சுயமரியாதை திருமணம் என்ற பெயரும்; பாலிய அயோக்கியனும்...
குறிப்பு: இந்த அறிக்கை 16.08.2021 அன்று முற்போக்கு வெளியை பெண்களுக்கு பாதுகாப்பாக மாற்றுவதற்காக செயற்படும் கூட்டமைப்பின் சார்பாக வெளியிடப் பட்டடு கையெழுத்திடப்பட்டது. அதை ஆவணப் படுத்தும் முகமாக இதில் மீள் பதியப்பட்டுகிறது. அதனுடைய முக நூல் இணைப்பு இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முற்போக்கு முகமூடிகளுடன் பெண்கள் மீது செய்யப்படும் சுரண்டல்களுக்கு எதிராக அணி திரள்வோம்
தம்மை முற்போக்குவாதிகளாகவும் புரட்சிகரச் சக்திகளாகவும் வெளியுலகிற்குக் காட்டிக் கொள்ளும் சில போலிகளின் முகத்திரைகளைக் கிழித்து அம்பலப்படுத்துவது சமூக மாற்றத்தை நோக்கி உழைக்கும் அனைவரினதும் கடமையாகும்.
உருவில் மனிதனாகவும் செயலில் மிருகமாகவும் இருப்பதை மாற்றி மனித தன்மையுடைய மனிதத் சமுதாயத்தை உருவாக்குவதே எனது லட்சியம் என்றார் தந்தை பெரியார்.
லண்டனில் வசிக்கும் Tamil Solidarity அமைப்பின் உறுப்பினரான பா. நடேசன் அன்மையில் திருமணம் செய்துகொண்டதும், அந்த திருமணம் தாலி, சடங்குகள் அற்ற புரட்சிகரத் திருமணம் என சமூக வலைத்தளங்களில் வியந்துரைக்கப் பட்டதும் நாம் அறிந்ததே.
இங்கே நாம் பேச முனைவது இந்தத் திருமணம் தொடர்பாக பலருக்கும் தெரியாது நடைபெற்ற ஒரு அயோக்கியத்தனம் பற்றியாகும்.
நடேசன் லண்டனுக்கு வருவதற்கு முன்பே, ஊரில் இருந்த போது ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார். இவர் லண்டன் வந்த பின்னரும் பத்து வருடங்களாக இந்த காதல் உறவு தொடர்ந்துள்ளது. இந்த உறவு பற்றி நடேசனுடைய நண்பர்கள், தோழர்கள் பலருக்கும் தெரிந்தே இருந்தது. சிலர் ஊருக்கு சென்ற காலங்களில் அவரை சந்தித்தும் பேசியுள்ளார்கள். இன்னும் சிலர் அவரோடு நடேசனின் காதலி என்ற வகையில் தொலைப்பேசியில் உரையாடியும் உள்ளார்கள்.
இவ்வருடம் ஜனவரியின் முதல் வாரத்துடன்(2021) இலங்கையிலிருந்த தனது காதலியுடன் முற்றாகத் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்து விட்டு, கடந்த மாதம் அதாவது யூலை மாதம்(2021) இன்னுமொரு பெண்ணுடன் திருமணம் முடிந்திருக்கிறது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவுச் சிக்கல்கள் பற்றியோ அல்லது உடைவுகள் பற்றிய புரிதல் இன்றி நாம் இந்த விடயம் பற்றிப் பேச முற்படவில்லை.
எமது சமூகத்தில் ஒரு உறவின் முறிவிற்குப் பின் ஒரு ஆணும், பெண்ணும் ஒரே மாதிரியான சிக்கல்களை முகம் கொடுப்பதில்லை.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்கு மூலம் படி அப்பெண் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டிருக்கிறார். அவரோடு காதல் உறவில் இருக்கும்போதே நடேசனுக்கு லண்டனிலும் வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்திருக்கிறது. இத்தகைய தொடர்புகள் பற்றி ஊரில் இருந்த காதலி விசாரித்த போது அவரிடம், 'நீ ஒரு பிற்போக்கு வாதி' 'உனக்கு நட்புகள் பற்றியோ வெளியுலகு பற்றியோ எதுவும் தெரியாது' என்றும் அடக்கி நம்ப வைத்திருக்கிறார்.
அத்துடன் அவ்வப்போது தனது காதலியிடம் பெருந்தொகையான பணமும் வாங்கியிருக்கிறார். அத்துடன் உறவை துண்டிப்பதற்கான பிரச்சனைகளை அவர் தெடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் அதாவது ஒக்டோபர் 2020 இல் இருவரும் ஒன்றாக வாழ்வதற்காக என்று 21ஆயிரம் பவுண்ட் பணமும் கேட்டிருக்கிறார். வீட்டை விற்றுத்தான் தரவேண்டும் என்பதாலும் அவசரத்துக்கு முடியாது என்பதாலும் அது தவிர்க்கப் பட்டிருக்கிறது.
எம்மை பொறுத்தவரையில் இப்பெண் காதல் என்ற பெயரில் திட்டமிட்டு சுரண்டப்பட்டிருக்கிறார். ஏமாற்றப்பட்டிருக்கிறார்.
18-19 வயதில் ஊரில் ஆரம்பித்த காதல் 15 வருடங்களாக அந்த நம்பிக்கையிலேயே உறுதியாக இருந்து கழிந்து இன்று வஞ்சிக்கப்பட்டு மனவுளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளார். அவரது வாழ் நாளில் பாதிக்கும் மேற்பட்ட காலங்கள் சுரண்டப்பட்டிருக்கிறது.
ஆனால் நடேசன் தனக்கான இணையைத் தேடுவதற்கான காலம் வரும் வரையில் இந்தப் பெண்ணை நம்ப வைத்து காத்திருக்க வைத்து, தேவையற்ற போது 'கழட்டி விட‘ அந்த பெண் மீதே பழி போட்டிருக்கிறார்.
நடேசனின் அண்மைய திருமணத்தை ஒட்டி, ஊரில் இருக்கும் காதலியின் நிலைமை தொடர்பாக அக்கறைகொண்ட சிலர் அவருடன் தொடர்பு கொண்டு விடயங்களை தெரிந்துகொள்ள முயன்றுள்ளார்கள். இதனால் தனது சுயரூபம் வெளிப்பட்டு விடும் என்று உணர்ந்த நடேசன், ஊரில் இருக்கும் முன்னாள் காதலிக்கு தொலைபேசி அழைப்பு மூலமாகவும், text messages மூலமாகவும் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். 8 மாதங்கள் எதுவித தெடர்புகளும் இல்லாதிருந்த அவர் திடீர் என்று அழைப்பெடுத்து எந்த பிரச்சனையென்றாலும் தன்னுடன் மட்டுமே பேச வேண்டும் என்றும் வேறு யாருடனும் பேச கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.
ஏற்கனவே கவலை மன அழுத்தத்தில் சிக்கி, அவற்றிலிருந்து விடுபடுவதற்காக போராடிக்கொண்டிருக்கும் அந்த பெண்ணை தொடர்ந்தும் தொல்லை செய்து வருகிறார்,
நடேசனின் இந்நடவடிக்கையைப் புரிந்துகொள்வதற்கு பின்புலம் பற்றிய ஆராய்ச்சிகள் அவசியமில்லை. எமது சமூகக் கட்டமைப்பில் ஆண்மை பெண்மை என்ற வரையறைகுட்பட்ட கருத்தாக்கம் எவ்வாறு இயங்குகின்றது என்பதைப் விளங்கிக்கொள்வது போதுமானது.
ஆணென்றால் எதேச்சதிகாரமாக நடந்து கொள்வதற்கான உரித்துடையவர் என்ற முறையில் பெண்கள் தமது இணையர்களால் உடல், மற்றும் உளவியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
பெண்கள் அனைத்து ஒடுக்குமுறைகளையும் சகித்துக்கொண்டு மௌனிகளாக இருக்க வேண்டுமென்பதே சமூகப் பொதுப்புத்தியாக இருக்கிறது.
முற்போக்குச் சிந்தனைகளை போதிப்பவர்களும், பெண்ணடிமை தனத்திற்கு எதிராக் குரல் கொடுப்பவர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்பவர்களும் தாம் சார்ந்த பெண்களுடன் ஆணாதிக்கச் சிந்தனையூடாகவே நடந்துகொள்கிறார்கள் எனும் போது வெறுப்பாக இருக்கிறது. அதிலும் முற்போக்கு அமைப்புக்கள் என்று சொல்லப்படும் அமைப்புகளில் இருப்பவர்களின் பொறுப்புணர்வும் அவர்களது தத்துவத்தின் உள்ளார்ந்த நடைமுறை சார் போக்கும் கேள்விக்குறியதாகிறது.
இவர்களின் போலித் தன்மையையும், சந்தர்ப்பவாத செயற்பாடுகளையும் கடந்து செல்ல முடியாது.
இதனால் பெண்களின் நலன்கள், பாதுகாப்பு, அவர்களின் சுரண்டல் போன்றவற்றில் அக்கறைக் கொண்ட எல்லோரும் அதற்கான எதிர்ப்பைப் பதிவு செய்தல் வேண்டும் என்று நம்புகிறோம். பொதுத் தளங்களில் இயங்கும் நீங்களும் பெண்களிற்கு இழைக்கப் படுகின்ற அநீதிக்காகக் குரல் கொடுக்க தயங்காமல் இணையுங்கள். அது ஒன்றே இச்சமூகத்தில் குறைந்த பட்ச பாதுகாப்பை பெண்களுக்கு உறுதிப்படுத்தும்.
பா. நடேசனின் இந்த அயோக்கியமான செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிப்பதுடன்,
• பதினைந்து வருடமாகத் தன்னைக் காதலித்த, தனக்காக காத்திருந்த பெண்ணை நடேசன் சில தற்காலிக சலுகைகளுக்காக ஏமாற்றியதாகவே நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு இவர் அந்த பெண்ணிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதுடன், தன்னை சுயவிமர்சனம் செய்ய வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்.
• அந்தப் பெண்ணிடம் இருந்து பெற்ற பணத்தை உடனடியாக திரும்பக் கொடுக்க வேண்டும் என்றும் நாம் வலியுறுத்துகின்றோம்.
• அத்துடன் அந்தப் பெண்ணை மேற்கொண்டு தொலைபேசி மூலமாகவோ, அல்லது குறுஞ்செய்திகள் மூலமாகவே தொடர்ந்தும் தொடர்பு கொள்ள முயல்வதன் மூலமாக அவரை மேலும் தொல்லைப் படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
• Tamil Solidarity அமைப்பின் உறுப்பினராக செயற்படும் பா. நடேசனின் இச்செயற்பாடு குறித்து அந்த அமைப்பு விசாரணை செய்வதுடன் தமது நிலைப்பாட்டை பொதுவெளிக்கு உத்தியோகபூர்வமாக தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
முற்போக்கு வெளியை பெண்களுக்கு பாதுகாப்பாக மாற்றுவதற்காக செயற்படும் கூட்டமைப்பின் சார்பாக ஒப்பமிட்டவர்கள்:
1. கோகுலரூபன்(இங்கிலாந்து)
2. தேவராதா(இங்கிலாந்து)
3. தினேஷ் பாலசிங்கம்(இங்கிலாந்து)
4. பாரதி சிவராஜா(இங்கிலாந்து)
5. உமா ஷானிக்கா (ஜேர்மனி)
6. விஜி (பிரான்ஸ்)
7. மல்லிகா(ஜேர்மனி)
8. மோகனதர்ஷனி(இலங்கை)
9. மாஜிதா (இங்கிலாந்து)
10. ராகுல் சந்திரா(கனடா)
11. சந்திரா நல்லையா(கனடா)
12. ஹரிகீர்த்தனா(அவுஸ்ரேலியா)
13. சுரேகா பரமன்(இலங்கை)
14. கறுப்பி சுமதி(கனடா)
15. பானுபாரதி( நோர்வே)
16. அமிழ்தினி நக்கீரன்(இலங்கை)
17. சிவா மாலதி (இலங்கை)
18. பிஸ்லியா பூட்டோ (இலங்கை)
19. நிருபா ஆயிலியம் (கனடா)
20.தமயந்தி (நோர்வே)
21.ஹரிஷ் கமுககுடி மாரிமுத்து(இங்கிலாந்து)
22. கலா சிறிரஞ்சன்(இங்கிலாந்து )
23. சுபா மோகன்(இலங்கை )
24. ம.சூரியசேகரன் (இலங்கை )
உங்கள் பெயர்களை இணைக்க விரும்புகிறவர்கள் தெரிவியுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக