையைப் பாதுகாப்பதல்ல என்கிறார் அவர்.

இத்தகைய 'அமைப்பு அரசியல்' பச்சையான விளம்பர உத்திக்கானது. ஒரு சில உயர் அங்கத்தவர்களின் பிழைப்புக்கும் இருத்தலுக்குமானது. மேற் கொண்ட பண்புகளுடன் அமைப்பைக் கட்டிக்காக்கும் நபர்களுக்கு அவர்கள் செய்கின்ற பாலியல் சுரண்டல், பண மோசடிகள் அரசியல் இலாபங்கள், வன்முறைகள், என்பவற்றிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள இத்தகைய அதிகாரங்கள் தேவைப்படுகின்றன.

அதிகார உறவுகளின் அடுக்குகளில் பெண்ணின் நிலை அரசியல், சமூக அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அமைப்பிற்குள் ஆண்களின் அதிகாரம் அதனால் பெண்களுக்கு ஏற்படுகின்ற ஒடுக்கு முறையை அரசியலாகப் பேச வேண்டியது அடிப்படை. ஒரு பெண் ஆணினால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறாள் என்றால், இந்த துஷ்பிரயோகம் சமூக ஒடுக்கு முறை அடிப்படையில் புரிந்து நீதி கோரல் தேவைப்படுகிறது.  

ஒருவரது தனிப்பட்ட அனுபவம் என்பது சமூக கட்டமைபுக்குள்ளாலும் அதன் சமத்துவ இன்மையாலும் விளைந்தது - என்கிறார் கனிஷ். மற்றும் 1959 ஆம் ஆண்டில் மார்க்சியத்தைப் சமூகவியலாளர் ரைட் வெளியிட்ட சோஷியோலோஜிக்கல் இமேஜினேஸனில் '' தனிப்பட்ட அனுபவங்கள் பெரிய சமூக மற்றும் பொதுக் சூழலுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன'' என்று வாதிட்டார். இத்தகைய எந்த வித அறிதலும் தேடலும் இல்லதா 'உச்ச புரட்சி தோழமை கூட்டத்தினர்'. பாலியல் மோசடி மற்றும் பண மோசடி என்று தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரை தற்காக்கும் செயலை செய்கின்றன. 'வாய்ப்பாட்டு அரசியலின் வின்னங்கள் என்ற பெயர் பெற்ற இவர்கள் திரும்பத் திரும்ப அறம் கெட்ட அரசியலையும் செய்து அதை 'அரசியல் சமூக நியதி' ஆக்குவதை போக்கா கொண்டுள்ளனர். இவற்றை அம்பலப்படுத்தாமல் இருக்க முடியாது.


இவர்களின் வாய்பாட்டு அரசலில் சில..

1)பாலியல் சுரண்டல், துஷ்பிரயோகம், வன்முறை மோசடி என்பன தனிப்பட்ட உறவு அல்லது தனிப்பட்ட பிரச்சனை.
2) ஒரு புரட்சிகர கட்சிக்கோ அமைப்பிற்கோ புரட்சிகர கோட்பாடுகள் தேவையற்றது.
3) கோசங்களால் கொள்கையைப் புரிந்து கொள்ள முடியும். அல்லது வெற்று கோசங்களால் சமூகத்தை மாற்றி அமைத்து விடலாம். கோட்பாட்டு வாசிப்புகள் வீண் நேர விரயம்.( இதை ஒரு புரட்சி கர கட்சியின் முக்கிய உறுப்பினர் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசுகிறார்)
4) மொழி பெயர்ப்பு(ஆங்கில - தமிழ்) நூல்களைப் படித்து மார்க்ஸியத்தை அது தொடர்பான வாதங்களைப் புரிந்து கொள்ள முடியாது. (குறிப்பாகத் தமிழ் மொழி பெயர்ப்புகளைப் படிப்பதே அறிவற்ற செயல். சொல்லப்போனால் தமிழில் படிப்பவர்கள் மார்சியர்களே இல்லை.
குறிப்பு: ட்ராட்ஸிக்கு ABC கூட தெரியாது என்று எங்கோ படித்த ஞாபகம்.

இவை அனைத்தும் ஒரு வகை அதிகாரத்தை அதன் அரசியலை தன் நிலைப்படுத்துவதற்கான முயற்சியே. இவற்றைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் பொது வெளியில் இவற்றை நியமமாக்க முயல்கிறார்கள்.

எந்தளவு ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களை, பிரச்சனைகளை ஒரு அமைப்பு பிரதி பாலிக்கிறதோ அப்போதுதான் அம்மக்களின் பிரதிநிதியாக முடியும். அன்றில், எதிலும் பொத்தாம் பொதுவான சில அரசியல் நிலைகளில் கருத்துச் சொல்பவர்களாக இருப்பதால் அல்ல. மேலும் அன்றாட செய்திகளைத் தொகுத்து கட்டுரைகளை' எழுதி தம்மிருப்பை' காட்டிக் கொள்ள மட்டுமே உதவும். கோத்தாவும் மகிந்தவும் இவர்களின் கட்டுரைகளைப் பார்க்க மாட்டார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கைதான். அத்துடன் பொது மக்களின் பொதுப் புத்தி அறிவில் அத்தகையைவை மட்டுமே 'அரசியல்' என்ற குறிப்பான புரிதல் இருப்பது இவர்களுக்கு மிக வாசியாகவும் வாய்த்து விடுகிறது.
''ஒருவரது தனிப்பட்ட அனுபவம் என்பது சமூக கட்டமைப்பிற்குள்ளானாலும் அதன் சமத்துவ இன்மையாலும் விளைந்தது''
ஒரு தனி மனிதன் கூட சமூகப் பிரச்சனைகளில் ஒடுக்கப்படும் பக்கம் நின்று ஊடுருவி ஆழப் பார்க்கின்ற போதுதான் அவரது நடத்தை, அரசியல்,கொள்கை புரட்சிகரமானதாக அமையும். அவற்றையே அடிப்படையான கருத்தியலாகவும் செயற்பாடாகவும் கொண்டு களத்தில் மக்களை நெருங்கவும் முடியும். எனவேதான் ஒரு தேசத்திற்குள், சமூகத்திற்குள் நிலவுகின்ற உறவுகளை, அரசியல் சிக்கல்களை ஆய்வதே பிரச்சனைகளை அறிவதற்கான தொடக்க முனை என்கிறார் கிராம்சி.

ஆனால் இங்கு சில இடது சாரி அமைப்பு அல்லது கட்சிகளுக்குள் என்ன நிகழ்கிறது என்று பார்த்தால் அத்தனையும் தலை கீழ் . வறண்டு போன சில பிரச்சார சூத்திரங்களை வைத்துக் கொண்டு அதுவே ஒட்டு மொத்த சமூகத்தையும் அவற்றின் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கின்ற 'மந்திர கோளாக' ஜேடிக்கப்படுகிறது. அதனால் கூர்மையான சமூகப் பார்வை கொண்ட, அரசியல் மாற்றத்தை நேசிக்கின்ற அநீதிக்குக் குரல் கொடுக்கின்ற கிளர்ச்சி செய்கின்ற அங்கத்தவர்களைப் புறக்கணிப்பதை சில இடது சாரி அமைப்புகளே எழுதப்படாத கொள்கையாகக் கொண்டியங்குகிறன. இது மேற் சொன்ன குழு வாத நலன்களுக்கு மிக அடிப்படைத் தேவையாகவும் உள்ளது..

உறுப்பினருக்குக் கழுவி விடாதோர், சுய அறிவு சுய மானம் உள்ளோர், நலங்களில் நின்று தன் வளர்ச்சியை விரும்பாதவர், தேடி வாசிப்பவர்கள் சிந்திப்பவர்கள், கருத்துக்குக்களை அதன் கட்டுமானங்களை உடைப்பவர்கள், கோட்பாட்டு ரீதியாக எச்சரிப்பவர்கள், குறிப்பாகப் பெண்கள் மீதும் அவர்களின் சமூக மாற்றத்துக்காக, நீதிக்காகக் கறாராக்கப் பேசுபவர்கள், பெண்கள் மீதான பாலியல் சுரண்டல்-வன்முறை அவர்கள் மீதான தரம் தாழ்ந்த பேச்சு நடைமுறைகளை எதிர்ப்போர்- என்று எவரையும் இத்தகைய அமைப்புகள் உள்வாங்க அல்லது நிரந்தரமாக அமைப்பில் வைத்திருக்க விரும்புவதில்லை. சுருக்கமாகச் சொன்னால் தப்பித்தவறியும் 'சமூக நீ' பேசிவிடக் கூடாது என்பதே அவர்களது பிடிவாத பிழைப்பு அரசியல். இவற்றையும் மிறீ தாக்கப்பிடிக்கும் அங்கத்தவரை அடிமட்ட உறுப்பினராக மட்டும் வைத்துக் கொள்வதில் கவனம் காப்பர்..
ஒரு தனி மனிதன் கூட சமூகப் பிரச்சனைகளில் ஒடுக்கப்படும் பக்கம் நின்று ஊடுருவி ஆழப் பார்க்கின்ற போதுதான் அவரது நடத்தை, அரசியல்,கொள்கை புரட்சிகரமானதாக அமையும். அவற்றையே அடிப்படையான கருத்தியலாகவும் செயற்பாடாகவும் கொண்டு களத்தில் மக்களை நெருங்கவும் முடியும். எனவேதான் ஒரு தேசத்திற்குள், சமூகத்திற்குள் நிலவுகின்ற உறவுகளை, அரசியல் சிக்கல்களை ஆய்வதே பிரச்சனைகளை அறிவதற்கான தொடக்க முனை என்கிறார் கிராம்சி.
இது ஏன்? இப்படியானவர்கள் இல்லாமல் புரட்சி கட்சி,அமைப்பு எந்த அடிப்படையில் வளர- செயற்பட முடியும்? மாற்றங்களை ஏற்படுத்த முடியும். கட்சி அமைப்புகளின் வெறும் பிரச்சாரங்களைச் செய்பவர் மட்டும் போதும் என்பது சமூக நலத்துக்கானதாக அல்லது அவற்றில் இருக்கின்ற ஒரு சிலரின் நலத்துக்கானது மட்டுமா?

இந்த அடிப்படையில் அமைப்புகளை வழி நடத்துபவர்களின் அரசியல் நலன்- பொதுப் புத்தி சார்ந்ததாய் இருக்கின்ற போது, ஒடுக்கப்பட்டவர்களின் பக்கத்திலிருந்து வருகின்ற 'நீதி கோரல்கள்' வெறும் 'தனிமனித-தனிநபர்' சார்ந்த விடயமாகப் பிரச்சாரம் செய்யப் பட்டுத் தட்டிக் கழிக்கப்படுகிறது. இங்குச் சிலருக்கு மிகச் சாதாரண அரசியல் பார்வையே சிக்கலாக இருக்கும் நிலையில் மார்க்சிய பெண்ணியப் பார்வை, சமூக நீதிப்பார்வை என்பதே 'அதோ கதிதான்'!

எந்தப் பிரச்சனையை எப்படிப் பார்ப்பது? எதை எதனுடன் சேர்த்துப் பார்ப்பது எதனுடன் விலத்தி பார்ப்பது? ஒரு பிரச்சனையின் தன்மை என்ன, அவற்றின் சமூக அரசியல் யாருக்கானதாக இருக்க வேண்டும். அதில் ஒடுக்கப்படுபவர் சமூகத்தில் எந்த பிரிவினர்? பாதிப்பு யாருக்கானது இழப்புகளின் நீதி என்பதற்காகப் பாலர் பாடத்தைக் கூட இவர்கள் சமூக நீதி அரசியலில் தாண்டுவதில்லை.

அதே நேரம், அமைப்புகளில் இருக்கும் குற்றச்சாட்டப்பட்ட தமது விசுவாசிகளைப் பாதுகாக்க, எதிர்ப்பை மடை மாற்ற, (பாலியல், மோசடி துஷ்பிரயோகம்,வன்முறை போன்ற குற்றச்சாட்டுகள்) அமைப்புகளுக்கு வெளியே இருந்தும் சிலரைத் தேர்ந்தெடுக்கும் அபத்தம் நிகழும். தங்களால் சொல்லத் தயங்குகின்ற, அல்லது முடியாத கொச்சையான விடயங்களை பொது வெளியில் சொல்ல, எழுத வைப்பதற்காகவே இவர்களை அமர்த்துவர். அதாவது அரசியல் அறத்திக்கு அப்பாற் பட்டவற்றைச் சொல்ல-எழுத இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பர்.

இத்தகையவர்கள் முற்போக்கு இடதுசாரியைச் சிந்தனை சமூகத்தால் மட்டுமல்லாமல் தமது உள் சுற்றத்தால் கூட உள்ளார்ந்த ஒதுக்கப்பட்டவர்களாக இருப்பர். மற்றும் பல காலமாக பொது வலைத்தளங்கள் அரசியல் தளங்களில் இவர்களுடைய அறம் நேர்மை அரசியல் போன்ற விழுமியங்கள் பலதரவைப்பட்டவர்களினால் கேள்விக்கு உட்பட்டதாயிருக்கும். இவர்களின் குணம் சொட்டும் அறமோ அரசியலோ அற்றது என்பதால் சிலர் பயத்தில் பதுங்குவர். பலர் அலட்டிக் கொள்ளாமல் கடப்பர். எனவே இத்தகையர்கள் யாருக்குச் சார்பாகச் செயற்படுகிறார்களோ அவர்களுடைய அரசியலும் முற்போக்குமே பொதுத் தளங்களில் மூக்குடைபடுவதையும் காணலாம். ஒரு வகையான என்.ஜி.ஓ கார்ப்ரேட் அரசியலைச் செய்வார்களாக இவர்கள் இருப்பர்.

எனவே இத்தகையர்களை முன்னிறுத்தி பின்னுக்கு நின்று குளிர் காய்ந்து தம்மை நோக்கி வருகிற பிரச்சனைகளை, குற்றச்சாட்டுகளைக் கடந்து விடலாம் என்று நம்புகிற அளவு புரட்சிகர அமைப்புகளின் 'அமைப்புத்துறை சனநாயகத் தன்மை' கேடு கெட்டுக் கிடக்கிறது?. அரசியலையும் அமைப்பையும் தனியுடைமை சிந்தனையுடன் அணுகுவதே இதற்குக் காரணம். எனவே பிரச்சனைகளை முதுகு சொறிவுகள்-அவதூறுகள் மூலம் தீர்த்து விடலாம் என்று அவர்கள் நம்புகின்றனர்.
''அமைப்பைத் தவறாகக் கதைத்து விட்டீர்'' ''அமைப்பைத் தவறாகக் கதைத்து விட்டீர்'' என்று யெகோவா விசுவாசிகள் போல் நடந்து கொள்வதால் புரட்சி அமைப்பின் புனிதம் காப்பாற்றப்பட்டு விடுமா? இது ஒரு வித 'மதங்களின் பற்று மன நிலை' அல்லாமல் வேறு என்ன?

 எத்தகைய முதுகிற்கு எத்தகைய சொறிவு(கடி) இருக்கிறது என்று பார்த்து, குறிப்பறிந்து அந்த முதுகிற்கு எல்லா வகை கைகளையும் வளைத்துப் போட்டுச் சொறிந்து விடும் வேலையைக் கச்சிதமாகச் செய்கின்றனர். அந்த கைகளைப் பெற எந்த எல்லைக்கும் இறங்குவர். இங்கிலாந்து பாலியல் சுரண்டல் பேர்வழியைக் காப்பாற்ற இலங்கை பாலியல் சுரண்டலாளி வரை கூட கை நீளுகிறது. அவ்வளவு கடியும் சொறியும் அவர்களுடைய பின் பக்கங்களில் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். சிட்னி வரை முயற்சித்து மூக்குடைபட்டாகவும் செய்திகள் உள்ளன..

புரட்சிகர செயற்பாட்டிற்கும் தாராள வாத நடவடிக்கைகளுக்கும் வித்தியாசம் புரியாத இவர்கள் அம்மனமாக அங்கும் இங்கும் ஓடி பாலியல் சுரண்டல் குற்றம் சுமத்தப்பட்ட பேர்வழிகளுடன் கூட்டணி வைக்க முயல்கின்றனர். ஆக இவர்கள் சமூக அரசியலை விடத் தன்முனைப்பு குழு வாத கோஸ்டடி அரசியலையே விரும்புகின்றனர்.

ஒரு கட்சிக்குள் அல்லது அமைப்பிற்குள் ஆணாதிக்க அடிப்படை வாதம் அதன் செயற்பாடுகளில் எப்படியெல்லாம் வேரூன்றி இருக்கிறது என்று பார்ப்பதற்கு, பெண்களின் பிரச்சனைகளில் இவர்கள் எப்படியான நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள் என்று அவதானித்தாலே புரிந்து கொள்ளலாம்.

தந்தை பெரியார் பெண்ணிய கருத்துகளுக்காகவும் செயற்பாடுகளுக்காகவும் இன்றும் கொண்டாடப் படுகிற ஆண் ஆளுமை. ஏன் என்றால் அவர் 'தான் ஒரு ஆண்' என்ற மன நிலையிலிருந்து இறங்கி பெண்களின் சமூக நிலையைப் பார்க்க விளைந்த காரணமே ஆகும். தன்னை ஒரு பெண்ணாக அப்பிரச்சனைகளில் வைத்த அணுகும் போதே அதற்கான தீர்வையும் நியாயத்தையும் 'பெண்ணுக்கானதாக' பேச முடிந்தது. அதையே அவர் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் ஏனைய ஒடுக்கு முறைகளிலும் செய்தார்.

ஒரு ஆண் தனது சமூக நிலையை(privilege) பயன் படுத்தி பெண்களை பாலியல் ரீதியில் சுரண்டும் போது, அதை அவனுடைய உரிமை-சுதந்திரம் என்று பேசுவதும், குறித்த ஆணிகளில் பொறாமை கொண்டு பேசுவதாகப் பாதிக்கப் பட்டவர்களுக்காகப் பேசுபவர்கள் மீதி திசை திருப்புவதும் அயோக்கியத்தின் உச்சம். அதுமட்டுமில்லாமல் அது ஒரு குட்டி முதலாளித்துவ மன நிலையின் கடைந்தெடுத்த பெறுக்கித்தனமும் கூட.

இத்தகைய பிரச்சாரங்கள் மூலம் இன்னுமொரு ஆணுடைய 'ஆண்மையைக் கூட்டுச் சிந்தனைக்கு இலகுவில் தீனி போட்டு ஆதரவைத் திரட்டி விட முடியும் என்ற பெண் வெறுப்பு சாணக்கிய பேச்சு வல்லமை தனம் அது. ஆனால் இந்த பிரச்சாரத்தை வளர்ந்த இடதுசாரி அரசியல் பொதுத் தளத்தில் எழுதியோ பேசியோ பிரச்சாரம் செய்ய முடியாது. முடிந்தால் செய்து காட்டட்டும். பின் நாமெதற்கு முகமூடிகளைக் கிழிக்க, அதுவே தானாகக் கிழிந்து தொங்கும்.

நாளை, சாதிய சமூகத்தில் சாதியத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் சமூகப் பிரச்சனையில் இதே நிலைப்பாட்டுடன்தான் அணுகுவார்களா? முடிவெடுப்பார்களா பார்த்து விடலாம்?

இதன் மூலம் இவர்கள் சொல்ல வருவது கடந்த கால விடயங்களில் மட்டுமல்ல நிகழ்கால, வருங்கால செயற்பாடுகளிலும் இவர்கள் பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பெண்கள் பக்கம் நிற்கப் போவதில்லை என்பதைத்தான். மாறாக இத்தகைய சுரண்டல் நபர்களை பாதுகாக்கின்ற 'அமைப்பு கூடார' கவசங்களாகச் செயற்படப் போகிறார்கள் என்பதும்தான்?.

அடுத்துப் பாதிக்கப் பட்ட நபரையே குற்றம் சுமத்துவதும்(victim blaming)செய்வதும், அவர்களுக்காகப் பேசுபவர்களை அமைப்புகளிலிருந்து நீக்குவதும் தொடர்கிறது. இவர்கள் தம்மைச் சனநாயக வாதிகளாகக் காட்டிக் கொண்டு பாசிசத்தின் அனைத்து பண்புகளையும் கொண்டவர்களாக இருக்கின்றனர். சமூக நீதிப் பிரச்சனைக்குக் காவல் துரையில் முறைப் பாடு செய்யும் படியும், ஆதாரத்தைக் காட்டும் படியும் கேட்கும் அரசியல் அபத்தத்தைக் கூச்சமின்றி பொதுக் கூட்டங்களிலேயே செய்கின்றனர். அடிப்படை அரசியல் அறிவற்ற உறுப்பினர்களை அமைப்பின் உயர் இடங்களில் வைத்திருப்பதின் அடிப்படை இதுதான். இன்னும் பல பத்துவருடங்கள் சென்றாலும் அடிப்படை அரசியல் கூட பழகப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.

இங்கு ''அமைப்பு என்பது என்ன'' என்ற கேள்வி எழுகிறது. அது அதன் அங்கத்தவர்களைத் தாண்டி வெளியில் அந்தரத்தில் இயங்கும் அல்லது சூழலும் ஒன்றா? அதற்கு எதாவது புனிதங்கள் உண்டா? அமைப்பு அயோக்கியர்களின் கூடாரமாகும் போது அமைப்பு கேள்விக் குட்படக் கூடாதா? அப்படிக் கேட்பது அமைப்புக்கு துரோகமா அமைப்பின் துரோகமா? கொள்ளைக்காக அமைப்பா அமைப்பிற்காகக் கொள்கையா? ஒரு அமைப்பு அதன் அங்கத்தவர்களால் கட்டப்படுவதுதானே அன்றி அதற்கு ஒரு போலி பிம்பம் தேவையற்றது. அதே அங்கத்தவர்கள் தவறு செய்யும் அதற்கு தட்டிக் கொடுக்கின்ற போது அந்த அந்த பிம்பம் கேள்விக்கு உட்படுவதுதானே மிகச் சரியான அரசியலாக இருக்க முடியும்? அதை விடுத்து ''அமைப்பைத் தவறாகக் கதைத்து விட்டீர்'' ''அமைப்பைத் தவறாகக் கதைத்து விட்டீர்'' என்று யெகோவா விசுவாசிகள் போல் நடந்து கொள்வதால் புரட்சி அமைப்பின் புனிதம் காப்பாற்றப்பட்டு விடுமா? இது ஒரு வித 'மதங்களின் பற்று மன நிலை' அல்லாமல் வேறு என்ன?

நீதி கிடைக்காத போது பாதிக்கப்பட்ட தரப்பினரின் நியாயங்களைப் பேச கேட்கத் தயாரில்லாத போது அமைப்பு அந்த பொறுப்பு கூறலுக்கு ஆட்படு தாக்கப்படுவது தவிர்க்க முடியாது. அமைப்பு மதமுமல்ல உறுப்பினர்கள் கடவுளின் தூதுவர்களுமல்ல. இது ஒரு வகை அமைப்பு அடிப்படை வாதம். இந்த இடத்தில்தான் கிராம்சி மேற் சொன்ன விடத்தைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.


பாதிக்கப்பட்ட பெண்ணுகளுடைய கண்ணீர்,வாழ்க்கை, சமூக நிலை வாழ்வு பற்றிய எந்த சொட்டு அக்கறையும் அற்று குற்றம் சாட்டப்பட்டவர் பக்கத்தில் நின்று பேசும் இவர்களைச் சாதாரண நல்ல மனிதர்களாகவே பார்க்க வாய்ப்பில்லாத போது எப்படி புரட்சியாளர்கள் படம் காட்டுவதைச் சகித்துக் கொள்வது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கத்தின் பிரச்சனையைப் பேச அமைப்பில் ஒரு குஞ்சு கூட தயாரில்லாத போது நாளை இத்தகைய அமைப்புகளை நம்பி வருகிற பெண்களின் நிலை என்ன? அவர்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம். அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் யார் குரல் அங்குக் கொடுப்பர். அந்த நம்பிக்கையைக் கட்டவேண்டியது இடது சாரிய அமைப்புகளின் கடமை பொறுப்பு இல்லையா.?

நாளையும் இது போன்ற பிரச்சனைகளுக்குக் கட்டாயம் நீ கிடைக்கும்! நம்பலாம்! எப்படி என்று கேக்கிக்றீர்களா ?பாதிக்கப்பட்ட நபரை அமைப்பிலிருந்து நீக்கி தமது 'அமைப்பு புனித அரசியலை' நிலைநாட்டுவதன் மூலம்.

ஏன் என்றால் நாம் ஒடுக்கப் படும் மக்களுக்காகப் போராடும் வாய்ச் சொல்லின் வீர ஈர வெங்காயங்கள்!! அல்லவா...

-பாரதி சிவராஜா-

கருத்துகள்

  1. For example, the vendor shows a 6, the third baseman has 12 and hits 포커사이트 a 10 to bust. The vendor turns up a 10 for 16, then draws a 5 for 21, beating all gamers at the desk. The third baseman is probably to|prone to} take warmth from different gamers for taking the vendor's bust card instead of standing.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்ப வேண்டிய அவசியமில்லை...

கர்ணன்

இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை சமூக நீதிக் கோரிக்கை.