இடுகைகள்

பிற்போக்குத்தனங்களும் - தப்பெண்ணங்களும் : ஒரு அலசல்!!

படம்
நில உடைமை சிந்தனைகள்; பிற்போக்குத்தனத்தைப் பீற்றுவது’ - தப்பெண்ணங்களை(prejudice) என்றால் என்ன? (இது தொடர்பில் முன்தினமும் எழுதியிருக்கிறேன்). திரும்பவும் எழுதத் தூண்டியிருக்கிறது அண்மையில் நடந்த நடக்கின்ற சம்பவங்களால். வரலாற்றுப் பொருள்முதல் இயக்கவியல் பொருள்முதல்வாத சமூக அறிவியலின் படிநிலை படி பார்த்தால், நில உடைமையான கூறுகள், சிந்தனைகள், செயற்பாடுகள் பிற்போக்கானதாகவும், சக மனிதர்களை ஒடுக்கப் பயன்படும் போது அது மோசமாக எதிர்க்கப் பட வேண்டிய அடக்குமுறையாகவும் கருதப்படுகிறது. பிற்போக்குத்தனங்களை அல்லது பகுத்தறிவுக்குப் பொருந்தாத விடயங்களை தூக்கிப் பிடிக்கின்ற சமூக அரசியல் நிலைகளும் உள. அதை வேறு விதமாகவே அணுக வேண்டியும் உள்ளது. இப்போது நடந்து கொண்டிருக்கிற விடயம் ஒன்றுக்கு வருவோம். உலக கிண்ணத்தின் மீது அவுஸ்திரேலிய விளையாட்டு போட்டியாளர் காலை தூக்கிப் போட்டுக் கொண்டு இருக்கின்ற படம் அது. இது ஏன் எம் சமூகத்தில் இருப்பவர்களால் ஒரு வகையான பாராட்டைப் பெறுகிறது என்று கூர்ந்து பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அப்படி பார்க்க முடியாதவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியும் போது அதிர்ச்சி

யார் பாசிஸ்டுகள்- யார் பயங்கரவாதிகள்:

படம்
 யார் பாசிஸ்டுகள்- யார் பயங்கரவாதிகள்: பொதுவான பார்வையில் பொது மக்களின் படு கொலைகள்/ வன்முறைகள் மிக மோசமான கொடூர செயற்பாடுகள்தான். ஆனால் சொந்த மண்ணின் விடுதலைக்காகக் காலமெல்லாம் தவிக்கின்ற, உலக நீதி மையங்களால் திட்டமிட்டு ஒதுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களுடைய எதிர் வினை செயற்பாடுகள் வெறும் படுகொலை கணக்கில் சேர்த்து விட முடியுமா? கமாசின் படுகொலைகளும் இஸ்ரேலின் கொலைகளும் ஒன்றுதான், இரண்டும் வன்முறைதான் என்று நிறுவ முயல்வது அரசியல் குருட்டுத்தனம் மட்டுமல்ல உள்ளார்ந்த இருக்கின்ற இஸ்லாமிய வெறுப்புணர்வும்தான். முதலாளித்துவ சன நாயக அரசுகள் நேரடியான அடக்குமுறை கருவிகளையும் மறைமுகமான சித்தாந்த வன்முறை கருவிகளையுமே கொண்டு மக்களை ஆளுகின்றன. இஸ்ரேல் அரசின் பயங்கரவாதமும் கமாசின் விடுதலைக்கான பயங்கரவாதமும் ஒன்றல்ல. இடதுசாரிகள் என்பவர்களால் ஒருவகை விலாங்கு மீன் அரசியல் பேசப்படுகிறது. இவர்களுக்குப் புலம் பெயர் தமிழர்களுக்குத் தலையையும் இங்கிலாந்து மேட்டுக்குடி தொழிலாளர் வர்க்கத்திற்குப் பாலஸ்தீன விவாகரத்தில் வாலையும் காடி பிழைக்க வேண்டிய அரசியல் வறுமை உள்ளது. இவர்கள் ஹமாசையும் விடுதலைப் புலிகளையும

வெந்து தணிந்தது காடு- மதி சுதா

படம்
  ம தி சுதாவுடைய வெந்து தணிந்து காடு 27/06/2023 அன்று லண்டனில் திரையிடப்பட்டது. நாளை 09/07/2023 மீண்டும் திரையிடப்பவிருக்கிறது. திரைத்துறை தொடர்பில் எனக்கிருந்த இயல்பான ஆர்வம் ஒரு பக்கமிருந்த போதும் படம் தொடர்பில் ஏற்பட்டிருந்திருந்த சர்ச்சை மற்றும் சில சோசியல் ஊடகங்களில் இப்படம் தொடர்பில் பேசப்பட்ட ஆச்சரியப்படத் தக்க கருத்துக்கள் படத்தைப் பார்த்தாக வேண்டும் என்று தூண்டியது. மதிசுதாவுடைய சில குறும்படங்களைப் பார்த்து அவருடன் கருத்து பரிமாறிக் கொண்ட நட்பு போன்றன நானிருக்கும் இடத்திலிருந்து மிகத் தொலைவில் இப்படம் திரையிடப் பட்ட போதும் பார்த்தே ஆக வேண்டும் என்று சென்று பார்த்தேன். இங்குத் திரைப்படத்தைத் திரையிட்டவர்கள் அதற்கான திட்டமிடல்களை முன் கூட்டியே ஏற்பாடு செய்யாமை படத்தை ஆர்வத்துடன் பார்க்கச் சென்றவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் படம் பேசப்பட வேண்டிய விரிந்த தளத்தையும் அது மட்டுப்படுத்தியிருக்கக் கூடும். படத்திற்குள் வருகிறேன். படம் பார்க்கத் தொடங்கும் ஒரு விநாடிக்கு முன் கூட, நான் எண்ணியிருக்க வில்லை படம் தொடர்பில் கருத்து பகிர்வேன் என்று. படம் ஆரம்ப காட்சியிலே

சுயமரியாதை திருமணம் என்ற பெயரும்; பாலிய அயோக்கியனும்...

  குறிப்பு: இந்த அறிக்கை 16.08.2021 அன்று  முற்போக்கு வெளியை பெண்களுக்கு பாதுகாப்பாக மாற்றுவதற்காக செயற்படும் கூட்டமைப்பின் சார்பாக வெளியிடப் பட்டடு கையெழுத்திடப்பட்டது. அதை ஆவணப் படுத்தும் முகமாக இதில் மீள் பதியப்பட்டுகிறது. அதனுடைய முக நூல் இணைப்பு இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------- முற்போக்கு முகமூடிகளுடன் பெண்கள் மீது செய்யப்படும் சுரண்டல்களுக்கு எதிராக அணி திரள்வோம் தம்மை முற்போக்குவாதிகளாகவும் புரட்சிகரச் சக்திகளாகவும் வெளியுலகிற்குக் காட்டிக் கொள்ளும் சில போலிகளின் முகத்திரைகளைக் கிழித்து அம்பலப்படுத்துவது சமூக மாற்றத்தை நோக்கி உழைக்கும் அனைவரினதும் கடமையாகும். உருவில் மனிதனாகவும் செயலில் மிருகமாகவும் இருப்பதை மாற்றி மனித தன்மையுடைய மனிதத் சமுதாயத்தை உருவாக்குவதே எனது லட்சியம் என்றார் தந்தை பெரியார். தாம் வரிந்து கொண்டதாகச் சொல்லப்படும் இடதுசாரிய பெரியாரியக் கொள்கைகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு தாம் அணியும் மேற்சட்டைகளில் மாத்திரம் தம்மை

கோணங்கியுடைய பாலியல் குற்றங்களும் பதட்டமடையும் ஜெ.மோகனும்

படம்
  கோணங்கியுடைய பாலில் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் தமிழ் இலக்கிய உலகில் இருப்பவர் மனங்களில் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அச்சம் என்னவாக இருக்கிறது என்றால் இந்த இலக்கிய ஆசான்களின் மீது பக்தர் கூட்டத்தின் பக்தியில் பாதிப்பு வந்து விடுமோ என்ற பதட்டமாகவே நான் பார்க்கிறேன். அதனால்தான் பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சாட்டும் அவசரத்தின் அவசியம் அதில் இருப்பதாகத்தான் இருக்கிறது. கோணங்கியுடைய  பாலியல் நடத்தை தொடர்பில் பல இளைஞர்கள் சமூக வளைத்தளண்க்களில் தொடர்ச்சியாக தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அது தொடர்பில் கூட்டறிக்கையும் வெளிவந்துள்ளது. கூட்டறிக்கை: எந்த ஒரு அதிகார சக்திகளுக்கும் பக்தர் கூட்டம் அவசியமான ஒன்று. அந்த வட்டத்திற்குள்ளேயே வட்டமடித்து அதற்குள் வெளியே சிந்திக்காமல் வைத்திருப்பதில்தான் அவர்களது கிரீடம் பாதுக்கப்படுகிறது. இது இலக்கிய படைப்பாளிகள் என்று தமக்குத் தாமே ‘படைப்புக் கொள்கையை’ புகழாகச் சூட்டிக் கொள்கின்றவர்களிடமும் கொஞ்சமும் குறைந்ததில்லை. பாலியல் சுரண்டல், பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் ஏமாற்று செய்பவர்கள் மிக மோசமான சமூக விரோதிகள் என

சந்தர்ப்பம்! சந்தர்ப்பம்!! பிழைப்பு பிழைப்பு வளர்ச்சி! வளர்ச்சி!!

படம்
  எம்முடைய நேர்மை, அறம், சமூக-அறிவு ஏற்படுத்திய அரசியல் புரிதல், தன்மானம், சூடு சொரணை, பகுத்தறிவு, சக மனித நேயம், போன்ற உணர்வு- பண்புகளில் நாம் சருக்கிடாமலும் விலகிடாமலும் இருப்பதற்கா வாழ்வதே வாழ்வு என்று வாழ்பவர்கள் நாம். பொய்-புரட்டு எவர் முதுகை சொறிந்தாலாவது எமக்கான இடத்தை உருவாக்கிக் கொள்வது, எவரையாவது குப்புறத் தள்ளி வீழ்ந்தவர் பிடரியில் ஏறி நின்று எம் நிலைகளை எட்டுவதற்கு முயல்வது, எவரையாவது காக்கா பிடித்து உண்மைக்குப் புறம்பாக நடந்து பிழைத்துக் கொள்வது என்பவை எமக்குச் சுட்டுப் போட்டாலும் வராது. அது போக எம்மை இத்தகைய பேர் வழிகள் என்று யாரும் எண்ணி விடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருப்போம். அதிகாரத்துக்கு சொறிந்து பிறரை வீழ்தி எமது வளர்ச்சி இருந்து விடக் கூடாது என்பத்திலும் எம் மன நிம்மதியும் எம் ஒட்டு மொத்த வாழ்வின் பொருள் இருப்பதாக வாழ்பவர்கள்- அப்படி வளர்க்கப்பட்டவர்களும் கூட.. அதுவல்லாமல் யாராவது எம்மை கருதி விடும் சந்தர்ப்பத்தில் மேற் சொன்ன அத்தனையும் சுயம் கொண்டெழுந்து கோபப்படும். இல்லையே, நாம் அப்படி இல்லையே! என்று உடல் பொருள் 'ஆவி..' எல்லாம் கொதிக்கும். எம்

பாலியல் தொழில் செய்வோருக்கான சட்ட பாதுகாப்பு - உச்ச நீதி மன்றம்..

படம்
பாலியல் தொழில் செய்வோருக்குச் சட்டத்தின் கீழ் சமமான மரியாதையும் பாதுகாப்பும் உண்டு. அவர்களது குழந்தைகளும் கண்ணியத்துடன் நடாத்தப்பட வேண்டும். என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறிப்பாகக் காவல் துறையினர் இவர்கள் மீது நடத்துகின்ற மோசமான மனிதநேயமற்ற விசானைகளை கடுமையாகக் கண்டிக்கும் படியாக இந்த தீர்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது. மே 19 வெளியாகியிருக்கும் இத்தீர்ப்பு தன் விருப்பத்தின் பேரில் இத் தொழிலில் ஈடு படுபவர்கள் குற்றவாளிகள் அல்ல. மேலும் இதில் ஈடுபடுபவர்கள் பாலியல் புகார் மற்றும் வன்முறை தொடர்பாகத் தெரிவிக்கும் நிலையில் சக பெண்களுக்குப் போன்றே குற்றச்சாட்டை அணுக வேண்டும் போன்ற மிகப் பலமான அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த உச்ச நீதிமன்ற அரிப்பைத் தொடர்ந்து சிலர் பொதுத் தளங்களில் அவர்களின் ''புனித முற்போக்கு மன நிலையை'' வெளிப்படுத்துவதையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இதுதான் தொழில் இது தொழலில்லை என்பதும் 'உயர்ந்த தொழில் இது தாழ்ந்த தொழில்' என்று முடிவெடுக்கும் மன நிலையை ஒத்ததாகவே எனக்கு தோனுகிறது. ஒரு சமூகத்தின் ஏற்றத்தாழ்வில் சவுகரியங்களை அனுபவிக்