குழந்தைகளின் பால் உறுப்புகள் மீது நிகழும் வன்முறைகள்
பாலியல் இன்பத்தில் பெண் ஆணைவிட பல மடங்குகள் இயற்கையின்பால் ஆசிர்வதிக்கப்பட்ட அதிசஸ்ட்ட சாலி. இது ஆண்கள் எல்லோரும் அறிந்த உண்மை ஒன்றுதான். விஞ்ஞான ஆய்வுகளும் அதை தெளிவாக விளக்கியும் உள்ளன. அய்வுகள் அடிப்படையில் எழுதப்பட்ட பாலியல் கல்வி புத்தகங்களும் அதையே சொல்கின்றன.
ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குள் தோன்றிய மதங்கள் காலங்காலமாக அவற்றை பொய் என்று சொல்கின்றன. ஆண்தான் பாலியல் இன்பத்துக்கான கடவுளின் படைப்பு என்று அடித்துச்சொல்கிறது. பெண் என்பவள் ஆணுக்கான பாலியல் தேவைக்காகவும் இன்பத்துக்காகவும் படைக்கப்பட்டவள் என்பதை நேரடியாகவும் மறைமுகமாவும் கடவுளின் கட்டளையாவும் பெண்களையும் சேர்த்தே நம்பவைக்கிறது.
மதங்களின் படைப்பாளிகளும் காவலர்களும் ஆண்கள்தான் என்பதால் இது அவர்களுடைய சொந்த இருப்புக்காகவும் சவுகரிக நலனுக்காகவும் தேவைப்பட்ட ஒன்றாய் இருந்தது. அவரவர் சார்ந்த வர்க்கங்களின் செல்வாக்குடன் மதங்களின் கூட்டு முயற்சிகளின் ஒன்றாகதான் பெண்களின் ஒடுக்கு முறையை சாதித்தன.
பெண்களுடைய பாலியல் விடயத்தில் ஆண்கள் கடுமையாக நடந்து கொண்டமைக்கு காரணம் அடுத்த சந்ததியை பிறப்பிக்கும், உருவாக்கும் வல்லமை கொண்டவள் பெண் என்பதாலும்தான். பெண்ணுடைய பாலியல் தேவை அல்லது அது தொடர்பான தேடலை கட்டுப்படுத்தி வைப்பதால் மட்டுமே பெண்ணை தனது ஆட்சிக்குள் வைத்திருக்க முடியும் என்பதை நம்பினான். அதில் அவன் மிகப்பெரிய வெற்றியும் கண்டுவிட்டான் என்பது உண்மைதானே. அத்தகைய சுயநல வஞ்சக இன்பத்தை விட்டுக்கொடுக்க இலகுவில் ஆண் சம்மதிக்க மாட்டான். சமூகத்தில் இன்று பெண்கள் அதற்க்கு எதிராக எழும் போதெல்லாம் ஆண்கள் கலாச்சார காவல் நாய்களாக குரைப்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
''இங்கு பெண்கள் தமது மனம், எண்ணம், செயல்பாடுகளின் மூலம் தமது பாலியல் இன்பத்தை உறுப்புக்களின் செயற்பாடுகளுக்கு முன்னமே இழந்து விடுகிறார்கள் என்பதுதான் உண்மை. பாலியல் இன்பம் என்றால் என்ன என்று தெரியாத பெண்ணாக ஆண் முன் நடித்து புனித தன்மையை நிலைநாட்ட வேண்டிய நிர்பந்தம் இருக்கும்போது பால் உறுப்பின் தேவை பூச்சியமாகிப்போகிறது.மாடுபோல் உழைத்து 'தாய்மை' என்ற உறவை தியாகமாக மகன் முன் தாய் காட்டிக்கொள்வது போலவே மனைவியும் பாலியல் இன்பம் என்னவென்றே தெரியாத பேதையாக 'பத்தினி' அங்கிகாரத்துக்காக ஏங்கவைக்கப்படுகிறாள்''
பாலியல் இன்பத்தை தீர்மானிப்பது பால் உறுப்புகள்தான் என்று நம்பின மதங்கள். பால் இன்பத்தை ஆணுக்கு அதிகரிப்பதற்க்காகவும் பெண்ணுக்கு குறைப்பதற்க்காகவும் செயல் வடிவம் கொடுத்து கடவுளின் கட்டளைகள் என்று சாதித்தன. பெண்களுக்கு இயற்கை அளித்த அற்புதமான செயற்பாடுகளை 'தீட்டு' என்று தள்ளிவைப்பதில் தொடங்கி குழந்தைகளின் பால் உறுப்புக்களில் கத்தி வைக்கும் அளவு என அது நீண்டு சென்றது.
இஸ்லாமிய குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு செய்யப்படும் கிளிட்டோரிஸ் (clitoris) அகற்றல் பற்றிய Sharmila Seyyid இன் கட்டுரையை படிக்க கிடைத்தது. அவரது முயற்சி பாராட்டுக்குரியது. இந்தப் பிரச்சனை பேசப்பட வேண்டிய ஒன்று. எந்த மத கலாச்சார சாயங்கள் இட்டும் குழந்தைகளின் பால் உறுப்புக்களில் மத வன்மத்தை தீர்க்க அனுமதிக்க முடியாது. (கிளிட்டோரிஸ் இஸ்லாமிய மத சடங்காக இலங்கை போன்ற நாடுகளில் இருப்பது பற்றி நான் ஆரம்ப கால முக நூல் பக்கங்களில் விவாதித்ததால் இஸ்லாமிய முற்போக்கு பெண் செயற்பாட்டாளர்கள் என்று சொல்லப்படுகிற சிலர் என்னை தமது நட்பு பட்டியலிலிருந்து தூக்கிவிட்டனர் என்பது வேறு கதை.)
இங்கு நான் சொல்ல வருவது ஒன்றுதான் குழந்தைகளின் பால் உறுப்பில் அவர்களது அறியா வயதில் கத்தி வைக்கும்-கைவைக்கும் செயல் நிச்சயமாக பாலியல் வன்கொடுமையாகத்தான் பார்க்கப்பட வேண்டும். அது எந்த மதமாக இருந்தாலும் சரி எந்த சமூகமாகவிருந்தாலும் சரி. ஒன்றும் அறியா குழந்தைப்பருவத்தில் திணிக்கப்படும் மத நம்பிக்கையே சிறுவர் துஸ்பிரயோகமாக அறிவுசார்ந்தேரால் பார்க்கப்படுகிற இந்த காலத்தில் இருந்துகொண்டு திரும்ப சரிசெய்ய முடியாத பால் உறுப்பின் பாகங்களை நீக்குவது எப்படி நியாயமாக முடியும். ஒப்புதல் கொடுக்க முயாத வயதில் இருப்போர் மீது செய்யப்படுகிற அநீதி குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையே. அவர்கள் வளர்ந்த பின் தமக்கு தேவையானதை தாமே தெரிவு செய்யும் நிலையில் அவர்களுடைய பால் உறுப்பை வெட்டுவதும் ஒட்டுவதும் அவர்களுடைய விருப்பம், பாலியல் தேவை சார்ந்தது.
Sharmila Seyyid இப்படி கூறுகிறார்..
“இந்த இடத்தில் இன்னுமொன்றையும் கவனிக்கவேண்டும். அதாவது ஆண் உறுப்பில் முன் தோல் அகற்றுதல். 'கத்னா' என்றுஅழைக்கப்படுகின்ற இந்த வழக்கம் இஸ்லாமியர்கள் மத்தியில் 'சுன்னத்' ஆன கடமை. உங்களில் யாராவது கேட்கலாம் ஆண் பிறப்புறுப்பில் முன்தோலை நீக்குவது வன்கொடுமை இல்லையா? மனித உரிமை மீறல் கிடையாதா? அது என்ன பெண்ணுறுப்புச் சிதைப்பை மட்டும் வன்கொடுமை என்றும் உரிமை மீறல் என்றும் சொல்கிறீர்கள் என்று. ஆண் பிறப்பு உறுப்பில் முன் தோல் நீக்கம் செய்வது மருத்துவ ரீதியாகச் சரி காணப்பட்ட ஒரு செயற்பாடு.”
அவர் கூற வருவது எனக்கு ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் தருகிறது. அதாவது ஆண் குழந்தைகளுக்கு அவர்களது பால் உறுப்பின் மேல்தோல் (foreskin) அகற்றுவது மருத்துவமுறைப்படி சரியானது என்று கூறுகிறார். ஆனால் எந்தவொரு மருத்துவரும் ஆண் குழந்தைகளுக்கு பால் உறுப்பின் மேல்தோல் அகற்றப்பட வேண்டும் என்று சொல்வதுமில்லை, வலியுறுத்துவதுமில்லை. கிருமி தொற்றுக்கள் ஏற்படும் பட்சத்தில் மட்டுமே ஆண் பால் உறுப்பின் முன்னிருக்கும் தோலை அகற்ற மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இது எல்லாநோய்களுக்கும் பொருந்தும் ஒன்று. இங்கு சர்மிலா ஆண் குழந்தைகளுக்கு செய்வதை நியாயப்படுத்த முயற்சிப்பதானது செய்யும் தவறுகளை நியாயப்படுத்தவதாகும். குழந்தைகளின் பால் உறுப்புக்களில் மதங்களின் பெயரால் செய்யப்படும் வன்முறை ஆண் குழந்தைகளின் மீதும் நடக்கிறது. எக்காரணம் கொண்டும் இதை நியாப்படுத்த முடியாது என்பதே எனது வாதம்.
ஒருவொருவருக்கும் தத்தமது பால் உறுப்புக்களின் மீது ஓர் ஈர்ப்பும் காதலும் இருக்கும். ஒரு ஆண் குழந்தை வளர்ந்து தனது பால் உறுப்பு இயற்கையாக எப்படி இருக்கும் என்பதை பார்க்க ஆசைப்படும் அல்லது தேவைப்படும் நிலையில் அப்படி ஒரு சந்தர்ப்பத்தையே கொடுக்காமல் ஆக்குவது பாலியல்கொடுமையல்லவா?
''மதங்களின் படைப்பாளிகளும் காவலர்களும் ஆண்கள்தான் என்பதால் இது அவர்களுடைய சொந்த இருப்புக்காகவும் சவுகரிக நலனுக்காகவும் தேவைப்பட்ட ஒன்றாய் இருந்தது. அவரவர் சார்ந்த வர்க்கங்களின் செல்வாக்குடன் மதங்களின் கூட்டு முயற்சிகளின் ஒன்றாகதான் பெண்களின் ஒடுக்கு முறையை சாதித்தன.''
இத்தகைய கலாச்சார செயற்பாடுகளினால் பெண்குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது மிக கொடுமையானது. இவை எந்த அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இந்த செயற்பாடுகளில் உள் புதைந்திருக்கும் ஆணின் மனநிலையும் பொண் பால் ஒடுக்குமுறையில் மதங்களின் பங்கும் ஆராயப்பட்டு விமர்சிக்கப்பட வேண்டியவையே என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை. ஆனால் ஆண்குழந்தைகளுக்கு நிகழ்வதையும் போகிற போக்கில் நியாயப்படுத்தி விட்டுப்போக முடியாது.
ஆபிரிக்க நாடுகளில் செய்யப்படுவதைப்போல் பெண் குழந்தைகளுக்கு எமது நாடுகளில் கிரிளிரோரிஸ் முற்றாக அகற்றும் கொடூரம் நடப்பதில்லை என்பது சிறு நிம்மதியை தருகிறது. இங்கு பெண் பிறப்புறுப்பில் இருக்கும் பாகத்தை அகற்றுவது என்பதையும் தாண்டி ஆண்கள் பெண்களின் பாலியல் தேவை, இன்பம் மகிழ்சியின் மீது கொண்டிருக்கும் வன்மமே எனக்கு எரிச்சலை ஊட்டுகிறது.
பாலியல் இன்பத்தில் உறுப்புக்களின் பங்கு என்பது மிக சொற்பமானதுதான். 85 வீதத்துக்கும் அதிகமாக உந்தல் எண்ணதில் இருந்தே கிடைக்கிறது என்று பாலியல் ஆய்வுகள் சொல்கின்றன. அதுதான் உண்மை என்பதையும் நாம் எல்லோரும் உணர்ந்தும் இருப்போம். இருந்தபோதும் பால் உறுப்புக்களின் பங்கை திட்டமிட்டே தடுப்பது என்பது கேடு கெட்ட செயலாகும்.
இங்கு பெண்கள் தமது மனம், எண்ணம், செயல்பாடுகளின் மூலம் தமது பாலியல் இன்பத்தை உறுப்புக்களின் செயற்பாடுகளுக்கு முன்னமே இழந்து விடுகிறார்கள் என்பதுதான் உண்மை. பாலியல் இன்பம் என்றால் என்ன என்று தெரியாத பெண்ணாக ஆண் முன் நடித்து புனித தன்மையை நிலைநாட்ட வேண்டிய நிர்பந்தம் இருக்கும்போது பால் உறுப்பின் தேவை பூச்சியமாகிப்போகிறது.
மாடுபோல் உழைத்து தாய்மை என்ற உறவை தியாகமாக மகன் முன் தாய் காட்டிக்கொள்வது போலவே மனைவியும் பாலியல் இன்பம் என்னவென்றே தெரியாத பேதையாக பத்தினி அங்கிகாரத்துக்காக ஏங்கவைக்கப்படுகிறாள்.
தனது பாலியல் தேவையை வெளிப்படையாக பேச எத்தனை மனைவிமார் அல்லது காதலிகள் தயாராக இருக்கிறார்கள் என்பதிலிருந்து இதை புரிந்து கொள்ளலாம். பாலியல் தேவைக்காக நாடும் பெண்ணை வில்லியாகவும் கொடுமையான மனம் உள்ளவளாகவும் காட்டும் ஊடகங்கள் அதே செயலை ஆண் செய்யும் போது வீரமானவனாகவும் அல்லது மனைவியால் துன்பப்படுத்தப்பட்டு துரத்தப்பட்டவனாகவும் காட்டப்டுகிறது.
தனது பாலியல் சேட்டைகளை பாலியல் அறிவை அல்லது பல பெண்களுடன் உறவுகொண்டதை கெட்டித்தனமாக பேசும் ஆண்கள் அதையே மறந்தும் பெண் செய்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பார்கள். பாலியல் தேவையை இயல்பாய் வெளிப்படுத்தும், எழுதும் பெண்களை படுமோசமான கேவலமான சொற்களை பாவித்து அழைப்பதை சமூக நியாயமாக்கி வைத்துள்ளனர். தனது பெண் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதற்க்காக மிக நுணுக்கமாக காய்நகர்த்தல்களை செய்கிறார்கள்.
ஒரு விரல் நுனியின் சாதாரண தீண்டல் கூட பாலியல் இன்பத்தை நிர்ணயிக்கும் சக்திவாய்ந்ததாய் இருக்கும்போது பால் உறுப்புகள் மட்டும்தான் பால்இன்பத்தை தீர்மானிக்கும் காரணி என்று அடித்து சொல்லிவிட முடியாது. எனவே பால்இன்பத்தை இயல்பாய் உணரவும் அனுபவிக்கவும் முதலில் கற்பிதங்களில் இருந்து வெளி வரவேண்டும். அதேசமயம் எமது குழந்தைகளின் பால் உறுப்புக்களையும் மதகலாசச்சார பிற்போக்குத்தனங்களில் இருந்து கட்யாடாயாம் காப்பாற்றியாக வேண்டிட கடமையுமுள்ளது.
There are tons of beautiful promotions available at all times. Some of the reload dafabet bonus presents are greater even than the welcome presents you will find on many competitor websites. There additionally be|can be} a rewarding refer-a-friend bonus and regular cashback deals.
பதிலளிநீக்கு