பாலியல் தொழில் செய்வோருக்கான சட்ட பாதுகாப்பு - உச்ச நீதி மன்றம்..
பாலியல் தொழில் செய்வோருக்குச் சட்டத்தின் கீழ் சமமான மரியாதையும் பாதுகாப்பும் உண்டு. அவர்களது குழந்தைகளும் கண்ணியத்துடன் நடாத்தப்பட வேண்டும். என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குறிப்பாகக் காவல் துறையினர் இவர்கள் மீது நடத்துகின்ற மோசமான மனிதநேயமற்ற விசானைகளை கடுமையாகக் கண்டிக்கும் படியாக இந்த தீர்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது. மே 19 வெளியாகியிருக்கும் இத்தீர்ப்பு தன் விருப்பத்தின் பேரில் இத் தொழிலில் ஈடு படுபவர்கள் குற்றவாளிகள் அல்ல. மேலும் இதில் ஈடுபடுபவர்கள் பாலியல் புகார் மற்றும் வன்முறை தொடர்பாகத் தெரிவிக்கும் நிலையில் சக பெண்களுக்குப் போன்றே குற்றச்சாட்டை அணுக வேண்டும் போன்ற மிகப் பலமான அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த உச்ச நீதிமன்ற அரிப்பைத் தொடர்ந்து சிலர் பொதுத் தளங்களில் அவர்களின் ''புனித முற்போக்கு மன நிலையை'' வெளிப்படுத்துவதையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
இதுதான் தொழில் இது தொழலில்லை என்பதும் 'உயர்ந்த தொழில் இது தாழ்ந்த தொழில்' என்று முடிவெடுக்கும் மன நிலையை ஒத்ததாகவே எனக்கு தோனுகிறது. ஒரு சமூகத்தின் ஏற்றத்தாழ்வில் சவுகரியங்களை அனுபவிக்கின்ற privilege's மனப் போக்கிலிருந்தும் வருவதாகவும் படுகிறது.
கருக்கலைப்பு உரிமையிலிருந்து பிள்ளை பெறுவதில் பெண் முடிவெடுக்கும் பெண் தன் உடல் மீதாகக் கொண்டிருக்கிற உரிமையிலிருந்து இங்கு எல்லாமே உடலோடும் உணர்வோடும் தொடர்பானவைதான். அப்படியானால் இந்த உரிமைகளுக்குக் கிடைத்த சட்ட அங்கிகாரத்திற்கு எதிராகவும் பேசலாமா?.
அதுமட்டுமல்லாமல் புனிதங்களாகக் கட்டமைத்திருக்கின்ற 'குடும்பம்' அதனூடானதான உடல்- உறவு- பின் குழைந்தைப் பேறு அதில் மிக முக்கியமாக இருக்கின்ற 'அப்பன் பெயர்' போன்ற தனி உடமை தந்தைவழி நிலவுடைமை சிந்தனை. அதற்குச் சேவகம் செய்வதற்காகக் கட்டிக் காக்கப்படுகின்ற சித்தாந்த கருவிகளின் ஒன்றான மதங்கள் கட்டிக்காக்கின்ற 'புனித கும்ப' வழி வந்த பெண் உடலில் பெண்ணுக்கு உரிமையில்லை என்ற அடிப்படை உடையதாகும்.
சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தினம் ஜூன் 2 அனுசரிக்கப்படுகிறது. பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் உலகெங்கிலும் உள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் வன்முறை கடத்தில் விருப்பத்திற்கு மாறாகத் திணித்தல் மற்றும் பழிவாங்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை உள்ளடக்கியதாக உள்ளது.
பாலியல் தொழிலாளர்கள் பற்றிய உரையாடலும் அவர்களுக்கான சட்ட பாதுகாப்பு உரிமைகள் தொடர்பான வாதங்கள் 1970 கள் மற்றும் 1980களில், பலம் பெறுகிறது. இவை அமெரிக்காவில் பால்வினைத் தொழிலாளர் உரிமைகளுக்கான அணிதிரட்டலுக்கு வழிவகுத்தது. கரோல் லீ 1980 களின் முற்பகுதியில் "பால்வினை வேலை" என்ற வார்த்தையை உருவாக்கியிருந்தார்.
பாலியல் தொழிலாளர்களுக்கா பேசுவது மேட்டிமையான அறிவுத்தனமாகவும் மற்றைய தொழிலாளர்களுக்காக அல்லது ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் பேசுவதுதான் ஒரு புனித போராட்ட விடயமாகவும் சமூக போட்டவாளர்கள் மத்தியில் ஒரு பிம்பம் கட்டப்பட்டுள்ளது. பாலியல்தொழிலாளர் தொடர்பான தீண்டாமை மன நிலைக்கு அதுவே அளவு கோள்.
இவர்கள் எல்லாம் யார் என்று பார்த்தீர்கள் என்றால் இந்த உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் அசூசையை உணர்பவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த முடிவைப் பகிரவோ பகிரப்படும் தகவல்களுக்கு லைக்கை தட்டவோ பகிரங்கப் படுத்தவோ ஏன் இது பற்றிய உரையாடலை மேற்கொள்ளவோ வெட்கப்படுபவர்களாக இருக்கின்றனர்.
நாம் பலர் செய்கின்ற வேலைகள் நம் விருப்பத்தில் செய்வதில்லை. நிர்ப்பந்தம், தேவை, வேறு வழிகள் மறுக்கப்பட்டமை, அல்லது தள்ளப்பட்டமை என்று பல காரணங்கள் உண்டு. இந்தப்படையில் எந்தவெரு தொழிலையும் 'வேண்டும்' 'வேண்டாம்' இது தொழில் இது தொழிலை என்று எவரும் வெளியிலிருந்து முடிவெடுக்கவோ சொல்லவோ அதிகாரமில்லை. அவரவர் வாழும் சமூகமும் அவர்கள் வழும் நிலையுமே அவற்றை முடிவெடுக்கின்றன ?
இதுதான் தொழில் இது தொழலில்லை என்பதும் 'உயர்ந்த தொழில் இது தாழ்ந்த தொழில்' என்று முடிவெடுக்கும் மன நிலையை ஒத்ததாகவே எனக்கு தோனுகிறது. ஒரு சமூகத்தின் ஏற்றத்தாழ்வில் சவுகரியங்களை அனுபவிக்கின்ற privilege's மனப் போக்கிலிருந்தும் வருவதாகவும் படுகிறது
எந்த தொழிலும் உணர்வுகளோடும் உடலோடும் தொடர்பானதே. இல்லை என்று எவராலும் மறுக்க முடியாது. மிக அதிகப் பணம் உழைத்துத் தருகின்ற வேலையாக இருந்தால் என்ன மிக விளிம்பு நிலை மக்கள் செய்கின்ற தொழிலாக இருந்தால் என்ன? அதிலும் உழைப்புச் சக்தியை விற்கும் நிலையில் நடை பெறுகின்ற சுரண்டல் என்பது உணர்வுகளோடு தொடர்பானதுதான்.
கருக்கலைப்பு உரிமையிலிருந்து பிள்ளை பெறுவதில் பெண் முடிவெடுக்கும் பெண் தன் உடல் மீதாகக் கொண்டிருக்கிற உரிமையிலிருந்து இங்கு எல்லாமே உடலோடும் உணர்வோடும் தொடர்பானவைதான். அப்படியானால் இந்த உரிமைகளுக்குக் கிடைத்த சட்ட அங்கிகாரத்திற்கு எதிராகவும் பேசலாமா?.
பாலியல் தொழில் செய்வோருக்கான சமூகப் பாதுகாப்பு அந்தஸ்து அவர்கள் குழந்தைகளை சக குழந்தைகளாகப் பார்ப்பதற்கும்- ஏற்பதற்குமான உரிமை என்பன மிக மிக அடிப்படையிலானது. இதில் எந்த சொட்டு மாற்றுக் கருத்திலேதும் இருக்க முடியாது. (இருக்குமானால் மடையில் இருக்கும் கொண்டையை நன்றாக மண்னெனை ஊற்றிக் கழுவவும்.) இந்த அடிப்படை மாற்றம் குறைந்த பட்சம் சட்டத்தின் அடிப்படையிலேயே நிகழ வேண்டியுள்ளது. அதற்கு அச்செயற்பாட்டினை முதலில் தொழிலாக அங்கீகரிக்க வேண்டும்.
பாலியல் தொழிலுக்குச் சட்ட அங்கிகாரத்தை வேண்டுகிற செயற்பாட்டைக் கொச்சைப்படுத்துகின்ற படியாக அத்தொழிலை ''கொண்டாடுவதாக'' சொல்வது என்பது 'கற்பு பற்றிய கற்பிதம்' முற்றாக கலையப்படதா அழுத்தம் இருக்கலாம்.
இன்னும் ஒரு சாரார் எல்லாம் சரிதான் ஆனால் பாலியல் தொழிலை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். இந்த 'ஆனால்' என்பதற்குள்ளும் 'ஒழிக்கப்படவேண்டும்' என்பதற்குள்ளும் பாலியல் தொழில் மட்டும்தானா உள்ளது என்று கேட்டால் பதில் இல்லை. சரி எப்படி ஒழிப்பது என்றாலும் பதில்லை.
சொடக்குப் போடும் நேரத்தில் பாலியல் தொழிலை 'ஒழித்தே' ஆகி விட்டது என்றாலும் அவர்கள் பற்றிய சமூக பார்வையை மாற்றி சக மனிதர்களாக வாழ ஒரு சமூகத்தை அதே சுடக்கு நொடியில் மாற்ற ஏதாவது மந்திரம் தந்திரம் உண்டோ? வர்க்கத்தைப் பிடிக்கும் மட்டும் காத்திருக்க வேண்டியதுதான்.
இங்குப் பல இலட்சக் கணக்கான திருமணங்கள் சாதி, பணம், தொழில், அந்தஸ்து, அடிப்படையிலேயே நிர்ணைக்கப்படுகிறது. இதற்குள் பணம் பொருள் பக்கவாடா இல்லையா? பணத்தையும் விட மோசமான சாதிய பரிவத்தனை நடைபெறுகிறதே!! ஆக அதில் நிகழ்கின்ற உடல் உறவுகள் 'காதல்' புனித அந்தஸ்து பெறுவது மட்டும் எப்படி சாத்தியம். அதையும் தாண்டி marital rape வாதத்தையும் இவர்கள் எப்படி எடுக்கப்போகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.
தத்தம் முக நூலில் கற்பு- பதிவிரதைகள் பற்றிய பொதுப் புத்தி புனித சாதிய ஆண்கள் 4 ஆயிரம் பேரும், வரட்டு மாக்சியர் 4 பேரும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் அடித்துவிட வேண்டியதுதான். லைக்கு சும்மா பிச்சிக்கிட்டுப் போகும்.
எந்த தொழிலுமே யாரும் யாரையும் சுரண்டினாலோ, விருப்பமில்லாமல் நிர்ப்பந்தித்தாலோ, பாதுகாப்பு இல்லாமல் நிகழ்ந்தாலோ, சிறுவர்களைப் பயன்படுத்தினாலோ இவை கடுமையான குற்றங்கள் என்பது பொதுவானவை. இந்த மோசமான செயற்பாடுகள் பாலியல் தொழிலில் அதிகமாக நிகழலாம். அதன் போது பாதிக்கப்படுபவர்களின் சமூக நிலையும் கடுமையாக இருக்கும். எத்தகைய சமூகம் என்பதைப் பொறுத்தது அவை. இது நிகழாமல் இருக்க பாலியல் தொழிலில் சட்டமாக்கப்படலும் அதே போல் அதிகம் அத்தொழிலுக்குத்தான் தேவையாகவம் இருக்கிறது என்பதும் முக்கியமாகும்.
ஆனால் அத் தொழிலுக்குள் தள்ளப்பட்டவர்கள் விரும்பி வருபவர்கள் வேறு வழியில்லாமல் வருபவர்கள், திட்டமிட்டே முதலாளித்துவம் தன் வருமானத்திற்கான அதை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை இங்கு யாரும் நியாயம் சொல்ல வில்லை. இந்த செயற்பாடுகளை எந்த தொழிலுக்கும் செய்ய முடியாது என்பதே சரியான வாதம். ஆனால் இங்கு 99 வீதமான உழைக்கும் மக்கள் தாங்கள் விரும்பி செய்யும் தொழிலைச் செய்வதில்லை. விரும்ப வைக்கப்படுகிறார்கள்.
பாலியல் தொழிலாளர்களின் பிரச்சனை பிரச்சனையாகப் பேசப்படாமல் அவற்றை மிக மிக ரொமன்டைஸ் செய்கிற போக்கு காலம் காலமாக நிகழ்ந்து வந்திருக்கிறது. இது அவர்கள் எதிர் கொள்கிற பிரச்சனையை இன்னும் இன்னும் தீவிரப்படுத்தியிருக்கிறது. அவர்கள் மீதான சமூப்பார்வையை மேலும் கீழானதாக மாற்றவே உதவியிருக்கிறது.
சொடக்குப் போடும் நேரத்தில் பாலியல் தொழிலை 'ஒழித்தே' ஆகி விட்டது என்றாலும் அவர்கள் பற்றிய சமூக பார்வையை மாற்றி சக மனிதர்களாக வாழ ஒரு சமூகத்தை அதே சுடக்கு நொடியில் மாற்ற ஏதாவது மந்திரம் தந்திரம் உண்டோ? வர்க்கத்தைப் பிடிக்கும் மட்டும் காத்திருக்க வேண்டியதுதான்.
மத தளங்களில் வேலை செய்கின்ற அல்லது மத தளங்களையே வர்த்தகமாக்குகின்றவர்கள் ஏற்றத்தாழ்வுகளையும் பாகு பாடுகளையும் அறிவுக்கு ஒவ்வாத செயற்பாடுகளையும் புனிதங்களாகவும் தொழிலாகவும் செய்வதை ஏற்றுக் கொள்கிறோம். அவர்களின் காலை தொட்டு வணங்கும் ஈனச் செயலை செய்கிறோம். ஆனால் உயிர் வாழ்வதற்காகவும் வேறு வழிகள் மறுக்கபட்டதாலும், ஏன் விரும்பியும் செய்யும் பாலியல் தொழில் எல்லாத் தொழிலைப் போல் அங்கிகரிக்கப்பட வேண்டும்.
தமிழ் நாடக தொடர் திரைத்துறை என்ற பெயரில் ஒளிபரப்பாகின்ற பல விடையங்கள் பாலியல் ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் பெருப்பிக்கின்றன பெண் அடிமைத்தனங்களையும் பிரச்சாரம் செய்கின்றன. ஆனாலும் அவர்கள் கலைஞர்களாகக் கொண்டாடப்படுகிறார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக