கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்ப வேண்டிய அவசியமில்லை...

 

ஒடுக்குமுறையை எதிர் கொள்கின்ற மக்கள் அல்லது பிரிவினர் யார்? அவர்கள் எதிர்கொள்ளுகின்ற ஒடுக்குமறை வன்முறைகள் என்ன. அந்த மக்களுக்கான சமூக த்ததுவ கோட்பாடுகள் பேசுகின்ற அரசியல் அறம் என்ன? அந்த சமூகம் அல்லது அந்த பிரிவு தனக்கு இழைக்கப்பட்ட சட்ட அநீதியை, அதற்கான சமூக நீதியை, எப்படி பெறுவது அல்லது பேசுவது? குறைந்தப்பட்சம் எதிர்வினையாற்றுவது என்ற எந்த ஈர வெங்காய புரிதலும் இல்லாமல் சமூகத்தில் நாங்களும் 'பெரிய பருப்பு' என்ற பொரியண்ணர் மன நிலையி அலம்பல் புலம்பல்களக்கு பதில்...  

இதனை நாம் வெறுமனே தனிநபருடைய பிரச்சனையாக குறுக்க நாம் ஒன்றும் 'உச்சு அமைப்பினர் கும்ப அரசியல்' செய்பவர்கள் அல்ல. ஏனெனில் அண்மையில் ஒரு குறுகிய காலத்தினுள்ளேயே அடுத்தடுத்த சில ஆண் 'புரட்சியாளர்களது' சாயம் வெளுக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் வெளுக்க வேண்டிய சாயங்களும் இருக்கவே செய்கிறது.

சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் உள்ள ஒரு புரட்சியாளர் பெண்களை காதல் என்ற பெயரில் பாலியல்ரீதியாக சுரண்டியது (abuse பண்ணியது) பற்றியதொரு சர்ச்கை நடைபெற்றது. ஆனால் இவை எதுவுமே உரிய கவனத்தைப் பெறாமல் அவ்வமைபுக்குளேயே புறந்தள்ளப் (ignore பண்ணப்) பட்டு அவரும் அமைப்பிலிருந்து தள்ளிவைக்கப்பட்டார். குறைந்த பட்சம் அந்த நீதியாவது கிடைத்தது என்று நினைக்கும் நிலைதான் பொது வெளியில் இயங்கும் பெண்களுக்கு இருந்தது.

பெண்ணியம் பற்றி பேசினாலேயே அமைப்பின் உள்ள ஆண்கள் அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள மாட்டார்கள் என்று 'தந்திரோபாயம்' எழுத படாத சட்டமாக நடைமுறையில் உள்ளது. அப்படியானால் ஏன் இவர்களுக்கு பெண்ணியம் அல்லது அதை பேசுபவர்கள் அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள்? உண்மையில் சமூக நீதிக்காக அதன் அரசியலுக்காக போராடுபவர்களுக்கு 'பெண்ணியம்' நட்பு சக்கியாகவும் கட்சியில் சம பலம் உள்ளதாகவுமல்லவா இருக்க வேண்டும் அவ்வலா. அத்தடன் 'அமைப்புகளில்' ஏன் ஒரு வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அல்லது ஆளுமை உள்ள பெண்களின் பங்களிப்பு அறவே இல்லாமல் செய்யப்படுகின்றன. ஏன் இப்படியான பெண்கள் உள்வாங்கப்படாமலே தவிர்க்கப்படுகிறார்கள். இது வெறும் தற்செயலானதுதானா?   


 அதுதான் நான் முன்னரே ஒரு போஸ்ட்டில் குறிப்பிட்டது போல் இவர்களுக்கு அரசில் வெறும் 'மார்க்கெட்டிங்தான்'. எதனை எங்கு பேசினால் நல்ல விலைக்கு போகும் என்ற குறுகிய சிந்தனை காரணமாக எங்கெங்கு எவை பிரபலமாக (பொப்புலிசமாக) இருக்கிறதோ, அங்கங்கே அவற்றை பேசுவது மாத்திரமன்றி, அவற்றில் மிகவும் தீவிரமாக இருப்பது போன்று வேடம் இடுவதே இவர்களுக்கு தொழிலாகிவிட்டது. இதற்கான பெயர் புரட்சி கிடையாது, மாறாக 'பிழைப்புவாதம்' என்பது நாம் அறிவோம்.

இத்தகைய சவாலகளை எதிர் கொண்டு அல்லது ஓரங்கட்டுதல்களையும்மீறி யாராவது பிரச்சனைகளை எழுப்ப முயன்றால், அது சம்பந்தப்பட்டவர்களது 'தனிப்பட்ட பிரச்சனை' என்று நழுவிட இந்த 'புரட்சியாளர்கள்' முயல்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் எந்த காலத்தில் சீவிக்கிறார்கள் என்ற சந்தேசம் எமக்கு எழுவது தவிர்க்க முடியாததாகிறது. ‘Personal is Political’ என்ற சுலோகத்தை பெண்ணியவாதிகள் 1960 களிலேயே எழுப்பி, அது இன்று உலகலாவிய முற்போக்கு அரங்குகளில் நியமமாகிவிட்டுள்ளது. ஏன் பல முதலாளித்துவ அரசுகள்கூட இதனை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இந்த கத்துக்குட்டிகள், அதுவும் இருபத்தியோராம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தில் வந்து, எமக்கு புதிதாக பாடம் எடுக்க முனையும்போது எரிச்சலும், கோபமும்தான் வருகிறது. 

இங்கு வலிந்தே நான் 'புரட்சியாளர்கள்' என்று குறிப்பிடுகிறேன். ஏன் என்றால் இப்படியானவர்களினால்தான் புரட்சி, இடது சாரிய அரசியல், பெரியாரியம் தலித்தியம் என்று மக்கள் விடுதலை கோட்டாடுகளும் சேர்ந்து சமூக விரோத சக்திகளினால் அடிவாங்குகிறது. வெளியில் இருக்கும் சாதாரணமானவர்கள் தங்களுக்குள்ள அரசியல் புரிதலின் அடிப்படையில் 'தங்களுடன் இப்படியானவர்களை ஒப்பிட்டு' தம்மை விட தனிமனித வாழ்க்ககையில் கேவலமாக மோசமாக ஒழுக்கமற்ற அறங்கெட்வர்களாக நடக்கும் போது அவரகள் இவர்கள் விளம்பரப்படுத்தி பிழைக்கும் தத்துவங்களைத்தான் தாக்குகிறார்கள். அதற்காக வெல்லாம் இவர்களுடன் சமரசம் செய்தாக வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. வெளியில் இருப்பவர்களை அரசியல் படுத்திக் கொள்ளலாம் அதுதான் எமது வேலை. 

இங்கு வெளிப்படையாகவே ஒரு விடயம் தெரிகிறது. அதாவது இவர்கள் தம்மை என்னதான் முற்போக்காளர்களாக, புரட்சியாளர்களாக காட்டிக் கொண்டாலுங்கூட, இவர்களது அமைப்புகள் அடிப்படையில் 'Boys Clubs' போலவே செயற்படுகின்றன. இவர்கள் தமது அமைப்பில் பெண்களுக்கு ஒதுக்கும் இடம் வெறும் அலங்கார பொம்மைகளுக்கானது மட்டுமேயாகும். அதிலும் ஏதாவது ஒரு ஆண்மீது பெண்களால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கும் போது ஏனைய ஆண்கள் தமக்கிடையில் ஒருவித ‘Male Bonding’ இருப்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துவார்கள். இப்படியாக பரஸ்பரம் ஒருவரின் முதுகை அடுத்தவர் பாதுகாக்க. மற்றவர் பின்பு தனது முறைக்கு முதலாவது நபரை பாதுகாக்க என்று செயற்படும் இந்த கும்பலை நாம் ‘'Boys Club'’ என்று அழைப்பதில் தவறு ஏதும் இருக்க முடியாது அல்லவா?  

இந்த அமைப்புகளில் செயற்படும் பெண்களின் நிலைமை இன்னும் அவலமானது. பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றாக சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, அந்த பெண்களை பிரித்தாளுவதற்கு இவர்கள் கையாளும் தந்திரோபயங்கள் சொல்லி மாளாது. பெரிய இராணுவ நிபுணர்கள்கூட தந்திரோபாயம் பற்றிய விடயத்தில் இவர்களிடம் பிச்சைதான் எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பெண்கள்கூட, இவை பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறைகளின் வெளிப்பாடு என்ற பெண்ணிய பிரக்ஞையின் ஊடாக பிரச்சனைகளை புரிந்துகொள்ளாமல் குற்றம் இழைத்த ஆண்களின் சதிகளுக்க பலியாகிவிட நேர்வது வருந்தத்தக்கது. 

அண்மையில் இலங்கையில் குற்றம் இழைத்ததாக குறிப்பிடப்பட்ட நபருக்கு ஆதரவாக சில பெண்களே குரல் கொடுத்தது, அவரது பதிவுகளுக்கு லைக் போட்டது போன்றவை இதற்கு சிறந்த உதாரணங்களாகும். பொதுவில் முற்போக்கான ஆணோ அல்லது பெண்ணோ முதலில் பாதிக்கப்பட்டவர் தரப்பில், ஒடுக்கப்பட்டவர் தரப்பில் இருந்த பிரச்சனையை அணுக தலைப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர் எமக்கு வேண்டியவரா, பிரபலமானவரா, அல்லது எமக்கு பயன்படுவாரா என்றெல்லாம் பார்த்துத்தான் நாம் பிரச்சனையை அணுகத் தலைப்பட்டால் அதற்கு பெயர் அரசியல் கிடையாது. சந்தர்ப்பவாம் ஆகும்.


சமூகத்தின் ஒடுக்கப்படுகிற நிலையில் இருப்பவர்களின் பிரச்சனைகளில் எப்படி இணைந்து செயற்பட வேண்டும் என்ற புரிதல் முதலில் தேவை. குறிப்பாக பெண்கள் அல்லது அவர்களது அமைப்புகள் பெண்களுக்கு பிரச்சனைகள் என்று வரும் போது அவர்களது பிச்சு பிடுங்கள்களை தவிர்து Issue Based ஒத்துழைப்புகளை வழங்குவது பெண்களுக்கு நலன்ளை பெற்று பாதுகாப்பு உணர்வை கொடுக்கும்.

இப்போதெல்லாம் சமூகத்தின் பொதுக்கருத்து, நீதித்துறை போன்றவை பல சந்தர்ப்பங்களில் மிகவும் முன்னேறியதாக இருக்கின்றன. குடும்ப வன்முறை (Domestic Violence), திருமண உறவில் நடைபெறும் வல்லுறவு (Marital Rape), காதலித்தவரை ஏமாற்றுவது போன்றவை நீதித்துறையில் குற்றங்களாக கருதப்படுவதுடன், சமூக பொதுக்கருத்தும் இவற்றை ஏற்றுக்கொளத் தயாராக இல்லை. முன்னரைப்போல 'கல்லானாலும் கணவன்' என்று யாராவது 'புத்திமதி' சொல்ல முனைந்தால் இப்போது பெண்களின் செருப்புத்தான் பேசும். 

இப்படியாக சமூகத்தின் பொதுக்கருத்து மற்றும் நீதித்துறை போன்றவை அடைந்துள்ள வளர்ச்சிகளுக்கு இணையாக மட்டுமன்றி, அதனைக் கடந்தும் செல்லக்கூடியவர்களாக இருக்கக்கூடியவர்களே உண்மையான மனிதாபிமானம், சுயகௌரவம், சமூக நீதியின்பால் அக்கறை போன்றவற்றைக்கொண்ட உண்மையான முற்போக்காளர்களாக இருக்க முடியும். இதற்கு மாறாக, இப்படிப்பட்ட பிரச்சனைகள் எழும்போது பாராமுகம் காட்டுவது என்பது இதற்குமேலும் சகிக்க முடியாததாக ஆகிவிட்டுள்ளது. 

இன்று எமது சமூகத்தில் உள்ள பல சாமாண்யர்களான ஆண்களே இப்படிப்பட்ட உயர் சமூக விழுமியங்களை எந்தவிதமான விளம்பரமும், பந்தாக்களும் இன்றி தமது அன்றாட வாழ்வில் இயல்பாக கடைப்பிடிக்கக்கூடிய நிலையில், முற்போக்காளாகள், பெரியாரிஸ்ட்டுகள், மார்க்சியவாதிகள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் இந்த கயவர்களின் செயற்பாடுகளை நாம் ஏன் சகித்துக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது அல்லவா? 

சமுதாயத்தில் நிலவும் அநீதிகள், ஒடுக்குமுறைகள், பாரபட்சங்கள் போன்றவற்றால் மிகவும் வருந்தி, இவற்றை எப்படியாவது ஒழித்தாக வேண்டும் என்ற கரிசனையில் அமைப்புகளை நாடிவரும் பெண்கள், தாம் ஆவலுடனும், பெருத்த எதிர்பார்ப்புகளுடனும் சேர்ந்துகொண்ட  அமைப்புகளுக்குள்ளும் அதேவிதமான அசிங்கங்களை சகித்துக்கெள்ளத்தான் வேண்டும் என்றால் இதற்குமேல் பெண்கள் எங்கு போவதாம்? 

அநீதிகள். கொடுமைகள், அடக்குமுறைகள் என்பவற்றில் இருந்து தப்பிப்பதற்காக ஓடி ஓடி பெண்கள் களைத்துவிட்டார்கள். இதற்குமேல் நாம் ஓடுவதற்கு இடம் கிடையாது. ஆனால். நின்று திருப்பியடிக்க முடியும். ஆம், நாம் இப்படிப்பட்ட அநீதிகளை கண்டு ஓடி ஒளியாமல் நின்று திருப்பித் தாக்குவது என்று முடிவு செய்வோம் . 

பெண்களுக்கு எதிராக குற்றமிழைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர் எப்படிப்பட்ட அமைப்பில், என்னவிதமான பொறுப்புகளில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், அவர் இழைத்த தவறுகளுக்கு உரிய நட்ட ஈட்டை கொடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுப்போம். அமைப்புகள், அவற்றின் தலைமைகள் இவற்றில் சமூக பொறுப்புணர்வோடு நடவடிக்கை எடுக்க தவறும் இடத்தில் இப்படிப்பட்ட பிழைப்புவாத அமைப்புகளையும் அம்பலப்படுத்தி ஓரங்கட்டுவோம். 

இப்படியான செயற்பாடே இன்றைய சமூகத்தில் எம்மை பிரக்ஞையுள்ள, உண்மையான போராளிகளாக அடையாளம் காட்டும். அமைப்புகளினுள் நடைபெறும் இப்படிப்பட்ட அயோக்கியத்தனங்களுக்கு எதிரான மிகவும் திட்டவட்டமான, உறுதியான நிலைப்பாடுகளை மேற்கொள்ளாதவரையில் நாம் எம்மை முற்போக்காளர்கள், பெண்ணியவாதிகள், புரட்சியாளர்கள் என்று அழைத்துக்கொள்வதில் அர்த்தம் எதுவும் இருக்க முடியாது அல்லவா?

கருத்துகள்

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. When this occurs, the shutter opens to dump all of the cash which have been performed since the that} final jackpot. When you set a coin on this machine, it falls right into a transparent case. The backside of the case is a movable shutter that is related to a metallic linkage, as find a way to|you presumably can} see within the diagram. But when the machine hits the jackpot, the third stopper shifts the linkage up, opening the shutter so the cash fall out of the machine. Independent candidate Andrew Wilkie, an anti-pokies campaigner, was elected to the Australian House of Representatives seat of Denison at the 2010 federal election. Wilkie 토토사이트 was considered one of 4 crossbenchers who supported the Gillard Labor authorities following the hung parliament result.

    பதிலளிநீக்கு
  3. Finally, we carry out a background verify on the company to see the place it's registered and investigate their on-line presence. On January the 24th 2020, legislators in the Verkhovna Rada handed the primary stage of the legislation to reintroduce authorized gambling in Ukraine. In August 2020 bill 2285-D handed, making on-line gambling, bookmaking, slot halls and casinos authorized in Ukraine. Mobile 1xbet gambling refers to enjoying in} games of likelihood or talent for cash by using a remote gadget such as a pill computer, smartphone or a cell phone with a wireless Internet connection. Each of our really helpful top on-line casinos is highly revered and makes use of state-of-the-art software you can to|you possibly can} trust. Yes, it's safe to play in an online on line casino, offered that a acknowledged gaming physique licenses it, and also you select the place to play with care.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கர்ணன்

பிற்போக்குத்தனங்களும் - தப்பெண்ணங்களும் : ஒரு அலசல்!!