இடுகைகள்

தேடல் உள்ள வரை வாழ்வில் பொருளிருக்கும்...

படம்
  நம்மவர்களின் திமிர் குணம் என்பது அறியாமையிலும் நான்தான் முதலானவராக இருப்பேன் என்பதைத் தாம் அறியாமலே காட்டி விடப் படாத பாடு படுவதுதான். ஒரு விடயத்தில் நாம் பெற்றிருக்கின்ற அறிவு என்பது குறைவானதாக இருக்கலாம் அது தரம் குறைவானது ஒன்றுமில்லை. ஆனால் அந்த விடயமே நாம் அறிந்தளவானதுதான் என்பதுதான் ஆபத்தானது. அவ்விடயம் தொடர்பான நீண்ட வாசிப்பும் தேடலும் உரையாடலும் கொண்டவர்களும் நம் மத்தியில் இருப்பார்கள் என்பதை நாம் உணர வேண்டும். அது அறிவை வளர்ப்பதற்கானப் பண்புகளில் மிக முக்கியமானது. அப்படியல்லாமல் நாமறிந்தவைதான் எல்லாம் என்று நிரூபிக்க மாற்றி மாற்றி நகர்தலின்றி விவாதிப்போமானால் எம்மை நாமே அது தொடர்பாக அம்பலப்படுத்துவதும் முதல் நிகழ்வாகிப் போகும். நமக்குள் இருக்கின்ற பலவகையான மேட்டிமைகள் (ஆண், சாதிய, படிப்பு,அந்தஸ்து, பிரதேச,மைய, வர்க்க,இன) தனங்கள் நம்மத்தியில் நம்மை விடவும் அறிதல் பெற்றவர்கள் இருப்பார் என்பதை ஒத்துக் கொள்ள இடம் கொடுப்பதில்லை. மிகச் சாதாரண உழைக்கும் விளிம்பு நிலை மக்களிடம் அறிவு சார்ந்த சமூக மாற்றம் சார்ந்த பிரச்சாரங்களை இலகுவாகச் செய்துவிட முடியும் அளவு மேற் சொன்ன தடிப்ப...

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்ப வேண்டிய அவசியமில்லை...

படம்
  ஒடுக்குமுறையை எதிர் கொள்கின்ற மக்கள் அல்லது பிரிவினர் யார்? அவர்கள் எதிர்கொள்ளுகின்ற ஒடுக்குமறை வன்முறைகள் என்ன. அந்த மக்களுக்கான சமூக த்ததுவ கோட்பாடுகள் பேசுகின்ற அரசியல் அறம் என்ன? அந்த சமூகம் அல்லது அந்த பிரிவு தனக்கு இழைக்கப்பட்ட சட்ட அநீதியை, அதற்கான சமூக நீதியை, எப்படி பெறுவது அல்லது பேசுவது? குறைந்தப்பட்சம் எதிர்வினையாற்றுவது என்ற எந்த ஈர வெங்காய புரிதலும் இல்லாமல் சமூகத்தில் நாங்களும் 'பெரிய பருப்பு' என்ற பொரியண்ணர் மன நிலையி அலம்பல் புலம்பல்களக்கு பதில்...   இதனை நாம் வெறுமனே தனிநபருடைய பிரச்சனையாக குறுக்க நாம் ஒன்றும் 'உச்சு அமைப்பினர் கும்ப அரசியல்' செய்பவர்கள் அல்ல. ஏனெனில் அண்மையில் ஒரு குறுகிய காலத்தினுள்ளேயே அடுத்தடுத்த சில ஆண் 'புரட்சியாளர்களது' சாயம் வெளுக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் வெளுக்க வேண்டிய சாயங்களும் இருக்கவே செய்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் உள்ள ஒரு புரட்சியாளர் பெண்களை காதல் என்ற பெயரில் பாலியல்ரீதியாக சுரண்டியது (abuse பண்ணியது) பற்றியதொரு சர்ச்கை நடைபெற்றது. ஆனால் இவை எதுவுமே உரிய கவனத்தைப் பெறாமல் அவ்வமைபுக்குளேயே ...

They say it is love. We say it is unwaged work

படம்
எனக்கு வலிக்கிறது என்றால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் என்று ஒவ்வொரு வீட்டிலும் ஊதியமற்று மாடாய் உழைத்துத் தேயும் பெண்ணும் இந்த முதலாளித்துவ சமூகத்தையும் அதன் வழி எந்த வித குற்ற உணர்வுகளும் இன்றி சௌகரியம் அனுபவிக்கும் ஆண்களையும் பாரத்துக் கேட்க வேண்டியுள்ளது. இந்த அடிப்படையில் இடது சாரிய பெண்ணிய ஆய்வாளர்கள் பலரின் கட்டுரைகளை எங்கள் வாராந்த வாசிப்புக்கும் உரையாடலுக்கும் எடுத்துக்கொண்டோம். அந்த வகையில் செல்வியா பெட்ரிக் எழுத்துக்கள் ஆய்வுகள் மிக முக்கியமாக இருந்தன. அது தொடர்பான வாசிப்பின்போது என்னளவிலும் எம் தோழர்கள் மட்டிலும் புதிய விடயங்களாகவும் தமிழில் நாங்கள் இது வரை வாசிக்காத அல்லது எங்களுக்குக் கிடைக்காத விடயங்களாகவும் இருந்தன. வீட்டின் வேலை அது கொண்டிருக்கின்ற சமூக நிலை போன்றன பற்றிய பெண்ணியப்பார்வையில் மிகக் காத்திரமாக உறுதியாக ஆய்வு தளத்தில் பேசுகின்றன. இத்தகைய உரையாடல்கள் தமிழில் இத்தனை ஆண்டுகள் கழித்தும் வர வில்லை அல்லது மட்டுப்படுத்தப்பட்ட தளத்தில் நிகழ்ந்திருக்கிறது என்பது இடது சாரிய பெண்ணிய வாதிகளான எமக்கு மிகவும் கவலை தரும் விடயமாகும். இது எம் சமூகத்தில் உள்ள முற்போக்கு இ...

அரசியல் பிரதிகளும் அரசியல் நீக்கம் பெற்ற பிரதிகளும்

படம்
  அண்மையில் திரள் என்ற குழுவினர் நடத்திய முதல் நிகழ்வு ஒன்றில் எடுத்துக்கொண்ட தலைப்பு 'தமிழ் இலக்கியத்தில் அரசியல் பிரதிகளும் அரசியல் நீக்கம் பெற்ற பிரதிகளும்' என்ற இணைய வழி கலந்துரையாடல் ஆகும். அதே போன்ற மற்றுமொரு நீண்ட கால பேசு பொருளாக இருக்கும் விடயம்தான் படடைப்பிலக்கியத்ததில் அழகியல் தொடர்பானதும். நமக்கும் இலக்கியத்துக்கும் சொட்டாகுமா ஆகாதா? நாம் எல்லாம் இலக்கியம் தெரிந்தவர்களா தெரியாதவர்களா? இலக்கிய அழகியலில் சிலிர்த்துக் கிடக்க இரசனைப் பெற்றவர்களா அற்றவர்களா? இலக்கியம் தெரியாது என்றாலும் தெரிந்தது போல் காட்டிக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா? அல்லது 'எமக்குத்தான்' தெரியும் என்று படம் காட்டுபவர்களை விட நமக்குக் கொஞ்சம் அதிகமாகத் தெரியுமா என்றெல்லாம் தெரியாமல்தான் தற்செயலாக அந்த இணைய வழி நிகழ்வில் பார்வையாளராகக் கலந்து கொள்ளவேண்டி வந்தது. அழகியல் தொடர்பான வாதங்கள் நீண்ட கால விவாதப் பொருள்தான். அது 'சுட்ட' பழம் 'சுடாத' பழம் (நாவல்) சர்ச்சை 'அழகியல்' சர்ச்சையாக மாறியுள்ள இன்றைய காலம் முதல் எண்பதுகளில் ஈழத்து இலக்கிய விமர்சனத்தில் அழகியல் பற்றிய சர்ச்...