‘மார்க்சியமும் இன்டசெக்சானாலிட்யும்' (Marxism and Intersectionality)

                                                    இயங்கியல் / உரையாடல்

 

ஆஷ்லே பொரெர் உடைய ‘மார்க்சியமும் இன்டசெக்சானாலிட்யும்' என்ற நூல் மீதான விமர்சனம்.

 a review of Ashley Bohrer's Marxism and Intersectionality

by Jules Joanne Gleeson (@socialrepro) on January 23, 2020

-------------------------------------------------------------------------------------------------------------------------------‘மார்க்சியமும் இன்டசெக்சானாலிட்டியும்’ சமகால முதலாளித்துவத்தின்கீழ் இனம், பாலினம், வர்க்கம் மற்றும் பாலியல் (Race, Gender, Class, and Sexuality) ஆகியவற்றின் நிலை’ என்ற நூலில் போரெர் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு நிற்கும் இரண்டு சிந்தனை முறைகளை உரையாடல் செய்ய முயல்கிறார். மார்க்சியத்திற்கும், இன்டசெக்சானாலிட்டிக்கும் இடையிலான மிகைப்படுத்தப்பட்ட வேறுபாடுகளை இந்த நூலில் சரிசெய்ய ஆசிரியர் முயல்கிறார். இந்த இரண்டு மரபுகளுக்கும் இடையிலான சமகால விவாதமானது பரஸ்பரம் ஒருவரை ஒருவர் வாசிக்காமல், அல்லது வாசிப்பதை புரிந்துகொள்ளாமல் புறந்தள்ளிவிடுவதில் இருந்து பிறப்பதாக ஆசிரியர் தனது முன்னுரையில், குறிப்பிடுகிறார். ஆகவே பொரெர் உடைய பிரதான  நோக்கமானது இந்த இரண்டு மரபுகளினதும் முக்கியமான பிரதிகளை வாசிப்பிற்கு உள்ளாக்கி (இதில் இவர் இன்டசெக்சானாலிட்டி மற்றும் கறுப்பின பெண்ணியம் ஆகியவை மீதான சார்பை சற்று அதிகம் வெளிப்படுத்தினாலுங்கூட) இவற்றிற்கிடையில் ஒரு புதிய, சிறப்பான, அறிவார்ந்த உரையாடலை உருவாக்குவதேயாகும். ‘மார்க்சியமும் இன்டசெக்சானாலிட்டி’ என்ற நூலானது தெளிவாக கட்டமைக்கப்பட்டதாகவும், பேராவலுடன் பல தரப்பு கருத்துக்களையும் உள்ளடக்குவதாகவும் உள்ளது, கால ஓட்டத்தில் நிறவெறி எதிர்ப்பு சிந்தனைகள் எவ்வாறு  உருவாகி வந்தன என்பது பற்றிய விபரங்கள் தொடக்கம், ஓவியத்தில் உருவாகிவந்த புதிய பதங்கள் - உம் ஒன்றாகவே தோன்றி வளர்ந்து வருபவை  (‘equi primordiality’) - போன்றவற்றையும் அறிமுகப்படுத்துவதன் மூலமாகவும் இரண்டு சிந்தனைப் பள்ளிகளுக்கு இடையிலும் ஒரு ஒத்திசைவான தன்மையை உருவாக்க ஆசிரியர் முயல்கிறார்.
ஆஷ்லே  தனது புத்தகத்தின் முதல் அத்தியாயத்திற்குப் புதுமையாக 'அத்தியாயம் ஸீரோ' என்று பெயரிடுவதன் மூலமாக ஆர்வ மூட்டும் விதமாகத் தொடங்குகிறார்: மார்க்ஸிய அரசியலும் (குறைந்த பட்சம் அமெரிக்காவைப் பொறுத்த வரையிலாவது) இன்டசெக்சனாலிட்டியும் ஆரம்த்திலிருந்தே பிணைந்திருந்த  வேர்களிலிருந்து எவ்வாறு தோன்றின என்பதில் கவனத்தைக் குவிக்கிறார்.  

 

இன்டசெக்சனாலிட்டி என்ற சொல்லானது மிக அண்மைக் காலத்திலேயே புழக்கத்திற்கு வந்தது என்ற போதிலும்,மிகவும் நீண்ட காலமாகவே நிறவெறியானது கறுப்பின பெண்களது வாழ்க்கையை எவ்வாறு வடிவமைக்கிறது என்று பேசப்பட்டே வந்துள்ளது. 

 

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கருப்பின பெண்ணிய வாதியான Maria Stewart, Sojourner Truth மற்றும் Wells-Barnett போன்ற பெண்களது  செயற்பாடுகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலமாக வர்க்கம், பாலினம், இனம் போன்றவை ஒன்றின் மீது மற்றொன்று தாக்கம் நிகழ்த்துவது குறித்த புரிதல்கள் எட்டப்பட்டன (என்பதை விளக்குகிறார்). அவ்வாறே இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டுகளான  Claudia Jones போன்றவர்களிடம்  இருந்து பின்னர் வந்த ‘புதிய இடதுகள்’ உட்பட பலரும் கறுப்பின பெண்கள் எவ்வாறு நிறம் - பால் என்ற இரண்டாலும் ஒடுக்குகிறார்கள் என்பதையும், அதன் விளைவுகளும் அதனால் ஏற்பட்ட போராட்டங்களும் குறிப்பாக வித்தியாசமானவை என்பதை முன்னமே தெளிவாகப் பேசி விட்டனர் என்பதையும் விளக்கமாகக் கூறுகிறார்.

 

“கறுப்பாக இருக்கும் நான் ஒரு பெண்ணில்லையா?” என்ற கேள்வியுடன் கறுப்பின, மூன்றாம் உலக பெண்ணியவாதிகளது செயற்பாடுகள் தொடங்குகின்றன. அதுவரையில் மேற்கில் நடைபெற்ற பெண்ணிய செயற்பாடுகள் என்பது வெள்ளை பெண்கள் பற்றி மட்டும் பேசுவதாக  Kimberlé Crenshaw தனது வாதத்தை வெள்ளை நிற பெண்ணிய வாதிகளை நோக்கி வைக்கிறார்.

 

அடுத்துவரும் இருபதாம் நூற்றாண்டில் Standpoint Theory என்பது மேலெழுந்து வருகிறது. அதாவது ஒவ்வொருவரும் தன்நிலைப்பாட்டிலிருந்தே ஒடுக்கு முறைக்கான தீர்வை முதலில் தேடத் தொடங்குகிறார்கள். அதாவது  புற நிலையில் வைத்து சூட்சுமமாகச் சிந்திப்பது-பார்ப்பது என்பது எல்லாம் உண்மைக்கு நெருக்கமானது அல்ல என்பதே இந்த நிலைப்பாடாகும். ஒருவர் எதுவாக இருக்கிறாரோ அதிலிருந்தே கேள்விகள் முதலில் தொடங்ப்படும் என்கிறது இந்த கோட்பாடு.


 

வர்க்கம், பால், இனம் ஆகிய மூன்றையும் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி வைத்து  (‘Triple Jeopardy’) போன்ற வாதங்களும் முன்னமே  உரையாடலுக்கு  வந்திருக்கிறது. இருந்த போதிலும் பிரச்சனைகளை நேரடியாகப் பேசாமை, கோட்பாடாக வரையறுக்காமை என்பவை இவற்றின் முக்கிய குறைபாடுகளாக இருந்தன. 

 

இவற்றிலிருந்தும் இன்டசெக்சனாலிட்டியை எவ்வாறு, குறிப்பாக  வேறுபடுத்திப் பேசப்படுகிறது என்பதை  இந்த நூல் காட்டுகிறது. வெளிப்படையாகப்  பேசுகின்ற, எழுதுகின்ற (explicitly) தன்மையை இன்டசெக்சனாலிட்டி  இது ஏற்படுத்துகிறது. அமெரிக்காவில்  இனவெறி  எதிர்ப்பு இயக்கத்திலிருந்து எவ்வாறு இன்டசெக்சனாலிட்டி  உருவானது என்பதைத் திருப்திகரமாக  இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 


“கறுப்பாக இருக்கும் நான் ஒரு பெண்ணில்லையா?” என்ற கேள்வியுடன் கறுப்பின, மூன்றாம் உலக பெண்ணியவாதிகளது செயற்பாடுகள் தொடங்குகின்றன. அதுவரையில் மேற்கில் நடைபெற்ற பெண்ணிய செயற்பாடுகள் என்பது வெள்ளை பெண்கள் பற்றி மட்டும் பேசுவதாக  Kimberlé Crenshaw தனது வாதத்தை வெள்ளை நிற பெண்ணிய வாதிகளை நோக்கி வைக்கிறார்.

முலாவது அத்தியாயத்தில் இன்டசெக்ஸனாலிட்டியின் குறிப்பான கூறுகள்என்பது குறித்தும், அவை எவ்வாறு வளர்ந்து வந்திருக்கிறது என்பதை அடையாளம் காட்டிக் கொண்டு போகிறார் ஆசிரியர். 

 

ஆசிரியர் எடுக்கின்ற முதலாவது விடயமானது மிகவும் திட்டவட்டமானதாகும். இதன்படி ஏதாவது ஒரு ஒடுக்குமுறைக்கு மாறாக இன்னுமொரு ஒடுக்கு முறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைத் தவிர்ப்பது. இங்கு இது  தீர்க்கமான அம்சமாகிறது. (உதாரணத்துக்கு - வர்க்க குறுக்கல் வாதம்  பேசுபவர்கள் போல், வர்க்க ஒடுக்கு முறைதான் முக்கியமானது- மற்ற எல்லா வகை ஒடுக்குமுறைகளும் வர்க்க ஒடுக்குதலுக்குத்  தீர்வு கிட்டும் போது இறுதியில் தானாகவே தீர்ந்து போகும் என்பது போன்ற வாதங்களை நாம் குறிப்பிடலாம்.)

 

அதாவது ஒடுக்குமுறைகளை ‘அதிகார படிநிலைப்படுத்தல்’ (‘hierarchy of oppressions’) என்பதற்கு எதிராக இவர் வாதிடுகிறார். அதாவது ஒடுக்குமுறை என்பது ஓட்டப்பந்தையம் பேன்றதல்ல; முதலாம் இடம், இரண்டாம் இடம் என்ற படிநிலையில் வைத்து அளப்பதற்கு என்கிறார். பல ஒடுக்குமுறை கூறுகள் ஒன்று சேர்ந்த ஒன்றாகவே நாம் இருக்கிறோம்- என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது.

 

(இந்த புத்தம் எழுதிய) நூலின் ஆசிரியர் ஒரு வெள்ளை நிறப் பெண்ணியவாதி என்ற வகையில், அவர் முன்னர் பேசிய ஒடுக்கப்பட்டவரது நிலையிலிருந்து, ஒரு ஒடுக்கு முறையைப் பார்ப்பது என்ற பார்வையிலிருந்து மாறுபடுகிறார். வெள்ளையின பெண்ணிலை வாதியான இவர், கறுப்பின பெண்களின் பெண்ணியத்துக்கு ஆதரவாகப் பேசுவதானது ஒடுக்கப்பட்டவரின் நிலையிலிருந்து பேசுவது ஆகாது. எனவே  சில வெள்ளையின பெண்ணியவாதிகள் இதற்காக வருத்தம் தெரிவிப்பதை அதிகமாகக் கொண்டிருப்பதைத்  தவிர்த்து பிரச்சனைக்கு நேரடியாக வரும்படி சொல்கிறார்.

 

இன்டசெக்ஸனாலிட்டி பெண்ணியத்துக்குள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அதுவரையும் பெண்ணியம் என்ற பொருளில் ‘வெள்ளை மத்தியத்தர வர்க்க’ பெண்களை  மையப்படுத்திப் பேசப்பட்டு வந்த போக்கானது நகைப்புள்ளாக்கப்பட்டுகிறது. விளிம்புநிலைப் பெண்கள், தமது அனுபவங்களைப் பேசுவதற்கும், அவர்கள் அமைப்புக்குள் இயக்கங்களுக்குள் முன்னிலைக்கு வருவதற்குமான சந்தர்ப்பம் இதன்  மூலமாகக் கிடைக்கப் பெறுகிறது.

 

இன்டசெக்ஸனாலிட்டி  நடுநிலையான ஒன்றல்ல, அது அதிகாரத்துக்கு எதிரான திட்டவட்டமான கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறது.  அதன் மூலம் மார்க்சியத்தை அதனுடன் இணைக்க முயல்கிறது.

 

இந்த விடயமானது பலருக்குமான அறிவூட்டலாக இருந்த போதிலும் போராட்ட அமைப்புகளுக்கே அதிகம் பயனுடையதாகும்.  இன்டசெக்ஸ்னாலிட்டியானது ஒரு புலமைசார் துறையாக  (scholarship) அடையாளம் காணப்பட்டாலும், அது ஒரு முதன்மையான அறிவார்ந்த கருவியாகப் பரப்பப்படவில்லை. இதனது சிக்கல்களையும் விளைவுகளையும் இயக்க அரசியல்களிலும் சமூக ஊடகங்கள் போன்றவற்றிலுமே அதிகம் எதிர் நோக்க வேண்டியுள்ளது. அதனால் அதனது நோக்கம் பிரச்சனைகளை விவரிப்பது மட்டுமல்ல அதனை மாற்றி அமைப்பதற்கான சிக்கல்களைச் சவால் செய்வதுமாகும்.

 

இரண்டாவது அத்தியாயத்தில் மாக்ஸியம் இன்டசெக்ஸனாலிட்டி தொடர்பான விமர்சனங்களை ஆராய்கிறது. சோம்பேறித்தனமான மார்ஸியர்கள் இன்டசெகஸ்சனாலிட்டியை பின் அமைப்பியல் வாதத்துடன்  (poststructuralist theory) சேர்த்து அடித்து மூடுகின்ற அறிவுச் சோம்பேறித்தனத்தைச் செய்கிறார்கள். ஆனால் வெளிப்படையாக இன்டசெக்ஸனாலிட்டி அதனுடன் முரண்படுகிறது என்கிறார். 

 

அடுத்த கட்டமாக- தீவிரமாக அறிவுத் தளத்தில் வைக்கப்படுகின்ற விமர்சனத்துக்கு நூலாசிரியை கொடுக்கின்ற விளக்கம் நம்ப தகுந்ததாக இல்லலை. என்கிறார். அதாவது மார்கஸிய கறுப்பின பெண்ணிய வாதியான  மிட்செலின் (Mitchell) (‘I Am A Woman and a Human’) என்ற கட்டுரையில் வைக்கின்ற குற்றச்சாட்டானது  இன்டசெகஸ்னாலிட்டியில் இருக்கின்ற ‘அடையாளங்கள்’ (identities) என்பவை வரலாற்றுப் பூர்வமானவையோ பொருள்முதல்வாத அடிப்படையிலோ இல்லை என்பதனால் இவை முதலாளித்துவ சிந்தனை என்று மிகக் கடுமையான குற்றச்சாட்டை வைக்கிறார்.

 

Mitchell தனது வாதங்களில் பெரும்பகுதியை வர்க்க குறுக்கள்வாதமாக குறுக்கி விடுகிறார். இருந்த போதிலும் இவருடைய வாதத்துக்கு மிக அடிப்படையாக இருப்பது  ஃபிரான்ட்ஸ் ஃபானனின் (Frantz Fanon)  கருத்துகள்தான் என்கிறார். புத்தகமான Black Skin, White Masks என்ற புத்தகத்திலிருந்தே அந்த வாதங்களை எடுத்திருப்பதாகச் சொல்கிறார்.  ‘இருத்தலியல்’ (existentialism-tinged) சாயல் கொண்டதாக அமையும் இந்த வாதமானது, ஒடுக்குமுறைகளை சமூக கட்டமைப்பு சார்ந்து ஆராயும் போது  அதற்குள் தனிநபர்கள் தொலைந்து போகாமல் இருப்பதற்கான உத்தரவாதங்களைக் கொடுக்கிறது. ஒடுக்கு முறையின் குறுக்கருக்கும் செயற்பாடானது ஒரு அணுகுமுறையைச் செம்மைப்படுத்தக் கூடும். ஆனால் அதுமட்டும் அதன் அடைய வேண்டிய இலக்கை சரி செய்ய போதுமானதல்ல.

 

அதாவது. ஆணாதிக்கமும், நிற வெறியும் வரலாற்று முழுவதும் இருந்து வருகின்ற வெறும் பொருளோ, அல்லது நிறுவனங்களோ அல்ல.  வெளிப்பாடாகவும் அமைகின்றன, நாம் வரலாற்று ரீதியில் ஆணாதிக்கத்தைப் புரிந்து கொள்வதற்கு எமது குறிப்பிட்ட உற்பத்தி முறைகளாக இருக்கின்ற சமூக உறவுகளில் வைத்தே புரிந்து கொள்ளலாம். பெண்மை என்ற தோற்றப்பாட்டை  மனிதர் என்ற அம்சத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது என்கிறார்.

 

 

பால் வாதம், ஓரினச்சேர்க்கையாளர் மீதான வெறுப்பு மற்றும் இனவாதம்  போன்ற ஒடுக்கு முறைகள் அனைத்துமே ‘ஒரு வேலை நிறுத்த போராட்டத்தின்’ தீவிரத்தில் ‘சில நாட்களிலேயே கலைந்துவிடும்’ என்பதாக ஸ்மித்துடைய கருத்து அமைந்துள்ளது.  இவரது கருத்து பலமான மாரக்ஸிய பகுப்பாய்வுக்குப் பதிலாக வெறுமனே முட்டுக்கொடுக்கும் வேலையைத்தான் இன்ட செக்ஸனாலிட்டி செய்கிறது- என்ற ஸ்மித் உடைய கருத்தை நூலாசிரியர் திறமையாக மறுக்கிறார். 

 

இந்த சரோன் ஸ்மித் (Sharon Smith) யார் என்று பார்த்தால், இவர் அமெரிக்க ட்ரொட்ஸிகிய அமைப்பைச் சேர்ந்தவர். அவரது  எழுத்துகள் அனைத்தும் ‘சர்வதேச சோசலிச அமைப்பு’  (International Socialist Organisation - ISO)  ஊடாகவே வெளி வந்தன. இவர் இவ்வமைப்பின் முதமை அங்கத்தவராவார். ISO அமைப்பானது 2019 ஆண்டு மிகப்பெரிய பாலியல் குற்றச்சாட்டை எதிர் நோக்கியது.  அதனது மற்றுமொரு தலைமை அங்கத்தவர் இதில் சம்பந்த படுத்தப்பட்டிருந்தார். இந்த குற்றச்சாட்டை மூடி மறைக்கும் மற்றும்  பாலியல் குற்றவாளியைக் காப்பாற்றிய ஊழலில் பங்குகொண்டவர்களில் ஸ்மித் முக்கியமானவராகக் காணப்பட்டார். அத்துடன் இவ்வமைப்பும் அதே ஆண்டு கலைக்கப்படுகிறது. இவ்வாரான ஒரு பின்புலத்திலிருந்து வருவதால் ஸ்மித்துடைய பெண்ணிய  கருத்துகள் அடிவாங்குவதாயும் நம்பகத் தன்மையற்றதாகவும் கருதப்படுகிறது. 

 

ஸ்மித்துக்கு மேல் வைக்கின்ற அதே விமர்சனங்களையே, மார்க்சிய - பெண்ணியவாதிகளான டேவிட் மெக்னலி மற்றும் சூ பெர்குசன் ஆகியோர் மீதும் வைக்கையில் போரெர் சற்று நியாயமற்றவராகவே செயற்படுகிறார். தீத்தி பட்டாச்சாரியினால் தொகுக்கப்பட்ட ‘சமூக மறு உற்பத்திக் கோட்பாட்டை மதிப்பிடல்’ (Mapping the Social Reproduction Theory) எனும் நூலில் மக்னெலி எழுதியுள்ள கட்டுரையில்  இன்டசெக்சானலிட்டி என்பது மார்க்ஸிய பெண்ணியத்திற்கும், கறுப்பு பெண்ணியத்துக்கும் இடையிலான   வெளியை ஒருவகையில் நிரப்புவதற்கான வழிமுறையாகும் என்கிறார்.

எவ்வாறாயினும் மெக்னலி, பெர்குசன், பட்டச்சாரியா (Bhattacharya) மற்றும் பிற ‘சமூக மறு உற்பத்தி’ கோட்பாட்டாளர்களுடன் சேர்ந்து  பகிர்ந்து இன்டசெக்ஸனாலிட்டி என்ற கோட்பாடு என்பது ஒடுக்கு முறை தொடர்பான விடயங்களை முதன்மையானதாக இருக்கிறது. 

 

இன்ட செக்ஸனாலிட்டி தொடர்பாகக் கடுமையான மார்க்ஸிய விமர்சனமானது  அதன் பின்புலங்களை நீக்கிய காலனியம் பற்றிய விமர்சனங்களை மெதுவாகக் கடந்து போவதாக இருக்கிறது.

உண்மையாகச் சொன்னால் பல்வேறு மாரக்ஸிய மரபுகளில் வந்தவர்கள் இன்ட செக்ஸனாலிட்டியை விளக்குவதற்கு போதாது என்றே கருதுகின்றனர். முன்னைய பெண்ணிய வாதிகளின் பலகீனமான ஆய்வை வைத்துக் கொண்டு மெக்னலியைம் பெர்குசனினையும் சேர்த்துப் பார்ப்பது என்பது 2016 ஆம் ஆண்டு அமெரிக்கத் தலைவர் தேர்தலில் கிலாரியின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடு பட்டவர்களையும் இன்டசெக்ஸனாலிட்டி கோட்பாட்டாளர்களையம் சேர்த்துப் பார்ப்பது போன்ற பலகீனமானது என்கிறார்.

 

இன்டசெக்ஸனாலிட்டி  நடுநிலையான ஒன்றல்ல, அது அதிகாரத்துக்கு எதிரான திட்டவட்டமான கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறது.  அதன் மூலம் மார்க்சியத்தை அதனுடன் இணைக்க முயல்கிறது.


இன்டசெக்ஸனாலிட்டி தோற்றம் குறித்த சந்தேகத்திற்குப்  பதில் திருப்தியானதாகவில்லை. இருந்த போதிலும் ரிஷிமூலம்(‘appeal ato origins’) வைத்து எந்தவொரு சிந்தனைப் பள்ளியை (school of thought) தாக்குவது பலகீனமானது என்கிறார். போஹ்ரர்  வைக்கின்ற முக்கியமான அணுகு முறையானது  - வலது சாரிகள் மிகப்பலமாக வந்த பின் அறிவுஜீவிகளின் போராட்டக் களமாக நீதிமன்றங்கள் இருந்து வருவதையும் சொல்கிறார் .

 

நீதிமன்றங்கள் அதன் நீதி   பற்றி விமர்சன கண்ணோட்டம் இருந்தாலும் கூட இந்த சட்டத் துறைகளில் இருக்கின்ற கல்வியாளர்கள் ‘சட்டம் தொடர்பான கோட்பாடுகளில்’ கவனம் குவிக்கின்றனர். ஒடுக்கப்படுகின்ற மக்கள் தங்களது ‘குறைந்த பட்ச நீதியை’ பெறுவதற்கு இத்தகைய சட்டத்தையும் நீதி மன்றங்களையும் நாட வேண்டி இருக்கிறது. அதனூடாக எதையாவது பெற முயல்பவர்களாக  அவர்கள் இருக்கின்றனர்.

 

பல விடையங்கள் வரலாற்றுப் பின் புலத்தில் வைத்து ஆராயாமை  என்பது இந்த புத்தகத்தின் மேசமான நிலைகளில் ஒன்றாகும். வழக்குரைஞர்களையும் கல்வியாளர்களையும் தவிர்க்க முடியாத அவசியமாகக் கொண்டுவந்த அரசியல் இயக்கம், இன வெறியையும் பால் வாதத்தையும் வெறும் வேலை நிறுத்தத்தால் தீர்க்கலாம் என்று  சொல்வது அற்புத  நிகழ்வாகத் தோன்றுகிறது. இந்த போக்கு எங்கு நடக்கிறது என்று பார்த்தால் தொழிலாளர் இயக்கங்கள் பலமிழந்து வீழ்ந்து கொண்டு போகும் அதேவேளை சொல்ல முடியாத அளவு அதன் செயற்பாடுகள் சுருங்கியும் போகிறது. அதற்கு காரணம் தொழிற் சங்கங்ளில் சேர்வோர் மோசமாகக் குறைந்திருப்பது ஆகும். அத்துடன்  குறிப்பாக ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளில் ஊழியர்களை நினைத்தவுடன் வேலையிலிருந்து நீக்கவும் இருத்தவுமான நிலை (‘at will’ employment)  உள்ளது.  

 

 

இத்தகைய சமுக நிலை இருக்கிறபோது இடது சாரி சக்திகள் தமது பலத்தைத் திரட்டி  நின்று சட்டத்தை  நாடி சண்டை (பின்னணிப் படை- rear guard) செய்ய வேண்டியுள்ளது. அதே நேரம் கடந்த காலங்களில் தொழிற் சங்கங்கள் பலமாக இருந்த காலத்தில் சட்டத்தை பற்றிய கவலை இருந்ததில்லை. ஆனல் இன்றைய காலங்களில் விடுதலை இயக்கங்கள், மேட்டுக்குடியினர் என்று கருதப்படுகிற மீடியா,  சிட்டி கவுன்சில் போன்ற இடங்களில் தமது பிரதிநிதித்துவத்திற்காகச் சண்டை பிடிப்பதே  பெரிய விடையமாகவுள்ளது. இத்தகைய போக்கில்-வர்க்க வரலாற்றுச்  சமூக கோட்பாடுகள் காலாவதியாகிவிட்டன என்ற பரவலான வாதங்களுக்கும் இது காரணமாக அமைகிறது..

 

 

வர்க்க உணர்வை பின்னுக்குத் தள்ளி விடக் கூடிய  இத்தகைய பின் நவீனத்துவ சிந்தனை முறைக்குள் இருந்து தப்பித் தாக்குப் பிடிக்க விரும்புகின்ற மாரக்ஸிய வட்டத்தினர் தம்மை அதீதமாகப் பாதுகாத்துக் கொள்ள முயன்று எல்லாவற்றையும் கடுமையாக எதிர்க்கின்றனர். இத்தகைய முக்கியமான கால கட்டத்தில்தான் மாரக்ஸியமும் இன்டசெகஸனாலிட்டியும் இணைந்ததான கோட்டுத் தேவை வேண்டியிருக்கிறது.

 

 

அத்தியாயம் நான்கில்  மார்க்ஸியம் தொடர்பான

இன்டசெக்ஸனாலிட்டி பிரிவினரின் விமர்சனம்  இரண்டாம் அத்தியாயத்தில் பேசப்பட்ட  விமர்சனத்துக்கு எதிரானதாய் உள்ளது. மார்க்சியத்தை விமர்சிப்பவர்களின் பெயரிடுவதையும் மேற்கோள் காட்டுவதையும் பொரர் தவிர்த்திருக்கிறார். ஆனால் அவருடைய வாதங்கள் மார்க்ஸியரல்லாத மற்றும் கல்வியாளர்களுக்கிடையே உள்ள உரையாடல்களும் எழுத்தில் இருக்கிறது.   மார்க்சிய பகுப்பாய்வாவார்கள் எங்கள் மீது வைக்கின்ற வர்க்க குறுக்கல்-வாதம் ஐரோப்பிய மையவாதம்- உற்பத்தி தொடர்பாக அதிக கவனக்குவிப்பு- தொழிலாளர் வர்க்கத்தை ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் பார்வை   போன்ற குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்.

 

 

இன்டசெக்ஸனாலிட்டி புரட்சியாளர்களுக்கும் தாராளவாத போக்குடைய ‘post-Marxist’ கோட்பாட்டாளர்களுக்கும்

இடையிலான சிந்தனைப் போக்கு ஒன்றுடன் ஒன்று மேவுவதாக இருப்பது பற்றி இன்னும் கொஞ்சம் அதிகமாக பேசி இருக்கலாம்.

வெட்கரமயன பிழை ஒன்றையும் விட்டிருப்பதாகக் கட்டுரையாளர் சுட்டுகிறார்.- அது மாக்ர்ஸ்சுடைய எழுத்துக்களில் ஆண்மையை  பால் வாத பிரச்சனை இருப்பதாகச் சொல்கிறார். மார்க்ஸ் வரலாற்றைப் படைப்பவர்கள் ஆண்கள்(men)என்பதாக உள்ளது என்கின்றனர்.  உண்மையில்  அவ்வாறு சொல்லப்பட்டிருந்தால் இது ஒரு பிரச்சனைதான். ஆனால் அது ஆங்கில மொழி பெயர்ப்பில் உள்ள குறைபாடு என்பதுடன் அசல் ஜெர்மன் மொழியில் மாரக்ஸ் ‘மனிதர்கள்’ (Menschen) என்றே பாவித்திருக்கிறார். இந்த வார்த்தையானது உலகளாவிய பார்வை கொண்ட 'மனித உரிமைகள்' என்ற உணர்தலில் வருவது போலானது என்று தெளிவுபடுத்துகிறார்..

 

அதே நேரம் போரெர் இன்டசெக்ஸனாலிட்டிக்கு அதிகம் விட்டுக் கொடுப்பது போலவும் இருப்பதாகச் சொல்கிறார்.

 

     வட பூகோளத்தில் இருக்கின்ற(அமெரிக்கக் கனடா ஐரோப்பா போன்ற வளர்ந்த முதலாளித்துவ நாடுகள்) எந்தவொரு மாக்ஸிஸ்டும் பொலிவியப் (Bolivian) பெண்கள் போல் விடையங்களைப் பார்ப்பதில்லை. அவர்கள் அவர்களுடைய நாட்டில் முதலாளித்துவம் எப்படி வளர்கிறது அதன் குறிப்பான தன்மை என்ன  என்று பார்ப்பதோடு அது தென் பூகோள நாடுகளின் நிலைகளுடன் ஒப்பிட்டு ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.  இதிலிருந்து வெள்ளை ஐரோப்பியத் தொழிலாள வர்க்கம் குறைந்தது சில மாற்றங்களையாவது கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
பெனடிக்ட் ஆண்டர்சன் (Benedict Anderson) அவர் ஒரு அசல் மேற்கத்திய மார்க்ஸிஸ்ட். அவருடைய தேசியவாதம் பற்றிய முக்கியமான புத்தகமான 'Imagined Communities' யை எழுதியவர். அதில், ஆரம்பத்திலேயே - சோசலிஸ நாடுகள் ( கம்போடியா, வியட்நாம், சீனா) எப்படி 1983 ஆம் ஆண்டில்  மோதிக்கொள்கின்றன. என்றும், அது எப்படி தேசியவாதத்தின் தீர்க்கமான தருணமாகக் குறிப்பான பண்புகளில் நின்று சோசலிஸம் பின்னுக்கு தள்ளப்படுகிறது என்றும் விளக்குகிறார். இந்த நூற்றாண்டுகளின் கொள்கையற்ற சண்டையைக் கண்டு சர்வதேச  கம்யூனிசம் தடுமாறுகிறதென்கிறார். 

 

 அத்தியாயம் மூன்றையும்(‘Queer, Feminist, Anti-Racist and Anti-Imperialist Marxisms’)  அத்தியாயம் ஐந்தையும் (‘Oppression and Exploitation Beyond Reductions’) ஒன்றாகச் சேர்த்துப் பார்ப்பது நல்லது. இதனூடாக அவர் தனிப்பட வகை மாக்ஸியத்தை சொல்ல வருகின்றார். அதற்கு முக்கியமான ஒரு வார்த்தையைத் தேர்ந்தெடுக்கிறார். அது ஆரம்பத்திலிருந்தே ஒன்றாகவே தோன்றியது ‘equi primordiality' என்பதாகும். அதாவது ஒடுக்கு முறையும்- சுரண்டலும் வர்க்க சமுதாயத்தின் இணை அம்சங்களாகப் புரிந்து கொள்வதற்கான வார்த்தையை அறிமுகப்படுத்தி உபயோகிக்கிறார்.

 

ஒட்டுமொத்தமாக மார்க்ஸியம் இந்த விடயங்களைக் கண்டுகொள்ள வில்லை என்பது தவறானது. சிறு சிறு நீரோட்டங்களாக இருக்கின்ற சிந்தனைப்போக்குகளை  அனுகவில்லையாயினும் பிரதான மாக்கஸிய  கோட்பாடும் செயற்பாடும் புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டிருக்கிறது.

 

முதலாளித்துவத்தின் கீழ் ஒடுக்குமுறை எவ்வாறு உருவானது என்ற மரபார்ந்த பாதையைக் காட்டுகிறார். இந்த மரபார்ந்த மார்க்ஸியம் என்பதானது மூலதனம் தொகுதி ஒன்றை எடுத்துக் கொண்டு  மற்றவை அனைத்தையும் வறட்டு சுத்திரமாக காட்ட முயற்சிக்கின்றனர். அத்தகைய போக்கைத் தனது இன்டசெகஸனாலிட்டி மாசக்ஸிய பார்வையிலிருந்து அறிகிறார்.

 

ஒருரினச்சேர்கைளர்களின் மாக்ஸியத்தையும்  காலனித்துவ இனவாதம் பற்றியதுமான மாக்ஸியத்தையும் எடுத்து மிக நவீன முறையில் பரிசீலனை செய்கிறார். அதன்போது மாக்ஸியர் அல்லாதவரின் கருத்துகளையும் எடுத்துக் கொள்கிறார். உதாரணத்துக்கு -(Achille Mbembe’s necropolitics and Jasbir Puar’s terrorist assemblages)

 

இந்த அத்தியாத்தில்- போஹரின்  பலதரப்பட்ட புரட்சிகரமான எழுத்துகளுடனான அற்புதமான பரீட்சையத்தையும் ஆற்றலையும் காட்டுகிறது. மரபார்ந்த கருத்தை எடுத்து ஒவ்வொன்றாக உடைத்துப் பார்ப்பதன் மூலம் அது வேறுபட்ட பார்வையை ஏற்படுத்துகிறது. இந்த இடத்தில் இது பொருத்தமாக இருக்கிறது. ஏன் என்றால்- பிரச்சனைகளை ஒடுக்கப்பட்டவர்களின் நிலையிலிருந்து  வரலாற்றைப் பார்ப்பதாக அமைக்கிறது. இதிலிருந்து  இனம்-பாலியல் என்பவற்றுடன் வர்க்கத்தை ஆராயும் போக்கைச் சிலர் மட்டுமே செய்திருக்கின்றார்கள்.

 

 

அதற்கு ஆசிரியர் நான்கு உதாரணங்களை எடுக்கிறார்.- வர்க்கத்தில் மரபார்ந்த சொல்லாடல்களில் தொங்கி கொண்டிருப்பவர்களின் விடயங்கள் ஏன் பற்றாக்குறையாக இருக்கிறது என்பதுடன் இன்றைய மார்ஸிய போக்கின் பற்றாக்குறையாக இருப்பதையும் காட்டுகிறார். சுரண்டல் என்ற காரணி மட்டும் இந்த முதலாளித்துவ பொருளாதாரத்தை விளக்க போதாது -இது பல்வகைப்பட்டதாக இருக்கிறது. அது இயங்கிக் கொண்டு ஒன்றை ஒன்று பலப்படுத்திப்  பரவிக் கொண்டு போகிறது. இப்படி  எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்க வேண்டியுள்ளது என்கிறார்.

 எல்லாம் ஓரிடத்தில் உருவானது என்பதும், பல்வேறு ஒடுக்குமுறைகளும் ஒன்றோடு ஒன்று செயற்படுகிறது என்பதற்கும் மிக அருகாமையில் இருக்கிறது. இதைத்தான் முதல் அத்தியாயத்தில் ஆசிரியர் சொல்லியிருக்கிறார். இன்டசெக்ஸனாலிட்டி கோட்பாடு அதிகார படிநிலையை மறுக்கின்ற ( ஒடுக்கு முறைப் படி முறையை- வர்க்கம் உட்பட) ஒன்றாகும். எவ்வாராயினும் மாக்ஸியமும் பெண் ஒடுக்குமுறையும் என்ற புத்தகத்தில் Lise Vogel முன்வைத்த  ‘unitary theory’ மற்றும் Cinzia Arruzza, David McNally and Sue Ferguson ஆகியோர் முன் வைத்த சமூக மறு உற்பத்தி கோட்பாட்டுடன் இது முரண்படுவதாகக் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

 

Unitary theory வர்க்கத்தையும் ஒடுக்கு முறையையும் கோட்பாடளவில் ஒன்றிணைக்கக் கூடியது. ஆனால் மார்க்ஸிய பெண்ணிய கோட்பாட்டின் வழி சமூக மறு உற்பத்தி தொடர்பான பெண்களின் ஒடுக்குமுறையைப் பகுப்பாய்வு செய்கிறது.

 

ஒருபிரச்சனையை ஒட்டுமொத்தமாகவும் முழுமையாக இணைந்ததாகவும் பார்க்க வேண்டும். சமூக மறு உற்பத்தி கோட்பாட்டின் பொதுவான பார்வை என்ன வென்றால். ஒடுக்குமுறை  என்பது முதலாளாலித்துவத்தை ஒரு வரலாற்று அமைப்பாகப் புரிந்து கொள்வதும் அது இன்று இனவெறி குடும்ப ஆணாதிக்க செயற்பாட்டின் மூலம் முன் நிலைக்கு வந்திருக்கிறது- அதேநேரம் அதைக் கொண்டே தாக்குப் பிடிப்பதாகவும் இருக்கிறது.

 

ஆசிரியர்- அருஸ்ஸாவை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டு மேற்கோள்கள் காட்டுகிறார்.  இனவெறி, காலனித்துவம்,  மற்றும் heteropatriarchy, and/or sexism  போன்றவற்றுக்கு முதலாளித்துவ அமைப்புக்கு அப்பால் விளக்கம் தேவைப்படுகிறது. unitary system போதாமைகள் இருப்பதாகக் கூறினாலும் கூட equi primordiality போதுமானது  சரியானது  அதற்கு மாற்றானது என்பது எப்படி என்று விளங்கப்படுத்தப்படவில்லை.

 

6ஆம்7 ஆம் அத்தியாயங்களில் இன்டசெக்ஸனாலிட்டி மாரக்ஸியம் பற்றிய விரிவான பார்வை ஒன்று வைக்கப்படுகிறது. அத்தியாம் 6 இல் செல்லப்படுகின்ற தத்துவார்த்த  இயங்கியல் அடிப்படை புத்தகத்தில் முக்கியமான பகுதியாக உள்ளது.


அரசியல் விஞ்ஞானியாகிய George Ciccariello-Maher உடைய   Decolonising Dialectics என்ற  கோட்பாட்டை  ஆதாரமாகக் காட்டி செல்லவருகிறார்.  மார்க்ஸியர்கள் சொல்கின்ற இயங்கியல் கோட்பாட்டில் இன்டசெக்ஸனாலிட்டி என்பது ஏற்கனவே உள்ள ஒன்றுதான் என்கிறார்.


இயங்கியலில் இன்டசெக்ஸனாலிட்டி பற்றாக்குறையாக இருக்கிறது. நாம் வலிந்து பிரச்சனைகளை ஒன்றோடு ஒன்று சேர்க்கப்படவேண்டும் என்பதை விட ஒன்று இன்னும் ஒன்றை இயல்பிலேயே சேர்த்தே இருக்கிறது என்கிறார். சமூகத்தில் உள்ள பிரச்சனைகளின் நெகிழ்வுத்தன்மைகளையும் தெளிவற்ற போக்கையும் இன்டசெக்ஸனாலிட்டியே சிறப்பாக காட்டுகிறது. இது மாரக்ஸிய சிந்தனையின்  பெரும்பகுதியுடன்  சாதகமாகவே அணுகுகிறது என்கிறார்.

 

 

அத்தியாயம் 7 இல் ஒற்றுமையைப் பேசுகிறது: ஆனால் இந்த பகுதிதான் நடைமுறையில் இருக்கின்ற மாக்ஸியத்தின் மீது ஈவிரக்கமற்ற மார்க்ஸிய விமர்சனமாக வைக்கிறார். பொஹ்ரர் ஒரு ‘பொதுவான அடிப்படையில்’ நாம் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்பதுடன் கடுமையாக முரண்படுகிறார். இந்த பொதுவான ஒடுக்கு முறையின் கீழ் ஒன்றிணைவது பற்றாக்குறையானது  என்றும்- எங்களது அனுபவங்களை ஒன்றோடு ஒன்று இணைத்துப் பார்க்க முடியாமல் அது பிரித்துவிடுகிறது என்கிறார். 

 

அதாவது ஓரின பால் ஈர்பாபளர் ஒருவருக்கும் தொழிலாளி ஒருவருக்கும் இருக்கும் உணர்வை இணைக்க முடியால் இருப்பவற்றை ஆய்வு செய்ய போதாமையாக உள்ளது. எனவே  திட்ட வட்டமாக எமக்குள் உள்ள வேறுபாடுகளை ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொண்டுதான் இணைவைச் சிந்திக்க வேண்டும். அல்லாமல் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துப் பொதுமைப்படுத்த விளையும் போது ஒற்றைத் தன்மையினால் எல்லோருடைய அனுபவங்களையும் ஒரே தராசில் வைத்துச் சமப்படுத்தும் அபத்தம் நிகழும்.  

 

இவ்வாறு அனுபவங்களை பொதுமைப்ப படுத்தல் புரட்சியாளர்களை விட்டு வெளியேறும் அபாயத்தை ஏற்படுத்தும்.  ஒடுக்குமுறையில் இரண்டாம் பட்சமானது அல்லது அதையும் விட குறைந்த ஒடுக்கு முறை அல்லது இவை ‘அக முரண்பாடுகள்’ என்று சொல்வதன் மூலம் ஒடுக்கு முறைகளையும் அம்மக்களையும் ஓரத்திற்குத் தள்ளிவிடுகிற செயற்பாடுகள்.

 

இது பொது அனுபவம் என்பதில் ஒரு எதிர் மறையான தாக்கத்தைத்தான் ஏற்படுத்தும் என்றாலும் கூட எமது ஒற்றுமை என்பது முதலாளித்துவத்தை ஒழிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திலிருந்து வருகிறது. தொழிலாளர் வர்க்கத்தின் மாக்ஸிய பார்வை என்பது முணுமுணுப்பதோ புலம்புவதோ அல்ல. பாட்டாளி வர்க்கப் பிரச்சனையை வரலாற்றுப் பார்வையில் வைத்து உடைத்து ஒழிப்பதாகும்.


ஆக குறிப்பாக இவற்றை எல்லாமம் மறுத்து அரசியல் ஒன்றிணைவை வேண்டுகின்றன. உதாரணத்துக்கு நான் பெண் என்ற அனுபவத்தை மறுத்துவிட்டு ஒற்றைப் புள்ளியில் இணையவேண்டும் என்பதாகும். ஒருவருடைய முரண்பாடுகள் அல்லது வேறு பட்ட அனுபவங்கள் கவனமாக பரீசிலிக்கப்பட வேண்டியவை. 

 

ஆனால் மரபார்ந்த மாக்ஸியர்கள் சொல்கின்ற ‘வர்க்க நலங்கள்’ என்று சொல்கின்ற போக்குடன் பொஹ்ரர் ‘முழுமையாக’ மறுப்பதன் மூலம் ஒரு முரண் நிலை உருவாகிறது. இந்தப்போக்கை வர்க்க குறுக்கல் வாதம் என்று சொல்ல முடியாமல் இருக்கிறது. ஏன் என்றால் அதன் அடித்தளம்  மாரக்ஸினுடைய அந்நியமாதலில் வேரூண்டி  உள்ளது. பாட்டாளி வர்க்கம் எதிர் நோக்குகின்ற பிரச்சனையானது வெறுமனே அவர்களுடைய சுரண்டல் தொடர்பானது அல்லாமல் அந்நியமாதல் தொடர்பானதும். 

 

மார்க்ஸினுடைய சுதந்திரம் பற்றிய கூற்றுப்படி  முதலாளித்துவம் எம்மை அடிப்படைத் தேவைகளிலிருந்து(உணவு, ஓய்வு, தங்குமிடம்) அந்நியப் படுத்திக் கட்டுப்படுத்துகிறது. நாம் அதைப் பெறுவதற்காக அதனிடத்தில் எம்மை ஒப்புக் கொடுக்க நிர்ப்பந்திக்கச் செய்கிறது.

 

எனவே எளிமையாகக் கூறுவதானால் : மனிதர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவர். ஆனால் முதலாளித்துவ சமுதாயத்தில் வேலை செய்தால் மாத்திரம்தான் உணவு கிடைக்கிறது. உழைப்பு சுரண்டல் என்பதை விட  வேலைக்குப் போனால்தான் சாப்பாடு என்ற நிலை.  அதாவது அந்நியமாதலின் பொதுத்தன்மையில் தொழிலாளர்களை ஒன்றிணைக்கிறது. ஆக முதலாளித்துவ சமூதாயத்தில் மனிதர்களின் சுதந்திரம் பற்றிய மேசமான நிலை. எல்லா  வர்க்க சமூகங்களிலும் இந்த சுரண்டலுக்கு முகம் கொடுப்பவர்கள் இத்தகைய வாழ்கையையே வாழ்கின்றனர்.

 

 எனவே எமது சுதந்தரம் என்பதே உழைப்பில் ஈடு படுவதன் மூலமே உருவாகிறது. இந்த வருமானத்தைக் கொண்டு ஒருவர் பாதுகாப்பற்ற வீட்டிலிருந்து ஒரு பாதுகாப்பான வீட்டிற்கும்- ஒடுக்கு முறை குறைந்த நாடு ஒன்றுக்குத் தப்பிப் போவதற்கும் அல்லது மன உளைச்சலைச் சீர் செய்ய வைத்தியரிடம் போவதிற்கும் போதுமானதானவே அது உள்ளது.

 

இதுதான் எமது வாழ்வில்  திருப்தியற்றதாக இருப்பினும் கூட இது எமது பொதுவான தன்மையில் பாட்டாளி வர்க்கத்தை உற்பத்தி சாதங்களில் இருந்து விடுவிப்பதாகவும் இருக்கிறது. எனவே உழைப்பு நேரத்தை விற்றுதான் வாழவேண்டும் என்ற அனுபவமும் அழுத்தங்களும் எல்லோருக்கும் பெரும்பாலும் ஒரே மாதிரியானதாக இருக்கிறது. இத்தகைய சுதந்திர மறுப்பு என்பது சுரண்டல் என்பதை விட வேறு பட்டதாகவும் மிகவும் தீர்க்கமானதாகவும் இருக்கிறது என்கிறார்.


ஒருவர் சுரண்டப்படாமல் தன் உழைப்பை விற்காமலும் கூட இருக்கலாம். என்றாலும் கூட, அது அவருக்கு வேறு வகையான வாழ்கை நிலையை உருவாக்கும். பிறரிடம் கெஞ்கி மன்றாடி உதவிகள் பெற்று அல்லது அரசாங்க நலத்திட்டங்களில் வாழ்பவர் தன்னை பலவிதமான சிரமங்களுக்கும் உட்படுத்தி தமது நலன்களைச் சுருக்கிக் கொண்டு வாழ நிர்ப்பந்திக்கப்படுவர். எனவே தொழிலாளர் வர்க்கத்தில் ஒரு அங்கத்தவராக இருப்பது என்பது அவரின் படைப்புத்திறனைக் கட்டுப்படுத்தும் ஒன்றாகும். தொழிலாளியாக இருப்பது என்பதை மறுப்பது என்பது எம்மை மட்டுப்படுத்தப்பட நிர்ப்பந்தங்களுக்குள் வாழ்வதாக வைத்திருக்கும்.

 இது பொது அனுபவம் என்பதில் ஒரு எதிர் மறையான தாக்கத்தைத்தான் ஏற்படுத்தும் என்றாலும் கூட எமது ஒற்றுமை என்பது முதலாளித்துவத்தை ஒழிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திலிருந்து வருகிறது. தொழிலாளர் வர்க்கத்தின் மாக்ஸிய பார்வை என்பது முணுமுணுப்பதோ புலம்புவதோ அல்ல. பாட்டாளி வர்க்கப் பிரச்சனையை வரலாற்றுப் பார்வையில் வைத்து உடைத்து ஒழிப்பதாகும். ஆசிரியரின் அக்கறை என்பதும் அரசியல் போராட்டத்தின் உலகளாவிய தன்மையை வலியுறுத்துகிறது.

 

எமக்குள்ளும் எக்கிடையிலும்  நடைபெறுகின்ற அனைத்து வகையான சுரண்டல் மற்றும் ஒடுக்கு முறைகளை அறிந்து அதில் பங்கு பற்றுவதன் மூலமே ஒற்றுமை என்பது சாத்தியமாகும். யாரோ ஒருவரின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் அதேவளை எம்முடைய எல்லோரினதும் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதிலிருந்தே அந்த ஒற்றுமை உருவாகிறது.

 

 

ஒரு வர்க்க அமைப்பை தலைகீழாக மாற்றினால்  இந்த எல்லா வகை ஒடுக்குமுறைகளும் அதன் தீவிரமும் இப்படியே இல்லாது போய்விடும் என்பதில் தனக்குத் தெளிவற்ற தன்மை இருக்கிறது. என்கிறார்.

இந்த புத்தகம் மிக முக்கியமானது ஏன் என்றால் முன்னர் எவரும் செய்யாத ஒரு விடையத்தைச் செய்திருக்கிறது. அதாவது இதுவரை  மாக்ஸியத்தையும்  இன்டசெக்ஸ்னாலிடியைம் எதிரெதிர் நிலையில் நிறுத்தி போட்டியான போக்கையே உருவாக்கியிருந்தனர். ஆனால்  இந்த புத்தகம் அதைத் தவிர்த்து இருக்கிறது. வழமையாகச் செய்வதைச் செய்யாமல் பல பரந்தளவிலான தேடலை மேற்கொண்டு மாக்ஸிய-இன்டசெக்ஸனாலிட்டிபப் பார்வையை ஏற்படுத்தியுள்ளது.

 


(எமது வாராந்த உரையாடலில் எமது தோழர்களுடன் உரையாடப்பட்ட கட்டுரை)

                                                                                                               -பாரதி சிவராஜா-


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்ப வேண்டிய அவசியமில்லை...

கர்ணன்

இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை சமூக நீதிக் கோரிக்கை.