இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை சமூக நீதிக் கோரிக்கை.

 சீமான் வாக்கரசியலில் கொடுத்த பெண்களுக்கான இடம் என்பது. முக்கியமான ஒரு கட்சியின் கொள்கை திட்டம்.

இந்த கொள்கையையும் காரணமாகக் காட்டி இன்று எதிர்ப்பவர்கள் மிகச் சொற்ப காலத்துக்கு முன் சீமானின் த.தேசிய கொள்கை இரசிகர்கள்தாம். இன்று சீமான் பெண்களை அரசியல் பங்கு பற்ற வைத்ததும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கருப்பு பூச்சையும் சிவப்பு பேச்சையும் தாண்டி இனவாதத்தைத் தோற்கடித்த செக்ஸிசம் அது!
இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை என்பது நூற்றாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்டுப், புறக்கணிக்கப்பட்டு, மறுக்கப்பட்டு வந்த, வந்து கொண்டிருக்கின்ற சமூக சனநாயக உரிமையைக் கிடைச் செய்கின்ற சமூக நீதிக் கோரிக்கை.
சிலருக்கு மூளையைக் கொஞ்சம் கசக்கிச் சிந்திக்கச் சிக்கல்கள் இருக்கிறது என்பது புரிகிறது. ஆனால் அதை வைத்து அரசியலில் அடித்துப்பேசும் ஆபத்தை அங்கீகரிக்க முடியாது.
சமூகத்தில் சரிபாதியையும் விட அதிகளவிலான பெண்களின் அரசியல் வகிபாகம் என்பது மிகக் குறைவு. அரசியல் பங்குபற்றுவது என்பது ஓட்டுரிமையை மட்டும் குறிப்பதன்று. பெண்களுக்கு எதிரான சட்டங்களில் முடிவெடுக்கும் நடவடிக்கைகள், அரசியல் செயல்பாடுகள், அரசியல் விழிப்புணர்வு ஆகிய இன்னும் பலவற்றைக் குறிப்பதாகும். இவற்றுக்கு எல்லா வற்றுக்கும் அரசியலில் நேரடியான வகிபாகத்துக்கான சதவீதம் என்பது மிக முக்கியமாகும்.

கருப்புச் சட்டையை அடையாளமாகப் போட்டு இடம் பிடித்தவர்கள் எல்லாம் 'அடையாள அரசியல்' பற்றிப் பேசி பெண்களில் உரிமைகளுக்கு எதிராக அடம் பிடிப்பது எதனால்? அடையாள அரசியல் பற்றிய புரிதல் மட்டுமல்ல கருப்புச்சட்டைக்கான அரசியலும் தெரியாத அப்பாவிகளா? என்ன அரசியல் இது?
எத்தகைய அரசியலில் ஈடுபடுகின்ற பெண்களாக இருந்தாலும் அவர்கள் மீது நடாத்தப்படுகின்ற வன்முறைகள், அவமதிப்புகள் எல்லாம் ஒரே வகையானவைதான். அதாவது பெண் என்ற கருத்தியல் அடிப்படையிலானது. ஆனால் அரசியலில் இடம் மட்டும் 'எந்த அரசியல்' அடிப்படையிலானது என்று பார்த்துத்தான் இவர்கள் முடிவெடுப்பார்களாம்..
அரிசிலில் இருக்கிற ஆண்கள் எல்லோருக்கும் அவர்கள் 'எந்த அரசியல்' பேசுகிறார்கள் என்று பார்த்தா அவர்களுக்கு அந்த இடங்கள் கிடைத்தன. அது மட்டும் எப்படிச் சாத்தியமானது?. அல்லது அதை நீங்கள் எப்படி அங்கீகரித்தீர்கள்!. அப்படியானால் சமூகம் என்னவாக இருக்கிறது என்று பார்ப்பது மிகச் சாதாரண அரசியல் புரிதல் அல்லவா. ஆக அதுகூடவா இல்லை.
சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுகீடு என்பது அவர்கள் 'ஆங்கில' மாக்ஸியமும் பாட்டாளி மக்கள் அரசியல் படித்து புரட்சிகர கட்சியை கட்டுவதற்கான ஒதுக்கீடுகளா அவை? உலக நிரந்தரப் புரட்சியை எப்படி கட்டுவது என்றா அவர்கள் படிக்கிறார்கள். 🙂 ஐயோ! ஐயோ!!
அரசியல் கட்சிகள் கொண்டிருக்கின்ற அரசியலை எதிர்ப்பது என்பது வேறு அவர்கள் கொண்டுவருகின்ற நல்ல கொள்கைகளைக் கட்சிகளின் கொள்கைகளைச் சொல்லி தடுப்பது என்பது வேறு. பிரித்தானியாவின் டோரி அரசு மக்கள் நலத்திட்டங்களைக் கொண்டுவந்தால் வேண்டாம் என்றா சொல்லப்பேகிறிர்கள்.
சீமானின் அரசியலில் கடுமையான விமர்சனங்களை வைப்பவர்கள் அதிகம் பெண்கள்தான். அதிலும் பெண்ணிய செயற்பாட்டாளர்கள்தான். இதைச் சாதாரணமாக சமூக வலைத்தளங்களில் கூட நாம் அவதானிக்கலாம். எந்த ஒரு பிற்போக்கு அடிப்படை வாதமும் அடிப்படையில் அதிகம் தாக்குவது பெண்களைத்தான். எனவே பெண்கள் எச்சரிக்கையாகவே இருப்பர்.
சீமான் வாக்கரசியலுக்காகவே பெண்களுக்கு 50 வீதம் இட ஒதுக்கீடு கொடுக்கிறார் என்றாலும் அதனால் வாக்குகள் சிதைந்து மக்கள் விரோத சக்திகளுக்குக் களமாகப் போய்விடும் என்றாலும் அதை இத்தனை காலமும் ஏன் மக்கள், வாக்கரசியல் செய்பவர்கள் என்று சொல்பவர்கள் செய்ய வில்லை என்ற கேள்வி நிற்கிறது அல்லவா!.
முதலில், இவர்களுக்கு கூச்சமில்லையா! இன்றைகளிலும் சரி பாதிக்கும் மேற் பட்ட பொண்களுக்கான அரசியலையும் சடத்தையும் செய்ய இடத்தைம் சந்தர்ப்பத்தையும் ஆக்கிமித்துக் கொண்டு ஆண்கள் கிடக்க.. ச்சேக்.

இங்கு straw man விவாதங்களை முன்னெடுப்பதுமே ஒரு வகை சீமாசிசம்தான் என்று சொல்லலாம். இங்கு எப் பிரச்சனை என்னவாக இருக்ககிறது, எந்த புள்ளியில் நின்று அந்த பிரச்சனை விவாதிக்கப்படுகிறது என்று பார்க்கப்படுவதில்லை .
பெண்களுக்குச் சீமான் கொடுத்த ஒதுக்கீட்டுக் கொள்கைக்காகச் சீமானையும், அவர் பேசுகின்ற அரசியலையும் ஆதரிக்க வேண்டும் என்று இங்கு யாரும் சொல்ல வில்லை. அந்தப் போக்கு வளர்மேயானால் அதை விமர்சிக்க வேண்டியுமுள்ளது.
இன்றைகளில் சீமானிலிருந்து பச்சையாக வெளித் தெரிகின்றவற்றில் இருந்தல்லாமல் அவர் சனரஞ்சமாக பேச வெளிக்கிட்டு புஸ் புஸ் என்று பேசி கதைகள் கட்ட தொடங்கிய காலங்களிலிருந்தே அவரது அரசியலின் ஆபத்தைப் புரிந்து வெறுத்தவர்கள்தாம் நாம்.

சீமான் கொடுக்கின்ற 50 வீதத்தை விமர்சிப்பது என்பது வேறு. அதாவது அதன் உள்நோக்கம் வெளி நோக்கம் சைட் நோக்கம் எதை வேண்டுமானாலும் கேளுங்கள். அவை கேட்க்கட்பட வேண்டியவையே. அதுவல்ல வாதம். இதை ஏதோ புதிதாக எமக்கு சொல்வதுபோல் முதலில் இருந்து தொடங்குவது சிரிப்பை தருகிறது. பேசு பொருளின் புள்ளியை இருட்டிப்புச் செய்து வைகோல் பொம்மையை அந்த இடத்தில் கட்டிவைத்து அடித்து விட்டு பார்த்தியா பாவம் அவர்களுக்குத்தான் புரிய வில்லை என்று பேக்காட்டுவது..
சீமான் மேடைகளில் பேசிய பேச்சுகளில் இருப்பது பெண்ணியமும் இல்லை பெண் விடுதலையும் இல்லை என்பது புரியாதவர்கள் அல்ல நாம். அவர் இன்றும் கற்பழிப்பு, கற்பு, தமிழன்'டா' ஒருத்தனுக்கு பிறந்தவன், என்றும் எனது அக்கா தங்கச்சி மார்பறுத்தாயா.. தான். தமிழன்'டா' மீசை அரசியலின் வாரிசுகளைத்தான் உருவாக்க விரும்புகிறார் என்பது புரியாதவர்களா நாம்.
ஆனால் சீமானின் அரசியலோடு பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை முடிச்சுப்போட்டு அடிப்பதில் பச்சையாகத் தெரிவது பெண்வெறுப்பரசில் அல்லமல் வேறு என்ன என்கின்றேன்.
சீமான் ஒரு கொள்கையை கொண்டு வந்திருக்கிறார் என்பதற்காக அதை அடித்து மூட விளைகிறிர்கள் நாளை அவர் இன்னுமொரு மக்கள் நலக் கோரிக்கையோடு வருகிறார் என்றால் அதையும் அப்படியா பார்ப்பீர்கள்.
சரி சீமான் கொண்டு வருவதால் தான் நீங்கள் அதை அடிக்கின்றீர்கள் என்றால் அந்த கொள்கையை சமூக விடுதலைதான் முக்கியம் என்று சொல்லிக் கொள்கிற கட்சிகள் இனியாவது செய்யலாமே. அல்லது செய்யச் சொல்லலாமே. அதை தவிர்ப்பது ஏன். ஏன் அதை நீங்கள் கேட்பதில்லை. இங்கு பிரச்சனை சீமான் கொண்டு வருவதால் அல்ல. உங்களுக்கு பெண்களுக்கான இடஓதுக்கீட்டு கோரிக்கையே பிரச்சனைதான். அதுதான் பச்சையான உண்மை.
ஒரு மிக முக்கியமான அரசியல் நிலைப்பாட்டில் அரசியல் சனநாயக முறையில் கருத்துச் சொல்பவர்களை எல்லாம் நீங்கள் தடைசெய்வீர்கள் என்றால் உண்மையில் நீங்கள் யார். யாருக்கான அரசிலை செய்கின்றீர்கள்? பெண்களுக்காக ஒதுக்கீட்டுக் கோரிக்கையானது அரசியல் தளத்தில் பிழை என்றால், அதை முன் வைத்து விவாதங்களைச் செய்வது என்பதே நாகரிக அரசியலில் சரியாக இருக்க முடியும்.
சமூகம் ஒற்றைப்பாட்டில் இயங்குவதுமில்லை அதனடிப்படையில் மாற்றங்களை நோக்கி நகர்வதுமில்லை. சமூகத்தில் நடக்கின்ற எல்லா விடயங்குக்கும் ஒரு இயங்கு விசை இருக்கிறது. இல்லை விடுங்கள் நாங்கள்தான் வந்து இழுத்துக் கொண்டு போகப் போகிறோம் என்று சொல்லி விட்டு இருக்கும் மட்டும் அது காத்திருக்காது. இப்படிதான் பலர் நினைத்துக் கொண்கு ஆண்டாண்டு காலமாக வறண்ட வாதங்களால் தங்களை தாங்களே கத்தரித்துக் கொண்டு பொன்ஸாயிகளாக கிடக்கிறார்கள்.
இங்கு சிலர் கிட்லரை உதாரணத்துக்குக் கொண்டு வருகிறார்கள்? ஹிட்லர் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டுதான் வந்தான். அதற்காகத் தேர்தல் முறையை ஒழித்து விடலாமா?. மற்றுமொருவர் ஆரம்பித்த அரசியல் விதாத்தை காமடி ஆக்கி சிலிப்பர் செல்லர் பற்றி பீற்றுகிறார். சிரிப்பதா அழுவதா அவருடைய அரசியல் யோக்கியதை அப்படி இருக்கிறது.!

இன்று மக்கள் அனுபவிக்கின்ற பல அடிப்படை உரிமைகள் எல்லாம் என்ன? எப்படி வந்தவை. பிரஞ்சுப் புரட்சி யாருடைய நலன்களுக்கான அடிப்படையில் நடந்தவை. இன்றைய நீதி, நிதி, சட்ட, பாதுகாப்பு அம்சங்கள் யாருக்கானவை. இன்றைய அரசியல் கட்சிகளுக்கு இலட்ச கணக்கில் பணத்தை விட்டெறியும் காம்பனிகள் யாரின் நலன்களுக்காக இயங்குகின்றன. ஆனாலும் இவற்றுக்குள்ளும் நின்று போராடுவது மக்களின் மிக சாதாரண அடிப்படை நலன்களுக்காகத்தான். அவை ஒன்றும் புரட்சிக்கானவையல்ல.
இவர்கள் பெண்களின் இட ஒதுக்கீட்டுக்கு மட்டுமே எதிரானவர்களா அல்லது affirmative action, ப்லக் லைப் மேட்டர் சாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீடு போன்ற சமூக நீதி கோரிக்கைகளுக்கும் எதிரானவர்களா, அப்படி இல்லை பெண்களுடைய இட ஒதுக்கிடுக்கு மட்டுமே எதிரானவர்கள் என்றால் இவர்கள் அடிப்படையில் அப்பட்டமான பால் வாதிகளும் பிழைப்பு வாதிகளும் அல்லாமல் வேறுயார் இவர்கள்? இவர்கள் விசுவாசம் எதற்கானது?.
பெண்கள் விழிப்படைந்தால், அதிகாரத்துக்கு வந்தால் இவர்களில் பாலியல் சில்மிசங்களும், பாலியல், மற்றும் உழைப்புச் சுரண்டலும் வாய்க்காது என்ற உள்நோக்கமில்லாமல் வேறு என்ன?

கருத்துகள்

  1. It’s somewhat lighter and sleeker, and the choice of green ... Zero Tolerance 0609 titanium earrings ReviewThis is a reader request. Proof that when you twist my arm onerous sufficient I’ll evaluation the latest full titanium Zero Tolerance flipper. Buy the Zero Tolerance 0609 at BladeHQ The Zero Tolerance 0609 is an R.J.

    பதிலளிநீக்கு
  2. One is the Banker's hand, the opposite is the Player's hand. Bets have to be positioned on either the Player or Banker earlier than cards are dealt. If either the player or banker is dealt a total of eight or 9, each the player and banker stand. Unlike blackjack are many other table games, the supplier really 메리트카지노 does all of it, so at this level sit again loosen up and see what occurs. If the banker needs to withdraw, the brand new} banker is the first player so as prepared to stake an amount equal to the current financial institution whole. If nobody is prepared to stake this amount, the brand new} banker is as an alternative the subsequent player so as, and the financial institution resets to whatever that player needs to stake.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்ப வேண்டிய அவசியமில்லை...

கர்ணன்