பொருளாதார வாதமும் தோழியும்

 



மாக்ஸிய கோட்பாடுகளை, இடது சாரிய வரலாறு போராட்டங்களைக் கொஞ்சம் அதிகமாக தேடி படிக்க, உரையாடத் தொடங்கிய சிறிது காலத்துக்கு முன் ஒரு தோழர்(பெண்) உரையாடல் ஒன்றில் கூறியது சில வாரங்களுக்கு முன் ஞாபகம் வந்தது.


தோழி சொன்னது(இது பொதுவாக எல்லோரும் சொல்லும் ஒன்றுதான்)

'நாங்கள் போராடா விட்டாலும் புரட்சி நிகழும்' என்றாள். அப்போது நான் 'பின் ஏன் நாம் மெனக்கெடுகிறோம் பேசாமல் இருக்கலாம்தானே' என்றேன் சிரித்துக் கொண்டே (உள்ளுக்குள் ஒரு வகை நிம்மதி. அதிகாரத்துக்கு எதிராக உழைக்கும், ஒடுக்கப்படும் மக்கள்தான் வெல்வர் என்ற நம்பிக்கை அந்த நிம்மதிக்குள் இருந்தது.) அதற்கு அவள்- 'இல்லை வெற்றியை 'விரைவாக்க' வேண்டுமானால் போராட்டம் முக்கியம் என்றாள்.

அதெப்படி இத்தனை சிக்கலான 'இடியப்ப' சமூகத்துக்கு வெறும் தட்டை வடிவிலான 'தோசை' ரீதியிலான பதில் தீர்வாக இருக்க முடியும் என்று கேட்கத் தோன்றியது. பேசாமல் இருந்து விட்டேன்.

அன்று அவள் சொன்னது மட்டற்ற சந்தோசத்தையும் விடைகிடைக்காத சந்தேகத்தையும் ஏற்படுத்தியது உண்மை. ஆனால் அந்த சந்தோசத்துக்கும் சந்தேகத்துக்கும் கிராம்ஸி அன்றே காரணத்தையும் விளகத்தையும் தேடிச் சொல்லியிருக்கிறார் என்பதை அந்த கட்டுரை எனக்கு சொன்னதாக பட்டது.

அவளுக்குள் போதிக்கப்பட்ட பொருளாதார 'விதிவாதம்' அதைப் பேச வைத்தது என்பதை அப்போது நான் அறிந்திருக்க வில்லை. ஆனால் அதன் பின் கிரம்ஸியை ஓரளவு படிக்கவும் தேடவும் உரையாடவும் கிடைத்த போது ஓரளவுக்கான புரிதலை பெறுவதற்கான வாய்ப்பாக அந்த சந்தப்பம் அமைந்து. எனலாம்.

அந்த வகையில் சில தோழர்களுடன் கிராஸி தொடர்பிலான ஒரு நீண்ட கட்டுரை ஒன்றை வாராந்த எமது வாசிப்புக்கு சில மாதங்களுக்கு முன் எடுத்திருந்தோம். அதில் வருவது எனக்கு அன்று ஏற்பட்ட சந்தேகத்துக்கு ஓரளவுக்குப் பதில்சொல்வதாய் இருந்தது.

அதில்:

கிராம்சி சொல்கின்ற மார்க்கியத்தில் புதுப்பிப்பது தொடர்பாகச் சொல்லும் பொதுவான அம்சம் என்ன? என்பதாக ஆரம்பிக்கிறது. லெனின்(என்ன செய்ய வேண்டும்) லூக்காஸ்சும்(History and Class Consciousness) போன்றவர்கள் சொல்வது போல் பொருளாதார வாதத்தை நிராகரிக்க வேண்டியுள்ளது- என்று தொடர்கிறது கட்டுரை. மேலும், அப்படி என்றால் பொருளாதார வாதம் என்பதை என்ன என்பதாக கிரம்சி பார்க்கிறார் என்றால் :

அதாவது 'அடித்தளம்'(structure) மேல் 'கட்டுமானம்' (superstructure) என்பதில் மேல் கட்டுமானம் செயற்பாடுகள் அற்ற அல்லது அது கொண்டிருக்கின்ற இயங்கு விசையை மந்தமாக(passive) மதிப்பிடப்படுகிறது என்கிறார். அதன்படி, மேற் கட்டுமானம் வெறுமனவே தோற்றப்பாடுகளின் நிகழ்வாகக் கொள்ளப்படுகிறது. வரலாற்றுப் போக்கில் அது கொண்டியங்குகின்ற பரிணாம நிர்ணயிக்கும் போக்கை நிராகரிப்பதாகும். அது கொண்டிருக்கின்ற சார்பளவிலான சுயாதீனத்தைக் கைவிடுவதால் எல்லாமும் பொருளாதரவாதமாக பார்க்கப்படுகிறது. என்று தொடர்கிறது கட்டுரை.

இரண்டாம் அகிலத்திலிருந்தவர்கள்(பொருளாதார வாதிகள்) ஒரு கருத்தினை முன் வைக்கின்றனர் அது-(evolutionary - determinist conception of history) அதாவது முதலாளி வர்கம் வளர தொழிலாளி வர்க்கத்தினர் பெருக்கம் உண்டாகும் -தொழிலாளி வர்க்கத்தினர் நெருக்கடிக்குள்ளாவர்- தொழிலாளி வர்க்கம் நெருக்கடிக்கு உள்ளானால்-போராட்டம் வரும் போராட்டம் வந்தால்-' புரட்சி வரும்'.- இது ஒரு வகை போக்கு (tendency) மட்டுமே ஒழிய இயற்கை விஞானம் போல் எதிர்வு கூற தக்கதல்ல. மிக எளிமைப்படுத்தப்பட்டதாக பார்வை. (முன்னர் என் தோழி குறிப்பிட்டது இதனடிப்படையில் இருக்கலாம் என்று நினைக்கிறேன்)

அதாவது புரட்சி தவிர்க்க முடியாதது. மனிதர்கள் தலையிட்டாலும் இல்லா விட்டாலும் அது நடந்தே தீரும் என்பதாகும்.(புரட்சியை மனிதர்களான நாம்தான் செய்ய வேண்டும் தானாக நிகழாது)
இருந்த போதும் புறக்கரணங்கள் அதன் மாற்றங்களின் மிக முக்கிய பங்கையும் மறுப்பதற்கில்லை.

அதாவது சமூகத்தின் இயங்கு போக்கை ஒரு வகையான விதி வாதமாக(fatalism) பார்ப்பதாகும். இது 'வரலாற்றின் சக்திகளை' ஒரு வகை குறுட்டுவாத நம்பிகை சார்ந்த போக்காக (blind belief) இருக்கிறது . அதாவது முதலாளித்துவம் தனது அக முரண்பாடுகளினால் தானே தன்னை உடைத்துக் கொள்ளும் என்பதாகப் பார்ப்பது.

இத்தகைய போக்கை அன்றைய மாக்ஸியர்களிடம் அவதானித்த கிராம்ஸி 1917 இல் இரஸ்யாவில் நடை பெற்ற புட்சியை சுட்டி, அது மாக்க்ஸினுடைய மூலதனத்துக்கு எதிராக நடந்த புரட்சி "The Revolution against 'Das Kapital' ) என்று தலைப்பிட்டு அன்றைய தனது பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதுகிறார்.

அதாவது மேற் சொன்ன விதி வாதத்தின் படி ஜேர்மனியில் நடைபெறவேண்டிய புரட்சி அதற்கு எதிராக அல்லது அதை மறுத்து ரஸ்யாவில் நடந்த புரட்சி என்பதைக் குறிக்கிறது. வரலாற்றில் இத்தருணத்தில் இறுகிப்போய் கிடந்த நேர அட்டவணையை உடைத்து(broken the iron timetable of the stages of history) வரும் மட்டும் காத்திராமல் புரட்சியை பொல்சிவிக்குகள் போராடிக் கைப்பற்றியதைப் பாராட்டுகிறார்.

இருந்த போதும் இத்தகைய விதி வாதம் என்பது போராட்டத்தில்(ஒரு அமைப்பு) நீடித்து நிற்பதற்கு உதவுகிறது. வரலாற்றில் போராட்ட சக்திகள் தோல்விகளில் தொலைந்து போகாமல் காப்பாற்றும், நியாயம் கேட்கும் உந்து சக்தியாக இருக்கிறது. அதாவது முதலாளித்துக்கு எதிரான போராட்டத்தில் நாம் சரியான பக்கத்தில்தான் இருக்கிறோம் இறுதி வெற்றி எமக்கானதுதான் என்ற ஆறுதலுக்கு உதவுகிறது என்கிறார்.

ஆனால் இத்தகைய விதி வாதத்தை வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் இன்றியமையாத தன்மையாகப் பாவனை செய்வது, செயற்பாட்டை மறுத்த முழு முட்டாள் தனம் என்று சாடுகிறார்.

பொருளாதார அடித்தளம், விதியாக எங்கும் எப்போதும் எதிலும் அடிப்படையான மாற்றங்களை என்பதை நிராகரித்து, மிக இறுதியான ஆய்வில் நிர்ணயிக்கும் காரணியா இருக்க முடியும் எனச் செல்கிறார். அது கூட சூட்சுமானதாக இருக்க முடியும்.

உற்பத்தி சாதனங்கள் தனியுடைமையாக இருப்பது முதலாளித்துவத்தின் அவசியமான நிலைமை என்ற போதிலும், சமூகத்தில் உள்ள அத்தனை பிரச்சனைகளுக்குமான தனி ஒன்றாக அதை மட்டும் பார்ப்பதை மறுக்கிறார்.

பொருள் வகை நிலைமை,சித்தாந்தங்கள், சர்வதேச, தேசிய நிலைமைகள் சமூகத்துக்குள்-மனிதர்களுக்குள் நாட்டுக்குள் ஏற்படுத்துகின்ற தாக்கங்கள், மாற்றங்கள் அவை பெறுகின்ற குறிப்பான(particular), தனித்துவமான(individual), பொதுவான(universal) பண்புகளைப் பெற்றிருப்பதை கனத்தில் கொள்ளவேண்டும் .

இவை எல்லாமும் எல்லா இடங்களிலும் எல்லா சமுதாயங்களிலும் எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரே மாதிரியாக வளர்வதுமில்லை தாக்கங்களை விளைவிப்பதுமில்லை. ஒரு வரலாற்றுக் கட்டத்தில் ஒரு சமுதாயத்தில் எப்படியாக இணைத்து-மறுத்து எத்தகைய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்பதின் வழியே போராட்டங்கள் அமையவும் பெறும் எனவும் சொல்கிறார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிற்போக்குத்தனங்களும் - தப்பெண்ணங்களும் : ஒரு அலசல்!!

சுயமரியாதை திருமணம் என்ற பெயரும்; பாலிய அயோக்கியனும்...

கோணங்கியுடைய பாலியல் குற்றங்களும் பதட்டமடையும் ஜெ.மோகனும்