இடுகைகள்

ஜனவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொருளாதார வாதமும் தோழியும்

படம்
  மாக்ஸிய கோட்பாடுகளை, இடது சாரிய வரலாறு போராட்டங்களைக் கொஞ்சம் அதிகமாக தேடி படிக்க, உரையாடத் தொடங்கிய சிறிது காலத்துக்கு முன் ஒரு தோழர்(பெண்) உரையாடல் ஒன்றில் கூறியது சில வாரங்களுக்கு முன் ஞாபகம் வந்தது. தோழி சொன்னது(இது பொதுவாக எல்லோரும் சொல்லும் ஒன்றுதான்) 'நாங்கள் போராடா விட்டாலும் புரட்சி நிகழும்' என்றாள். அப்போது நான் 'பின் ஏன் நாம் மெனக்கெடுகிறோம் பேசாமல் இருக்கலாம்தானே' என்றேன் சிரித்துக் கொண்டே (உள்ளுக்குள் ஒரு வகை நிம்மதி. அதிகாரத்துக்கு எதிராக உழைக்கும், ஒடுக்கப்படும் மக்கள்தான் வெல்வர் என்ற நம்பிக்கை அந்த நிம்மதிக்குள் இருந்தது.) அதற்கு அவள்- 'இல்லை வெற்றியை 'விரைவாக்க' வேண்டுமானால் போராட்டம் முக்கியம் என்றாள். அதெப்படி இத்தனை சிக்கலான 'இடியப்ப' சமூகத்துக்கு வெறும் தட்டை வடிவிலான 'தோசை' ரீதியிலான பதில் தீர்வாக இருக்க முடியும் என்று கேட்கத் தோன்றியது. பேசாமல் இருந்து விட்டேன். அன்று அவள் சொன்னது மட்டற்ற சந்தோசத்தையும் விடைகிடைக்காத சந்தேகத்தையும் ஏற்படுத்தியது உண்மை. ஆனால் அந்த சந்தோசத்துக்கும் சந்தேகத்துக்கும் கிராம்ஸி அன்றே ...